Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி உதவி உதவி உதவி
#1
குடிலில் பாமினி எழுத்துரு மட்டும் தான் வேலைசெய்கிறது. ஆங்கிலம் யுனிகோட் வெலை செய்யவில்லை.
தயவு செய்து எப்படி தமிழ் யுனிக்கோட்டில் எழுதுவது என்று (குடிலில்)
விளங்கப் படுத்தமுடியுமா.(பாமினி இல்லை)
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
#2
[b]கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20&start=0

Quote:நட்புக்குரிய யாழ் இணையக் கருத்துக்கள நண்பர்களுக்கு,

யூனிக்கோட் தமிழில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான விளக்கம் இது.
யாழ் இணையமானது வலையூடகத்தின் புதிய நுட்பமான "யூனிக்கோட்" எழுத்துரு முறையினைப் பயன்படுத்துவது
யாவரும் அறிந்ததே. இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும், எந்தவொரு கணணி மூலமும்,

எந்தவொரு புதிய எழுத்துருவினையும் தரவிறக்கம் செய்யாமல் யாழ் இணையத்தை தமிழில் பார்வையிட முடியும்.

இன்று இணையத்தில் தமிழ் இணையத்தளங்கள் பரந்து விரிந்திருக்கின்றன. அதேபோல் தமிழ் எழுத்துருக்களும்
வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் பாவனையாளர்களும்/பயனாளர்களும்
ஒவ்வொருவிதமான எழுத்துரு முறையினைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியே பழக்கப்பட்டும் விட்டார்கள்.

அதனால் ஒரு குறுகியவட்டத்துக்குள்ளேயே தமது செயற்பாடுகளையும் குறுக்கிக் கொள்கிறார்கள். இது தமிழின்
வளர்ச்சிக்கும், தமிழரின் முன்னேற்றத்திற்கும் தடையாகவுள்ளது. இதன்பொருட்டு யாழ் இணையம், வெவ்வேறு
முறைகளைப் பயன்படுத்தி வருபவர்களை, அவர்கள் பயன்படுத்தும் எழுத்துரு முறையிலேயே இலகுவாக
"யூனிக்கோட்டில்" எழுத வழிவகைகள் செய்து அதனைக் கருத்துக்களம் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம்
அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துக்களையும், தகவல்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள இலகுவாக
அமையும்.

எனவே, அதுபற்றிய விளக்கங்களை கீழே சுருக்கமாக எழுதுகிறேன்.
----------------------------------------------------------------------------------

1. யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்
(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.

2. கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:
முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி
அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:
Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -
Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new
messages - Log out [ வலைஞன் ]

3. மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்
மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:
Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging

4. மேற்கண்ட பிரிவுகளில் "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் அதன் கீழே உபபிரிவுகளை உள்ளடக்கிய இன்னொரு பகுதி திறக்கும்.
Public : Preferences : Signature : Avatar : Admin

5. மேற்கண்ட உபபிரிவுகளில் "Preferences" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் பல தரவுகளுடன் கூடிய ஒரு பகுதி திறக்கும்.

6. அதன்படி, மேலிருந்து கீழாக 15 ஆவது தரவாக "Board Style" என்ற ஒன்று உள்ளது.
அதன் வலது புறத்தில் நீங்கள் உங்களுக்கு இலகுவான எழுத்துரு முறையில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான
வடிவமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

-வடிவமைப்புகள்:

*bamini2unicode: நீங்கள் "பாமினி" தட்டச்சு எழுத்துரு முறையில் எழுதிப் பழக்கப்பட்டவராக இருப்பின்,
அதேநேரம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி(Keyman Software + bamuni.kmx)
இல்லாதவராக இருப்பின், அல்லது பயன்படுத்தாதவராக இருப்பின் இந்த முறையைத் தெரிவு செய்க.
இதன் மூலம், நீங்கள் கருத்துக்களத்தில் கருத்து எழுதும்போது (new topic, post reply)
மேலே ஒரு பெரிய பெட்டியும், கீழே ஒரு சின்னப் பெட்டியும் இருக்கும். கீழுள்ள சின்னப் பெட்டியில் நீங்கள்
பாமினி தட்டச்சு முறையில் எழுதினால் அது தானாக மேலுள்ள பெட்டியில் யூனிக்கோட் முறையில் மாற்றும்.

*converter: இதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் கருத்தெழுதும் பொழுது மேலும் கீழுமென இரண்டு
பெட்டிகள் இருக்கும். இவ்விரண்டிற்குமிடையே மாற்றத்திற்குரிய எழுத்துரு முறைகளின் பெயர்கள் இருக்கும். மேலே
உள்ள பெட்டியில் நீங்கள் எந்த முறையைப் பயன்படுத்தியும் எழுதிவிட்டு அதன் கீழே எந்த எழுத்துரு
முறையென்பதை அழுத்தினீர்களாயின், தானாக கீழே உள்ள பெட்டியில் நீங்கள் எழுதியதை யூனிக்கோட் முறையில்
காண்பிக்கும். இந்த வடிவமைப்பில் இன்னொரு சாத்தியம் என்னவென்றால், நீங்கள் வலையூடகத்தில் உள்ள எந்த
ஒரு தமிழ்ப் பக்கத்தில் இருந்தும் நல்ல தகவல்களை பிரதியெடுத்து, கருத்துக்களத்தில் யூனிக்கோட் முறையில்
உருமாற்றி இணைக்க முடியும்.

*english2unicode: நீங்கள் இதுவரை எந்தவொரு தமிழ் எழுத்துருமுறையும் பயன்படுத்தவில்லையா?
e-kalappai, Bamuni போன்ற செயலிகளின் மூலம் தமிழ் எழுதும் பழக்கம் இல்லையா? கவலை வேண்டாம்.
இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கருத்தெழுதும் பொழுது மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய
பெட்டியும் இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் ஆங்கிலத்தில் தமிழை (உதாரணம்:ammaa) என்று
எழுதினால் மேலே உள்ள பெட்டியில் தானாகவே யூனிக்கோட் முறையில் மாறும்.

*fisubsilver : FI Subsilver Shadow : உங்களிடம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி
(Keyman Software + bamuni.kmx) இருக்கிறதா. அப்படியென்றால் இந்த இரண்டு வடிவமைப்புகளில்
ஏதாவதொன்றைத் தெரிவு செய்வதன் மூலம், நேரடியாகவே பாமுனி செயலியின் மூலம் யூனிக்கோட் முறையில்
எழுத முடியும்.

*tscii2unicode: நீங்கள் இதுவரை tscii முறையில் எழுதிப் பழக்கப்பட்டவரா. பரவாயில்லை! இந்த
வடிவமைப்பத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் கருத்து எழுதும் மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய பெட்டியும்
இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் tscii முறையில் நீங்கள் எழுதினால், மேலே உள்ள பெட்டியில் அது
தானாகவே யூனிக்கோட் முறைக்கு மாறிவிடும்.


நேரடியாக சுரதா யாழ்வாணனின் "பாமுனி" செயலி பயன்படுத்தி எழுதாதவர்கள், அல்லது "bamini2unicode, english2unicode, tscii2unicode, converter" ஆகிய வடிவமைப்புகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் பின்வரும் படத்தினைக் கவனிக்க.

***சாதாரணமாக நீங்கள் Post Reply என்பதை அழுத்திவிட்டு கருத்து எழுதுதல்.


***Quick Reply இல் உடனடியாகக் கருத்து எழுதுதல்.


பி.கு.: மேலே குறிப்பிட்டுள்ளது போன்று, கீழே இருக்கும் சிறிய பெட்டியில் எழுதிவிட்டு, பின்பு பெரிய பெட்டிக்குள்
சென்று மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சிறிய பெட்டிக்குள் உங்கள் சுட்டியை அழுத்தினால் மீண்டும் பழைய
படியே வந்துவிடும். அதனால் கவனமாக இருக்கவும்!
-----------------------------------------------------------------------------------

நண்பர்களே,
மேலே எழுதப்பட்ட விளக்கம் கணணியில் திறமையுள்ளவர்கள், அதிகம் ஈடுபடாதவர்கள் என்று அனைத்துத்

தரப்பினர்க்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. சிலவேளைகளில் சிலருக்கு இது அளவுக்கதிகமான எழுத்தாகவும்,
சிலருக்கு விளக்கம் போதாததாகவும் இருக்கலாம். எனவே மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் இங்கெழுதுக,
இல்லையெனில் தனிப்பட்ட செய்திச்சேவையின் மூலம் தொடர்புகொள்க.

நன்றி
_________________
வலையில் கலைஞன்
வலைஞன்
----------
#3
நன்றி நன்றி நன்றி
நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
#4
நீறோவின் பதியமென்பொருள் 6.6.0.3 எங்கிருந்துஇறக்கம் செய்யலாம்
(என்ரபிறைஸ் எடிற்சன்) சிடி காப்பியடிக்கும் புறோகிறாம்
#5
அப்படி என்றால் என்ன கணேஸ் அண்ணா..?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
#6
நீறோவின் பதியமென்பொருள் 6.6.0.3 எங்கிருந்துஇறக்கம் செய்யலாம்
(என்ரபிறைஸ் எடிற்சன்) சிடி காப்பியடிக்கும் புறோகிறாம்
#7
கணேஸ் அண்ணா எந்த விதமான உதவியையும் கணணி தொடர்பான அவசர உதவிகளுக்குள் கேளுங்கள்.. மற்றும் இந்த மென்பொருள் தொடர்பாக விளக்கங்கள் இந்த இணைப்பில் முன்னரே வழங்கப்பட்டிருக்கிறது..
[b][size=18]


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)