01-26-2005, 12:28 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>
<b>கடலம்மா கடலம்மா
கருணை கொண்ட தாயம்மா
அலை மடி மீது தாலாட்டி
அமுதூட்டிச் சீராட்டி
வளர்த்திட்ட சேயும் நானம்மா...!
முடிவில்லாப் பயணங்கள்
உன் மடிமீது நாம் செய்தோம்
அளவில்லாப் பொறுமை தந்து
அருள்பவளும் நீயம்மா...!
ஆதிக்க வெறியர்கள்
அடுக்கடுக்காய் குண்டுதள்ள
உன் வயிற்றில் அவை தாங்கிக்
காத்தவளும் நீயம்மா..!
அமைதியின் கோலமாய்
சீரான அலை கொண்டு
கரையோடு மோதுபவளே
அழிவில்லா அழகு தந்து
அகம் மகிழ அழைப்பவளே
அழிவுக்கு வகை செய்ய
ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா...!
இன்று....
கணமும் எங்கள்
தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த
ஏக்கத்தின் முதலாய் நீயம்மா...!
உறவுகளின் உயிர் குடித்த
பூதத்தின் விளை நிலமாய்
ஆகினையே ஏனம்மா...?!
மடி தாங்கிய மகவுகளின்
மகத்தான் உயிர் குடித்து
சாதிக்க நினைத்ததுவும் எதுவம்மா..??!
வஞ்சகமென்று நாமறிந்து
உனக்காய் எதுவும் செய்தறியோம்
எம் நெஞ்சங்கள் சிதைத்துமே
வெறியர் போல் நீயும்
மகிழ்ந்தனையே ஏனம்மா...!
அன்புக்குரியவளாய் நீயிருந்து
அடைகாத்த குஞ்சுகளை
பத்து நிமிட நேரத்துள்
பரிதவிக்கப் பறித்தெடுத்து
பாதையெங்கும் தூவினையே
எதற்காய் அந்தப் பாதகம்
நீ செய்தாய் சொல்லம்மா...!
காலத்திலும் உன் கருணை
நாம் மறந்து நின்றதில்லை
கொள் கருணை நீயிழந்து
காவு கொண்டனையே
எந்தனையே உன்னோடு
ஏன் என்று சொல்லம்மா...!
நினைவுத் தீபங்கள் ஏற்றியெம்
சோகங்கள் சொல்கிறோம்
நீயுமங்கு மெளனமாவதும் ஏனம்மா...!
கரையோடு மோதியுன்
சினம் தனிக்க வேண்டுகின்றோம்
உயிர் பறிக்கும் பாதகம்
மறந்திடவும் இறைஞ்சுகின்றோம்...!
மெளனமாய் நீ கொண்ட
வெறி தானும் அடங்கியதுவோ... ???!
மீண்டும் அந்தத் துயரங்கள்
வாங்கும் சக்தி எமக்கில்லை
நினைவுகளே வாழ்வுகளாய்
நிஜமிழந்து தவிக்கின்றோம்
மீண்டும் எம் நிம்மதிக்கு
என்ன செய்வாய்...??!
உன் மடியே துணையென்று நாடுகின்றோம்...!</b>
கடற்கோள் பறித்தெடுத்த உறவுகளின் நினைவாக...தருவது - http://kuruvikal.yarl.net/
<b>கடலம்மா கடலம்மா
கருணை கொண்ட தாயம்மா
அலை மடி மீது தாலாட்டி
அமுதூட்டிச் சீராட்டி
வளர்த்திட்ட சேயும் நானம்மா...!
முடிவில்லாப் பயணங்கள்
உன் மடிமீது நாம் செய்தோம்
அளவில்லாப் பொறுமை தந்து
அருள்பவளும் நீயம்மா...!
ஆதிக்க வெறியர்கள்
அடுக்கடுக்காய் குண்டுதள்ள
உன் வயிற்றில் அவை தாங்கிக்
காத்தவளும் நீயம்மா..!
அமைதியின் கோலமாய்
சீரான அலை கொண்டு
கரையோடு மோதுபவளே
அழிவில்லா அழகு தந்து
அகம் மகிழ அழைப்பவளே
அழிவுக்கு வகை செய்ய
ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா...!
இன்று....
கணமும் எங்கள்
தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த
ஏக்கத்தின் முதலாய் நீயம்மா...!
உறவுகளின் உயிர் குடித்த
பூதத்தின் விளை நிலமாய்
ஆகினையே ஏனம்மா...?!
மடி தாங்கிய மகவுகளின்
மகத்தான் உயிர் குடித்து
சாதிக்க நினைத்ததுவும் எதுவம்மா..??!
வஞ்சகமென்று நாமறிந்து
உனக்காய் எதுவும் செய்தறியோம்
எம் நெஞ்சங்கள் சிதைத்துமே
வெறியர் போல் நீயும்
மகிழ்ந்தனையே ஏனம்மா...!
அன்புக்குரியவளாய் நீயிருந்து
அடைகாத்த குஞ்சுகளை
பத்து நிமிட நேரத்துள்
பரிதவிக்கப் பறித்தெடுத்து
பாதையெங்கும் தூவினையே
எதற்காய் அந்தப் பாதகம்
நீ செய்தாய் சொல்லம்மா...!
காலத்திலும் உன் கருணை
நாம் மறந்து நின்றதில்லை
கொள் கருணை நீயிழந்து
காவு கொண்டனையே
எந்தனையே உன்னோடு
ஏன் என்று சொல்லம்மா...!
நினைவுத் தீபங்கள் ஏற்றியெம்
சோகங்கள் சொல்கிறோம்
நீயுமங்கு மெளனமாவதும் ஏனம்மா...!
கரையோடு மோதியுன்
சினம் தனிக்க வேண்டுகின்றோம்
உயிர் பறிக்கும் பாதகம்
மறந்திடவும் இறைஞ்சுகின்றோம்...!
மெளனமாய் நீ கொண்ட
வெறி தானும் அடங்கியதுவோ... ???!
மீண்டும் அந்தத் துயரங்கள்
வாங்கும் சக்தி எமக்கில்லை
நினைவுகளே வாழ்வுகளாய்
நிஜமிழந்து தவிக்கின்றோம்
மீண்டும் எம் நிம்மதிக்கு
என்ன செய்வாய்...??!
உன் மடியே துணையென்று நாடுகின்றோம்...!</b>
கடற்கோள் பறித்தெடுத்த உறவுகளின் நினைவாக...தருவது - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->