Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜார்ஜ் புஷ் மீண்டும் இன்று பதவி ஏற்பு
#1
<img src='http://www.allposters.com/IMAGES/ATA/24590GB.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் மீண்டும் இன்று பதவி ஏற்பு: 3 நாட்கள் கோலாகல விழா

வாஷிங்டன், ஜன. 20-

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஜான்கெரியும் போட்டியிட்டனர். இதில் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார்.

தேர்தல் தொடர்பான நடை முறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்க செனட் கூட்டத்தில் புஷ் வெற்றி பெற்றதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இன்று 2-வது முறையாக பதவி ஏற்கிறார். இதற்காக வாஷிங்டன் நகரில் கோலகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா முழுவதிலும் இருந்தும் ஏராள மானோர் வாஷிங்டன் நகரில் வந்து குவிந்துள்ளனர். புஷ் பதவி ஏற்பு விழா 3 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது.

உறைய வைக்கும் கடும் குளிர் இடையே இசை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும், விருந்துகளும் தொடங்கி விட்டன. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு நடைபெறும் முதல் பதவி ஏற்பு விழா என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக்கப் பட்டுள்ளது.

பதவி ஏற்கச் செல்லும் முன்பு ராணுவ வீரர்களுக்கு புஷ் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பிரார்த் தனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2-வது முறை யாக அதிபர் பதவி ஏற்பது குறித்து புஷ் கூறியதாவது:-

அதிபர் பதவி ஏற்கும் முன்பு அமெரிக்காவின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகவும் பொருத்தமானது. அமெரிக்க மக்களுக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் தீவிரவாதிகளின் சவாலை சந்திப்போம். சுதந்திரமாக வாழலாம் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)