Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடக்குகிழக்கை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் அவசியம்!
#1
வடக்குகிழக்கை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் அவசியம்!

(Kesari) (26.1.2005)
சுனாமி பேரலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்குää கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப 1321 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. ஒன்றரை வருட காலத்துக்குள் வடக்குää கிழக்கு புனர்நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் அதுவே எமது இலக்காகும். எமது தமிழர் தாயகப் பகுதிகளைக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் உதவியையே நாம் பெரிதும் எதிர்பார்த்துள்ளோம் என்று புலிகளின் திட்டமிடல் செயலகப் பணி பொறுப்பாளர் தூயவன் "கேசரி'க்குத் தெரிவித்தார். நிவாரண மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் அரசாங்கம் எம்முடன் இணைந்து செயலாற்ற விரும்பினால்ää அதற்கு நாம் தயாராகவேயுள்ளோம். எனினும்ää அரச தரப்புடன் இணைந்து செயற்படுவதால் பல தடைகள் ஏற்படும். கடந்த கால அனுபவங்கள் இதனை பறை சாற்றுகின்றன எவ்வாறெனினும். மக்களுக்காக வரும் அத்தனை உதவிகளும் பூரணமாக அவர்களைச் சென்றடைய வழிசெய்ய வேண்டுமென்பதில் தலைவர் உறுதியாகவுள்ளார் என்றும் அவர் சொன்னார்.


எமது திட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி என்ற பேதமில்லை. முழு வடக்குää கிழக்குப் பிரதேசங்களையும் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும். நாம் வடகிழக்கில் செயலணிக் குழுக்களை ஏற்படுத்திய ஆரம்பத்தில் நிலவிய நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக சகல தரப்பினருடனும் பேசி எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

கேள்வி: சுனாமி அனர்த்தத்தின் பின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான செயலகத்தின் பலன்கள் எவ்வாறுள்ளன?

பதில்: வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்புக்களையும் அது தொடர்பான மூல உபாயங்களை வரைவது தான் எங்களுடைய முக்கிய பணியாகவுள்ளது. சகல சர்வதேச நிறுவனங்களும் எங்களை ஒரு பங்காளி நிறுவனமாக ஏற்றுக் கொள்கின்றன. உதவி செய்கின்றன.சுனாமி அனர்த்தத்துக்குப் பின்னர் வடகிழக்கை மீளவும் கட்டியெழுப்புவதற்கான சில கொள்கை வகுப்புக்களிலும்ää எவ்வாறு இதனைக் கொண்டு நடத்த வேண்டும் என்பதிலும் நாம் ஒரு தெளிவான பார்வையில் இருக்கின்றோம். குறிப்பாக யுத்தத்துக்கு முன்னர் மறுக்கப்பட்ட அபிவிருத்தி வாய்ப்புகளுக்கூடாக அடைந்திருக்கும் நிலை என்னவாக இருக்குமோ அந்த நிலையை நோக்கி நகர்வதே எமது இலக்காக அமைந்துள்ளது.சுனாமிக்கு முன்பிருந்த நிலையை தனிய ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இங்கு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்று நாம் கருதவில்லை. ஆகவேää யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் வந்த அபிவிருத்தி வாய்ப்புக்கள் தடையின்றி கிடைத்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்குமோ அந்த நிலைக்கான இலக்கை நோக்கித் தான் நாம் செல்கின்றோம்.இதில் முதல்கட்டமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து நலன்புரி முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கான ஒழுங்கு படுத்தல்களை செய்தோம். இவ்வேளையில் நாம் அனைவரையும் ஒருங்கமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஏனென்றால் இங்கு இரட்டிப்புத்தன்மை வரக் கூடாதுää சரியான முறையில் விநியோகம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே நாம் இப்பணியில் ஈடுபட்டோம்.சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட அன்று இரவே நாம் சகல சர்வதேச தொண்டர் அமைப்புக்களையும் அழைத்து முல்லைத்தீவிலும்ää கிளிநொச்சியிலும் செயலணிக் குழுவினை ஏற்படுத்தி ஒருங்கிணைத்தோம். அரச தரப்புää புலிகளின் தரப்புää சர்வதேச அமைப்புக்களின் பிரதி நிதிகளை உள்ளடக்கி ஒருங்கிணைப்பை திட்டமிடல் செயலகத்தினூடாக செய்தோம்.அடுத்தடுத்த நாட்களில் செயலணிக் குழுக்களை ஏனைய மாவட்டங்களிலும் ஏற்படுத்தினோம். குறிப்பாக 28ஆம் திகதி மட்டக்களப்பிலும்ää 29ஆம் திகதி திருகோணமலையிலும் செயலணிக் குழுக்களை ஏற்படுத்தினோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் மாத இறுதிக்குள் செயலணிக் குழுக்களை ஏற்படுத்தினோம். சுனாமி அனர்த்தப் பணிகளை நாம் 3 கட்டங்களாகப் பிரித்திருந்தோம். குறிப்பாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதில் தலைவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார். நாம் ஏற்கனவே பேரழிவை சந்தித்த மக்கள் சுனாமியின் அனர்த்தத்தால் அடுத்த ஒரு பேரழிவை சந்தித்துள்ளோம். இந்த அனர்த்தத்தினூடாக தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இதனால்ää தலைவர் எமக்கு தெளிவாக வலியுறுத்தலை தெரிவித்திருந்தார். அதாவது மீளவும் நாம் உயிரிழப்புக்களை சந்திக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் நாம் அதற்கான செயற்பாட்டை முன்னெடுத்தோம்.தமிழ் உறவுகளின் உடனடி உதவிகள்

கேள்வி: இந்தப் பணிக்கு வெளிநாடுகளின் உதவி கிடைத்ததா?

பதில்: சம்பவத்தை கேள்விப்பட்டதுடன் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் உடனடியாக தங்களது வேலைகளை விட்டு விட்டு இங்கு வந்தனர். வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இதனைவிட சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் இம்முறை நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. ஆரம்ப கட்டத்தில் அரச தரப்பினால் எங்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை. சரியான ஒழுங்குபடுத்தல்கள் இருக்கவில்லை. ஆனால்ää அரச தரப்பின் தற்போதைய உதவி கூட எவ்வளவு தூரத்துக்கு மக்களுக்கு போதுமானது என்பதில் எமக்கு கேள்விக் குறியிருக்கிறது. ஆகவே நாம் சகலரையும் ஒன்றிணைத்து எமது சமூகத்தின் தேவையை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி செய்வதற்கான செயற்றிட்டத்தையே திட்டமிடல் செயலகத்தினூடாக செய்துள்ளோம்.கேள்வி: மூன்று கட்டமாக திட்டத்தை வகுத்துள்ளதாக கூறினீர்கள் அவை எவை?பதில்: முதலாம் கட்ட நடவடிக்கை மக்களைக் கொண்டு வந்து அவர்களைப் பராமரிப்பதுவும்ää அதே நேரத்தில் கரையோரத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மற்றும் மக்களின் உடனடியான தேவைகளை பூர்த்தி செய்வதுää புள்ளி விபரங்களைப் பெறுவதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக புள்ளி விபரங்கள் எடுக்கும் போது அரச தரப்பால் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளி விபரங்களை நாம் எடுத்தோம். கச்சேரி மட்டங்களில் எடுத்தோம். ஏனென்றால் நாளைக்கு பிழையான ஒரு அபிப்பிராயம் வரக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தோம்.தற்போது 2 ஆம் கட்டப் பணி நடைபெற்று வருகின்றது. மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இன்று எமது பிரதானமான சொத்து கல்வியாகும். இளம் சமுதாயத்தின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாடசாலைகளில் உள்ள மக்களை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளது. அத்துடன்ää அந்தப் பிள்ளைகளின் மனங்களிலும் உடனடியாக மாற்றத்தினை செய்ய வேண்டியுள்ளது.உறவினர்களை தாய்ää தந்தையை இழந்த இப் பிள்ளைகளின் மனதில் நாம் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதனால்ää மக்களை தற்காலிகமாக குடியேற்ற செயற்றிட்டங்களை அமைத்துள்ளோம். உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தற்காலிகமாக மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்காலிக குடியிருப்புக்களை அமைக்க படங்குகளை வழங்கும் போது கூட நாம் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் கூடாரங்கள் எமது சு10ழலுக்கு ஏற்ற மாதிரி காணப்படவில்லை. இதனால்ää மக்கள் கிடுகுகளினாலான கொட்டகைகளையும் எதிர்பார்க்கின்றனர். மூன்றாம் கட்டமாக நிலையான அபிவிருத்திக்கான திட்டமிடலையும் நாம் செய்து வருகின்றோம். குறிப்பிட்ட நாட்களுக்குள் வந்த எமது வெளிநாட்டில் உள்ள புத்தி ஜீவிகள்ää உள்ளூர் புத்தி ஜீவிகள்ää பல்கலைக்கழகத்தினர் ஆகியோரை இணைத்து பாதிக்கப்பட்ட பகுதியினை மீளக் கட்டியெழுப்புவதற்கான கணிப்பீட்டை செய்துள்ளோம். மாத இறுதியில் அதனை நாம் மேற்கொள்வோம். அதில் சகல இனங்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த உள்ளோம். அதிலும் முக்கியமாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் இணைத்துள்ளோம். அவர்களும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.மூன்றாம் கட்டத்துக்கான அடிப்படை நியமங்கள்

கேள்வி: மூன்றாம் கட்டப் பணியில் மீள்கட்டுமானம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது அடிப்படை நியமங்கள் உள்ளதா? அதற்கான திட்டம் இருக்கின்றதா?

பதில்: மூன்றாம் கட்டப் பணிக்கான ஏற்பாடுகளை செய்யும் போது அதற்கான சில அடிப்படை நியமங்களை நாம் வகுத்துள்ளோம். அதாவது ஒரு வீடென்றால் அதனை அமைக்க ஆகக் குறைந்த நியமம் ஒன்றை கடற்கரையோரத்தில் இருந்து எத்தனை மீற்றர் தூரத்தில் அமைக்க வேண்டும் என்பவை தொடர்பாக நாம் நியமங்களை தீர்மானித்துள்ளோம்.ஸ்ரீலங்கா அரசாங்கம் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திலேயே வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது. பின்னர் 200ää 100 மீற்றர் என தூரத்தை குறைத்து வருகின்றனர். ஆனால்ää நாங்கள் மிகத் தெளிவான அணுகுமுறையை மக்கள் மத்தியில் கடைப்பிடித்தோம். நாங்கள் மக்களுக்கு இவ்விடயம் குறித்து தெளிவு படுத்தினோம். உயிர் இழப்பை எப்படியிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது குறித்து விளக்கிக் கூறினோம்.வடமராட்சி கிழக்குää முல்லைத்தீவுப் பகுதிகளில் 400 மீற்றருக்கப்பால் வந்திருப்பதற்கு மக்கள் சம்மதித்துள்ளனர். அதேவேளை கரையோரப் பகுதியில் உள்ள அவர்களது காணிகளை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த மாட்டோம். அக்காணிக்குள் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை அதாவது சுற்றுச் சு10ழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம். தென்னைää பனைää சவுக்கு போன்றவற்றை அவர்களிடம் வழங்கி அவர்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தையும் அவர்கள் பெற முடியும். அத்துடன்ää காற்றுச் சு10ழலையும் பாதுகாக்க முடியும் என்பது எமது திட்டமாகும். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் 100 மீற்றர் கூட பின் செல்வது கடினமாகும். அப்படியான இடங்களில் மாற்று திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இந்தியாவில் தமிழ் நாட்டில் 7 கிராமங்கள் சுனாமியில் இருந்து தப்பித்துள்ளது. ஏனென்றால் தூண்டில் விளைவு என்கின்ற அமைப்பை கடலில் நிறுவியிருந்தமையால் அக்கிராமங்கள் காப்பாற்றப்பட்டன.எமது பகுதியிலும் மரங்கள் கூடுதலாக நின்ற பகுதிகளில் தாக்கம் குறைவாகவே உள்ளது. இப்படியான தடுப்பு சுவர்கள்ää தூண்டில் வளைகளை ஏற்படுத்துவது குறித்தும் நாம் கரிசனை காட்டி வருகின்றோம்.கட்டிடங்களை இப்பகுதியில் அமைப்பதிலும் புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

சு10ழல் பாதுகாப்பு

கேள்வி: சு10ழல் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கமுள்ளதா?

பதில்: சு10ழல் பாதுகாப்பு தொடர்பில் தலைவர் தீர்க்கமான கொள்கையைக் கொண்டுள்ளார். யுத்த நடவடிக்கை காலத்தில் கூட காடுகள் அழிக்கக் கூடாது என தலைவர் கூறியிருந்தார். இம்முறை வீடமைப்பு திட்டத்தில் அஸ்பெஸ்டர் சீற் பயன்பாட்டை நாம் முற்றாக தவிர்க்கவுள்ளோம். அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த சகல சர்வதேச நாடுகளிலும் அஸ்பெஸ்டர் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் தான் மிக மோசமாக பயன்படுத்தப்படுகின்றது.இங்கு பொலித்தீனை தடை செய்திருந்தோம். தற்போது அதற்குப் பதிலாக மாற்றீடான பொருளை நாம் கண்டு பிடித்துள்ளோம். நாம் மண்ணுக்குள் தாட்டால் அழிந்து போகும் பொலித்தீனைக் கண்டு பிடித்துள்ளோம்.

கேள்வி: சுனாமியினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் 3ஆம் கட்ட திட்டத்திற்கு காலவரை எதுவும் வைத்துள்ளீர்களா?

பதில்: ஆம். குறிப்பிட்ட காலத்தை வைத்து விரைவாக முடிக்க வேண்டும் என எண்ணுகின்றோம். எங்கள் இலக்கு அடுத்த ஒன்றரை வருடத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதேயாகும். எங்கள் பகுதியைக் கட்டியெழுப்ப சர்வதேசத்தின் உதவியைத் தான் நாம் பெரிதாக எதிர்பார்க்கின்றோம்.வடகிழக்கை மீளக் கட்டியெழுப்ப 1.321 மில். அமெ. டொலர் தேவை.

கேள்வி: சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை கட்டியெழுப்ப எவ்வளவு நிதி தேவை என மதிப்பிட்டுள்ளீர்களா?

பதில்: 1321 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பிட்டுள்ளோம்.கேள்வி: உங்கள் திட்டத்துக்கு சர்வதேச உதவி தான் தேவை என்கின்றீர்கள். அரசாங்கம் உங்கள் திட்டத்துக்கு உதவாதா?

பதில்: அரசின் உதவி என்கின்ற போது வரையறையை ஏற்படுத்தி செய்வதற்கான ஆயத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களைப் பொறுத்த வரை அரச தரப்பு முன் வந்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். செயலணிக் குழுவை ஏற்படுத்தியதை வெளிப்படை உணர்வுடன் பணியாற்றுவதற்காகவேயாகும். அரச கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதனால் பல தடைகள் ஏற்படும். கடந்த காலத்தில் இத்தகைய அனுபவம் எமக்குள்ளது. மக்களுக்கு வருகின்ற அவ்வளவு உதவிகளும் அப்படியே சென்றடைய வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவுள்ளார்.

கேள்வி: உங்களது திட்டம் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

பதில்: எமது திட்டம் ஒட்டுமொத்தமான வடகிழக்குக்கானதாகும். நாம் வடக்கில் செயலணிக் குழுக்களை ஏற்படுத்திய போது ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தோம். அரசாங்கத்தால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்திடம் அப்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால்ää நடைமுறைச் சிக்கலை சந்தித்தோம். ஆனாலும்ää மீண்டும் அனைவருடனும் பேசி எமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றோம்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)