Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
letter to bush
#1
வணக்கம் ஷோர்ஜ் டபுள்ய10 அவர்களே

இன்டைக்கு (20.01.2005) புஷ் உங்களுடைய இரண்டாவது ஆட்சிக்காலத்தை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில கொண்டாட திட்டமிட்டிருக்றீங்கள் என்டு கேள்விப்பட்டன். „விழுந்தும் மீசையில மண் ஒட்டேல“ என்ட மாதிரி உலகத்தில ஒன்டுமே நடக்காத மாதிரி நீங்க இப்படி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனை நினைச்சா கவலயா இருக்கய்யா. 60 மில்லியன் டொலர் சிலவு செய்து இந்த கொண்டாட்டம் நாலு நாளா நடக்கப்போகுது. இந்த நாலு நாளுக்கும் உங்கட பாதுகாப்புக்கு 13000 மெய்ப்பாதுகாவலர்களும்; ஏற்பாடு செய்திருக்கிறதா கேள்வி. இவங்களுக்கு வேற 20 மில்லியன் டொலர் செலவாம். இந்த பார்டிக்கு „ஸ்பொன்சர்“ பன்றது பெரிய எண்ணை வியாபாரிகளாம். ஆக மொத்தம் உங்களுக்கு 5 சதம் சிலவு கூட இல்லை போல தெரியிது.

சுனாமி வந்து லட்சக்கணக்கில சனம் செத்துப் போச்சு. அது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பியள் என்டு நினைக்கிறன். இல்ல உங்கட „குடீஐ“ ஈராக்கில ஆணுஆயுதம் இருக்கு என்டு உங்களுக்கு தவறான தகவல வளங்கின மாதிரிää ஒரு சனமும் சாகேல என்டு சொல்லி தகவல் அனுப்பியிருக்கலாம் என்ட சந்தேகமும் இருக்கு.

ஈராக் என்ட உடன தான் ஞாபகத்திற்கு வருது. உங்கட „உயிர்“ நண்பர் தொனி ப்ளேர்க்கு ஏற்பட்ட நிலமய பார்த்தீங்களாய்யா? சரி சுனாமியால செத்த சனங்களை பற்றி தான் உங்களுக்கு வருத்தம் இல்லை. நீங்க சொல்ற எல்லாத்துக்கும் மண்டய ஆட்டிக்கொண்டு உங்கட கால்ல கிடந்த தொனி ப்ளேர்க்கு என்டாலும் கொஞ்ச மன ஆறுதல் சொல்லி இருக்கலாமய்யா. அவரின்ர ஆக்கள் ஏதோ ஈராக் கைதிகள துன்புறுத்தினதா போட்டோக்கள் வெளி வந்திருக்கு. இதுக்கு முன்னால உங்கட ஆக்கள் பண்ணினத இப்ப இவையள் பண்ணீனம். நீங்க உங்கட போரை பின் லாடனில தொடங்கி இப்ப ஈரானில வந்து நிக்றீங்கள். சதாம் ஈராக் நாட்டு மக்களை அடிமைப்படுத்திறான் என்டு சொன்னீங்கள்ää இப்ப எல்லாமே தல கீழா இருக்கு. சதாமின்ற காலத்தில இப்படி கொடுமைகள் நடந்திருக்கா என்டு யோசிச்சுத் தான் பாக்கனும். உங்கட நண்பர் ப்ளேர் போர் தொடங்கின போது என்ன சொன்னவா என்டு உங்களுக்கு நினைவிருக்கோ தெரியா. இருந்தாலும் நானும் ஒருக்கு உங்களுக்கு நினைவுபடுத்திவிடுறேன்.

ழ அடக்கு முறையிலிருந்தும்ää பயத்திலிருந்தும்ää பயங்கரவாதத்திலிருந்தும் ஈராக் விடுதலை பெற்றுää ஒரு வளமான எதிர்காலம் ஈராக்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறதுää என்பதை தெரியப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ழ எங்களுடைய படையினர் (உங்கட படையையும் சேர்த்து தான் புஷ்) ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. நாங்கள் ஈராக்கியர்களின் நண்பர்கள்ää ஈராக் மக்களின் விடுதலையாளர்கள்.

ழ நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஒரு வளமான ஈராக்கை கட்டியமைப்போம்.

இது உங்கட நண்பர் ப்ளேர் சொன்னது. இங்கிலாந்தின் கதாநாயகன் றோபின் கூத் பணக்காரங்ககிட்ட திருடி ஏழை மக்களுக்கு கொடுத்தான். ஆனா உங்கட படையள் இப்ப இருக்கிறத விட நல்லா இருந்த ஈராக்க திருடி உங்க இரண்டு பேரட்டயும் தந்திருக்கறாங்க. குரங்கின்ற கையில பூமாலை கிடச்ச மாதிரி இருக்கு.

ஏதோ சனநாயகம் என்டு வாய் கிளிய ரெண்டு பேரும் பேசுறீங்க. வியட்நாமில நீங்க பண்ணின அழிவுகளை எந்த சாக்கடையில மறைக்க போறீங்க என்டு தெரியேல. ஈராக்கில ஆணு ஆயுதம் இல்லை என்டு நிரூபிக்கிறதுக்கு சதாம் அனுமதிச்சாரு. அங்க அப்படி ஒன்டும் இல்லை என்டு தெரிஞ்ச பிறகும் ஜக்கிய நாடுகள் சபையின்ற உத்தரவுகளின்றி படையெடுத்த நீங்க பயங்கரவாதிகளா இல்லை சதாம் பயங்கரவாதியா என்டு எனக்கு தெரியேல.

சரி நீங்க போய் கொண்டாட்ட வேலையள கவனீங்க. நான் உங்கள „டிஸ்ரப்“ பண்ணீட்டன் போல இருக்கு.

உவங்கள் டமிள் நாட்டில ஏதோ வீரப்பனை மயக்க மருந்து வச்சு பிடிச்சிட்டு தாங்கள் சண்டை செய்து பிடிச்சனாங்கள் என்டு கதவிடுறானுவளாம். இது எப்படி என்டா கோவில் (இட்ஸ் எ டடிமிள் சினிமா) படத்தில வடிவேல் (டமிள் காமெடியன்) கப்பை கடையில வாங்கி கொண்டு வந்து தான் வென்டுட்டன் என்டு சொன்ன மாதிரி இருக்கு. எதுக்கும் அங்கால போய்ட்டு வந்து உங்களுக்கு எழுதிறன்.



டமிளன்

காசி
Reply
#2
<ul>
<li>பதவியேற்பு...... [அசைவுப்படமாக ]

<li>புதிய கார்கள் [ அசைவுப்படமாக ]
<ul>
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)