Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சைபர் கிரைம்
#1
சைபர் கிரைம்: அதிகரித்து வரும் படித்த தாதாக்கள்!


சந்திப்பு : ரவிக்குமார்


விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனிதகுலம் சாண் ஏறுவதற்குள், சில குறுகிய மனம் படைத்த குள்ள நரிகளின் ஆட்டத்தால் முழம் சறுக்கிவிடும் அவலம் நேர்ந்துவிடுகிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், பெருகும் இணையவழிக் குற்றங்கள்.

தில்லிப் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் நடத்தியிருக்கும் பள்ளியறை விளையாட்டைச் சூட்டோடு சூடாக காமிரா செல்ஃபோனில் படமெடுத்து, தன்னுடைய பிரதாபத்தைப் பல மாணவர்களுக்கும் மின்அஞ்சலில் அனுப்ப, அதை இன்னொரு மாணவர் இணையச் சந்தையில் விற்றுவிட்டார். நாட்டின் தலைநகரத்துச் செய்தி இப்படி என்றால், மாநிலத்தின் தலைநகரத்தில் ஒரு நடிகையின் குளியலறைக் காட்சிகள் இணைய வெட்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன.

காமிரா செல்ஃபோன், இணையம், சாட்டிங்... என இந்த வசதிகள் எல்லாவற்றையும் அதிகம் பயன்படுத்தும் இளைய தலைமுறையினர்தான் இதனால் அதிகம் பாதிக்கவும் படுகின்றனர். இந்தப் "பிரச்சினைப் பூனைக்கு' அண்ணா பல்கலைக்கழகம், "காமிரா செல்ஃபோனுக்கு வளாகத்திற்குள் தடை விதித்து' மணி கட்டியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் செயல்படும் இணைய சேவை நிலையங்களில் உள்ள பிரத்யேகத் தடுப்பு அறைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார் அந்த மாவட்டத்தின் காவல் அதிகாரி. இதையெல்லாம் இன்றைய தலைமுறை எப்படி எடுத்துக்கொள்கிறது? இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான அவர்களின் பார்வை என்ன? சென்னை சமூகப்பணி மையத்தின் மாணவர்கள் சிலரிடம் கேட்டோம்.


ஹேமா: இன்றைக்கு முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வி தொடங்கிவிடுகிறது. பதிமூன்று வயதில் இன்டர்நெட், சாட்டிங் எல்லாம் தெரிந்துவிடுகிறது. நிறைய பெற்றோர்கள், "என் பொண்ணு மணிக்கணக்கா சாட்டிங் பண்றா' ன்னு பெருமைப்பட்டுக்குவாங்க. ஆனா, என்ன பண்றான்னு அவங்களுக்குத் தெரியாது. எதிலும் நல்லதும் கெட்டதும் இருக்கு. நிறைய பெண்கள் சாட்டிங்கில்தான்

முதலில் ஏமாறுகிறார்கள்.

சுகன்யா: காமிரா செல்ஃபோன்கிற அடிப்படையையே என்னால ஏத்துக்க முடியல. அதை நிச்சயமா தடை பண்ணணும். குறிப்பா, ஆண் - பெண் சேர்ந்து படிக்கும் இடங்களில் இந்தத் தடையைக் கொண்டு வரணும். சாட்டிங் மூலம் உறவுகளை முடிவு செய்வது பெரிய அபத்தம்.

பவித்ரா: இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பள்ளி அளவிலேயே உருவாக்க வேண்டும். இன்றைக்கு அவரவர் வாழ்க்கை அவரவரிடம்தான் இருக்கு. சட்டங்களைப் போடுவது பெரிதல்ல; அதை நடைமுறைப்படுத்துவதுதான் பெரிய விஷயம். நன்றாகப் படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதிதான் இணையத்தில் சாட்டிங். உரையாடலின் போக்கு தவறாகப் போகும்போது அதற்குப் பதில் சொல்லாமல் விலகுவதுதானே நல்லது? இது படித்தவர்களுக்குத் தெரியாதா?

அமெரிக்க இணைய தளங்களின் உரையாடல் அறைகளில் யாராவது உங்களுடன் உரையாடும்போது விஷமம் செய்தால் உடனே புகார் செய்யும் வசதி உள்ளது. இது போன்ற வசதிகளை எல்லாத் தளங்களிலும் ஏற்படுத்தி, அதன் பயன்பாட்டையும் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

மணிகண்டன்: சுயக் கட்டுப்பாடு இருந்தால்தான் எந்த விழிப்புணர்வும் எடுபடும். என்ன சொன்னாலும் நான் கெட்டுத்தான் போவேன்னு முடிவோடு இருக்கிறவங்கள நாம எதுவும் பண்ண முடியாது. எய்ட்ஸ் பத்தி எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தும் அது பெருகிக்கிட்டேதானே இருக்கு!

சுவாமிநாதன்: காமிரா செல்ஃபோனை எந்த காலேஜிலும் அனுமதிக்கக் கூடாது. அதே போல், பல பிரவுசிங் சென்டர்களின் "காபின்கள்' குட்டி அறையைப் போன்றே இருக்கும். அந்தரங்கம் தேவைதான். அதற்காக அந்தரங்க உறவுகளுக்கே உதவும் அளவுக்கு அறைகள் தேவை இல்லைய!

லஷ்மிப்ரியா: வெகுசில நாடுகளிலேயே உள்ள தகவல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் இந்தியாவிலும் கடந்த 2000 -ஆவது ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்தத் தடைச் சட்டத்தில், நாட்டின் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுபிடித்தல், வெளிப்படுத்துதல், கலவரப்பட வைத்தல், இன்னொரு இணைய தளத்தில் தகவல்களை அளித்தல் போன்றவையே இணையவழிக் குற்றங்களாக இருக்கின்றன. பாலியல் ரீதியான துன்புறுத்தல், கொடுமைகளுக்கு இதில் இடமில்லை. இவற்றையும் சைபர்-குற்றங்களில் இந்தியா சேர்க்க வேண்டி அவசியமும், அவசரமும் இப்போது உருவாகிவிட்டது.

சேதுராம்: பயனுள்ள தகவல் தொடர்புத்துறை, படித்த சில தாதாக்களின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விஞ்ஞான வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதன் மூலம் நடக்கும் வக்கிரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. செல்ஃபோன் அத்தியாவசியமானது. வீட்டுக்கு ஒருவர் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. காமிரா செல்ஃபோன் பெருகினால் மாடல்கள், நடிகைகள் என்னும் மேல்மட்டத்தைக் கடந்து சராசரி வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை பெருகும்.

சேதுராஜ்குமார்: இப்பவே சைபர் குற்றங்களுக்கான வரையறையை முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும். பிரவுசிங் சென்டர்களில் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபாசத் திரைப்படங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் தற்போது பார்க்கும் சிறுவர்கள் நாளை பிரவுசிங் சென்டரில் ஃபோர்னோகிராபியும் பார்க்கக் கூடும்!

ஃபெரோஸ்கான்: படிக்கும் மாணவர்களுக்கு காமிரா செல்ஃபோன் தேவையில்லாத ஒன்று. இதை இந்தியா முழுவதுமே கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். தொலைபேசியில் நமக்கு மோசமான அழைப்புகள் வந்தால், அதைப் புகார் செய்வதற்கு வசதி இருப்பது போல, சாட்டிங்கின்போது மோசமான அர்த்தத்துடன் உரையாடுபவர்களைப் பற்றி புகார் செய்வதற்கான வசதியை ஏற்படுத்து வேண்டும்.

Thanx: Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
மிக மிக மிக அவசியான தகவல் பெற்றோருக்கு மட்டுமல்ல...அனைவருக்குமானதும் கூட...! இதை நாங்க எப்பவோ சொன்னம் இப்பதான் இவை திருப்பிச் சொல்லினம்...ரூ லேட்.... வந்திற்று புற்றுநோய்...வளர்ந்தும் விட்டுது... பார்த்திருக்க...!

இப்ப மருந்து போடுறதாப் பூச்சாண்டி காட்டாம ஒரே அடியா லேசர் பிடியுங்கோ...இல்ல ஆபத்துத்தான்...!

முதலில எம் எஸ் என் யாகு போன்ற சட் விபரம் எல்லாம் பிரைவேட் சட்டா இல்லாம பப்பிளிக் ஆக்க வேணும்..பெற்றோருக்கும்...பிற பெரியவர்களும் கண்காணிப்பாளர்களும் நோக்கத்தக்கதாக...அல்லது இச் சட் வசதிகளை குறிப்பிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் மூலமாக வழங்க வேண்டும்....ஆரம்பப் பதிவுகளை கண்டவரும் கண்ட இடத்திலும் செய்ய முடியாதவாறு...குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி... தாங்கள் பற்றிய சரியான ஆதார பூர்வ விபரங்களைச் சமர்ப்பித்த பின் அவர்களின் தகுதி நிலை குறித்து அறிந்து அனுமதிக்க வேண்டும்...!

செல்போன்..முக்கியமா கமரா போன் விற்பனை சட்ட வரைகளுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்...குறித்த வயதினர் வாங்கவோ பாவிக்கவோ தடை விதிப்பதோடு...இப்படியான போன்களை பாவிப்பவர்கள் பற்றிய பதிவுகள் விபரங்கள் பொலீஸ் தொடங்கி அனைத்துக் கண்காணிப்புப் பிரிவுகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.. கமரா பாவிக்கும் போது அது பற்றிய தகவல்கள் போனில் பதிவு செய்யப்பட்டு குறித்த காலத்துக்கு அது அழிக்கப்படாத வகையில் நினைவில் நிறுத்தப்பட வேண்டும்...இப்படி இன்னும் சில ரகசிய பாதுகாப்புப் பிரமாணங்களும் இல்லாமல்...இத்தகைய குற்றவாளிகளை கண்காணிப்பதும் தடுப்பது கடினம்...!

இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நல்ல பயனுள்ள தகவல். நன்றி <b>Mathan</b>,
Reply
#4
இந்த காலம் வந்து தகவல்தொழில் நுட்ப யுத்தகாலம் என்று சொல்லலாம் இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளை கட்டுபடுத்துவது கடினமே இதில் சிறுவர்களை பெற்றார் கவனிக்கலாம் வயது வந்தவர்களை????? 8) 8)
; ;
Reply
#5
Quote:இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...!


இதெப்படி இருக்கு.. ஒரு சனமும் வராது களத்திற்கு..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
shiyam Wrote:இந்த காலம் வந்து தகவல்தொழில் நுட்ப யுத்தகாலம் என்று சொல்லலாம் இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளை கட்டுபடுத்துவது கடினமே இதில் சிறுவர்களை பெற்றார் கவனிக்கலாம் வயது வந்தவர்களை????? 8) 8)

அதுகள் பட்டுத் திருந்துங்கள்...அல்லது உள்ள போட்டுத் தட்டத் திருந்துங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
tamilini Wrote:
Quote:இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...!


இதெப்படி இருக்கு.. ஒரு சனமும் வராது களத்திற்கு..
குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...!
ஜஃஙரழவநஸ


இதெப்படி இருக்கு.. ஒரு சனமும் வராது களத்திற்கு..

ஏன் தமிழினி மோகன் அண்ணா பணத்தை இழுத்து போடுவார் எண் பயமோ??
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)