Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிநாட்டு வினோதங்கள்
#1
வெளிநாட்டு வினோதங்கள்

கோடை விடுமுறையில் வீட்டு பாடமா? கோர்ட்டில் மாணவர் வழக்கு

கோடை விடுமுறையில் வீட்டு பாடம் எழுதி வரச்சொன்ன பள்ளிக்கூடம் மீது கோர்ட்டில் மாணவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் விட்னால் மாவட்டம் மில்வாகே நகரில் நடந்துள்ளது. லார்சன் என்ற அந்த 17 வயது மாணவனுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஏராளமான வீட்டுப்பாடம் எழுதி வரச் சொன் னார்கள்.

இதை எதிர்த்து அந்த மாணவரும், மாணவரின் தந்தையும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கில் "கோடை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதி வரச்சொல்ல ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை.

180 நாட்கள் பள்ளிக்கூடம் நடைபெறுகிறது. இதைத்தவிர மற்ற நாட்களில் மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டு பாடம் எழுதி வரச்சொல்லக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

*****

பாரசூட்டில் குதித்த 8 மாத கர்ப்பிணிக்கு தரை இறங்கியதும் குழந்தை பிறந்தது

பாரசூட்டில் குதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டது. வலியைத் தாங்கிக் கொண்டு அந்தப்பெண் குதித்ததும் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அந்தப்பெண்ணின் பெயர் மரிஜா உசோவா. ரஷியாவைச் சேர்ந்தவர் திருமணம் ஆனவர்.

திருமணத்துக்கு முன்பு இருந்தே வானத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் தரையில் குதித்து சாகசங்கள் செய்வதில் ஆர்வம் உண்டு.

இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பாரசூட் மூலம் குதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. டாக்டர்கள் தடுத்தும் கேளாமல் அவர் விமானத்தில் பறந்து பாரசூட்டில் குதித்தார்.

முன் கூட்டியே அங்கே காத்திருந்த டாக்டர்களிடம் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக கூறினார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

"பாரசூட்டில் குதிக்கும் போது ஏற்படும் இன்ப அதிர்ச்சியை என் வயிற்றில் உள்ள குழந்தையும் உணர வேண்டும் என்று நினைத்தேன் அதற்காகத்தான் பாரசூட்டில் இருந்து குதித்தேன்" என்றார் மரிஜா.

*****

மதுபான விடுதிகளில் புகைபிடிக்கத் தடை

இங்கிலாந்தில் பல்வேறு நகரங்களில் 650 மதுபான விடுதிகளை நடத்திவரும் நிறுவனம் `வெதர்ஸ்பூன்'. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மதுபான விடுதிகளில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் 60 விடுதிகளில் புகைபிடிக்கத் தடை வரும் என்றும் அது அறிவித்து உள்ளது.

புகை பிடிப்பதை கைவிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகளில் நிறையப்பேர் புகைபிடிப்பதால் பலர் அங்கு வரத் தயங்குகிறார்கள் என்று அந்த நிறுவனத் தலைவர் டிம்மார்ட்டின் கூறி இருக்கிறார்.

Source : Dailythanthi
Reply
#2
Quote:வெளிநாட்டு வினோதங்கள்

கோடை விடுமுறையில் வீட்டு பாடமா? கோர்ட்டில் மாணவர் வழக்கு

கோடை விடுமுறையில் வீட்டு பாடம் எழுதி வரச்சொன்ன பள்ளிக்கூடம் மீது கோர்ட்டில் மாணவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் விட்னால் மாவட்டம் மில்வாகே நகரில் நடந்துள்ளது. லார்சன் என்ற அந்த 17 வயது மாணவனுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஏராளமான வீட்டுப்பாடம் எழுதி வரச் சொன் னார்கள்.

இதை எதிர்த்து அந்த மாணவரும், மாணவரின் தந்தையும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கில் "கோடை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதி வரச்சொல்ல ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை.

180 நாட்கள் பள்ளிக்கூடம் நடைபெறுகிறது. இதைத்தவிர மற்ற நாட்களில் மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டு பாடம் எழுதி வரச்சொல்லக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

ஆகா சந்தோசமா இருக்கு.. சா எங்கடை அப்பா மார் என்றால் இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்கோ என்று எல்லோ கூறுவினம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)