02-03-2005, 11:34 AM
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/03/flash/Pe1.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி தாக்குதலின்போது உள்வாங்கிவிட்டு, நேற்று மீண்டும் சீறியது திருச்செந்தூர் கடலில் திடீர் ஆழி பேரலை மீனவர்கள் அதிசயமாக உயிர் தப்பினர் பல லட்சம் வலை சேதம்
திருச்செந்தூர், பிப். 3- திருச்செந்தூhpல் சுனாமி தாக்குதலின் போது உள்வாங்கிய பேரலை நேற்று மீண்டும் சிறியதில் மீனவர்கள் அதிசயமாக உயிர் தப்பினார்கள். இதனால் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்தன.
டிசம்பர் 26, 2004-ம் ஆண்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அன்றுதான் உலகின் பல பாகங்களை சீரழித்த சுனாமி வந்த நாள் ஆகும்.
இந்தோனேசியாவில் உருவான இந்த ஆழிப்பேரலையில் அங்கு மட்டும் 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகினர். தமிழகத்தின் கடற்கரை பகுதி மீனவ கிராமங்களும் இருந்த இடம் தொpயாமல் உருக்குலைந்து விட்டது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். இதுபோல் இலங்கையிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இந்த சுனாமி பேரழிவு நடந்த அன்று திருச்செந்தூhpல் மட்டும் அற்புதம் நிகழ்ந்தது. இங்குள்ள கடல் நீர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள் வாங்கியது. ஆனால், பக்கத்தில் உள்ள ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டினம் ஆகிய ஊர்களில் சுனாமி கடுமையாக தாக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படாவிட்டாலும் டிசம்பர் 26-ந் தேதிக்குப்பிறகு இவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொடுத்து வந்த நிவாரணம் மூலம் இவர்கள் வயிற்றை கழுவி வந்தார்கள்.
ஆனால், சுமார் 40 நாட்களுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமைதான் இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 2 நாட்கள் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் அந்த பயங்கரத்தை மீனவர்கள் சந்தித்தனர். 50-க்கு மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம்போல் நடுக்கடலில் தூண்டில் வலையை விhpத்துவிட்டு மீனுக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென்று கடல் கொந்தளித்தன. அதன் பிறகு சுனாமி என்று அழைக்கப்படும் ஆழி பேரலை சீற்றத்துடன் வந்தது. இதைப் பார்த்து பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்க விhpத்திருந்த வலையை அறுத்துவிட்டு விட்டு வேகமாக படகில் கரைக்கு திரும்பினர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தது. பனைமரம் உயர அளவுக்கு சீறி வந்த அந்த சுனாமி அலை அப்படியே கரைக்கு வராமல் கடலை நோக்கியே சென்றுவிட்டதால் பேரழிவில் இருந்து திருச்செந்தூர் தப்பியது. இந்த காட்சியை நோpல் பார்த்துஅதிர்ச்சியடைந்த லிவ்வி (வயது 29) என்ற மீனவர் காய்ச்சலில் படுத்துவிட்டார்;.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதால் அவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மீண்டும் ஆழி பேரலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Source : Dinakaran

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->