Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காங்கேசன்துறை, பருத்தித்துறை இறங்கு துறைகள்............
#1
காங்கேசன்துறை, பருத்தித்துறை இறங்கு துறைகள்
அமெரிக்க அரசினால் விரைவில் புனரமைப்பு
(ஆர். புஷ்பபரன்)

சுனாமி கடற்கொந்தளிப்பினால் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதும், தற்பேõது படையினரது பாவனையிலுள்ளதுமான காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை இறங்கு துறைகளை உடன் புனரமைக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட இவ்விரு இறங்குதுறைகளையும் பார்வையிட அமெரிக்க இராணுவ பொறியியல் பிரிவின் உயரதிகாரிகள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

தமது நாட்டு விசேட கடற்படை கப்பலில் இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகுகள் பாதுகாப்பு வழங்க இக்குழுவினர் காங்கேசன்துறை வந்திருந்ததாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதே வேளை இவ் இராணுவ பொறியியல் நிபணர் குழுவும் யாழ். மாவட்ட படைத்தலைமையினைச் சேர்ந்த சில அதிகாரிகளும் பலாலியிருந்து வாகனத் தொடரணி மூலம் பருத்தித்துறை இறங்கு துறையினை நேரடியாக வந்து பார்வையிட்டிருந்ததாக அங்கு பணியாற்றும் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆயினும் இந்நிபுணர்கள் குழு எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பதை தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆயினும் இவ் இறங்குதுறையை உடனடியாக புனரமைத்து தமது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதில் யாழ். மாவட்ட படைத்தலைமை கூடிய கவனமெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமாதானமுமில்லை சுனாமி உதவியுமில்லை என்ற நிலையில் தமிழர்;
நடவடிக்கை எடுக்காத அரசின் பிரதிநிதிகள் யாழ். வருவதில் அர்த்தமில்லை

Source: Virakesari
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)