Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏழு மாதக் குழந்தைவலையில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்
#1
அலையில் அள்ளுண்ட ஏழு மாதக் குழந்தைவலையில் சிக்குண்டு உயிர் தப்பிய அதிசயம்!
முல்லைத்தீவில் சுனாமி தாக்கியவேளை!

சுனாமி பேரலை ஏற்பட்டவேளை அதில் சிக்குண்டு தெய்வாதீனமாக - அபூர்வமாகப் பலரும் உயிர்தப்பிய சம்பவங்கள் தொடர் பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறானதோர் அதிசய சம்பவம்தான் இதுவும். முல்லைத்தீவில் கடற்கரையோரம் வாழ்ந்து வந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். கணவன் மனைவிக்கு 3 பிள்ளைகள். இளைய மகன் டிலான். வயது 7 மாதங்கள் தான்
அன்று காலை...
பேரிரைச்சலுடன் வந்த சுனாமி பேரலை கள் அந்தப் பகுதியையே துவம்சம் செய்து கொண்டிருந்தன.
தலைக்கு மேல் எழுந்துவந்த கடல் நீர் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதிய வர்கள் என்று வயது பேதம் பாராது அனைவ ரையுமே தனக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது.
இந்த அலையில் 7 மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகனான டிலானும் அடித்துச் செல் லப்பட்டான்.
அலைகளுடன் அள்ளுண்ட பலர் கடலுக் குள் அமிழ்ந்துபோயினர். வேறு பலர் நீண்ட தூரத்துக்கு அப்பால் வாரிச் சுருட்டிப் போடப் பட்டனர்; பிணங்களாக!
இவர்களைப் போலவே டிலானையும் பேரலை கடலுக்குள் உருட்டிச் சென்றது. அவ் வாறு உருட்டிச் செல்லப்பட்டவேளையில் தென்னைமரம் ஒன்றில் சிக்குண்டு போய்க் கிடந்த மீன் பிடி வலைகளுக் குள் டிலானும் ஒரு சிறு மீன்குஞ்சைப் போல சிக்குண்டு போனான். இதனால் கடல்நீரால் தொடர்ந்து டிலானைத் தன்னு டன் கொண்டுசெல்ல முடியாமல் போய் விட்டது.
அனர்த்தம் இடம்பெற்றதைக் கேள்வியுற்ற தும் கடற்புலிகளும் பொதுமக்களும் அவ்விடத் துக்கு ஓடிவந்து இடிபாடுகளுக்கு மத்தியில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்த பலரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிக்கொண்டி ருந்தனர்.
அப்போதுதான், வலையில் சிக்குண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த டிலானை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒரு வன் கண்டான்.
உடனடியாக வலையின் சிக்கிலிருந்து டிலானை மீட்ட அந்த இளைஞன், டிலானுக்கு உயிர் இருப்பதை உணர்ந்துகொண்டு விரைந்து செயற்பட்டான்.
அங்கிருந்து அவசர அவசரமாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட டிலான் வைத்தியர்களின் தீவிர முயற்சியின் பலனாக உயிர்பிழைத்தான். இப்போது டிலான் தனது உறவினர்களுடன் முல்லைத்தீவிலுள்ள நலன் புரி நிலையம் ஒன்றில் ஆரோக்கியமாக இருக் கிறான்.
மெய்சிலிர்க்க வைத்த இந்தப் பச்சிளம் பால கனின் கதையைக் கூறியவர், டிலானைத் தற் போது பராமரித்து வரும் அவனது பெரியம்மா.
புருவங்களை மேலுயர்த்தி ஆச்சரியத்து டன் அந்தச் சம்பவத்தைக் கேட்டுக்கொண்டி ருந்தேன். அவரது கதையின் இறுதியில் கண் கள் கலங்கிய நிலையில் கூறிய வார்த்ததை என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது; எனது நெஞ்சைக் கனக்கவைத்தது.
டிலான்ர தாய், தகப்பன் இரண்டு அக்கா மார் எல்லோரும் போய்ச்சேர்ந்திடினம்... இவனை மட்டும் தப்ப வைச்ச கடவுள் இவன்ரை உறவுகள் ஒன்றையுமே விட்டுவைக்கவே யில்லை...
அப்போது டிலானைத் திரும்பிப் பார்த் தேன். அழுதுகொண்டிருந்தான். பெற்றோரை யும் சகோதரிகளையும் பறிகொடுத்த சோகத் தில் அல்ல; பசியில்...!


Source : Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)