Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடலோர தடுப்பு சுவர் கட்டும் புலிகள்
#1
ஜனவரி 22, 2005

சுனாமி: கடலோர தடுப்பு சுவர் கட்டும் புலிகள்

முல்லைத்தீவு:

சுனாமி அலைகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தமிழர் வாழும் பகுதிகளில் கடலோரத்தில் தடுப்புச் சுவர் கட்ட விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். ¬முற்றிலும் விடுதலைப் புலிகளே இந்தச் சுவரை கட்டவுள்ளனர்.


டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைத் தாக்குதலில் இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விடுதலைப் புலிகளே கவனித்து வருகிறார்கள்.

சுனாமி அலைத் தாக்குதலிலிருந்து எதிர்காலத்தில் தப்புவதற்காக விடுதலைப் புலிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இந்தத் திட்டங்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வகுத்துள்ளார்.

அதில் ஒரு பகுதியாக கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ¬முல்லைத் தீவு பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வலுவான மண் சுவரைக் கட்ட விடுதலைப் புலிகள்¬முடிவு செய்துள்ளனர். கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நிலப் பகுதியில் இந்த தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.

3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகத்தில் இந்த தடுப்புச் சுவர் அமையவுள்ளது. பழங்காலத்து தமிழர் கட்டடக் கலையைப் பயன்படுத்தி இந்தத் தடுப்புச் சுவர் ¬முற்றிலும் மண்ணால் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து இந்த சுவர் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழர் மறுவாழ்வு அமைப்புத் தலைவர் சிவனடியார் கூறுகையில், நாங்கள் கட்டப்போகும் மண் சுவர், கான்க்ரீட் சுவரை விட மிகவும வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும். செலவும் மிக மிக குறைவாகவே இருக்கும்.

நமது மூதாதையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். இதைத் தொடர்ந்து மாங்குரோவ் காடுகளையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தென்னை மரங்களும் கடலோரத்தில் அதிக அளவில் நடப்படும் என்றார் அவர்.

Source: Thatstamil
Reply
#2
அருமையான திட்டம்... பதநீர் என்றால் கள்ளா??
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)