Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த மி ழ் இ ந் தி யா
#1
<span style='font-size:25pt;line-height:100%'>த மி ழ் இ ந் தி யா


ஆக்கியோர் :

யாழ்ப்பாணத்து நவாலியூர்

திரு. ந. சி. கந்தையா பிள்ளை</span>
Reply
#2
தமிழ் இந்தியா

தோற்றுவாய்


தென்னிந்தியாவின் நில அமைப்பு உலகிற் பழமையுடையது1. அதன் வரலாறும் அவ்வகையினதே. அதன் ஆராய்ச்சி கல்லில் நார் உரித்தல் போன்ற கடுமையுடையதாதலின் அதனை ஆதிமுதல் ஒழுங்குபடுத்தி எழுதினார் யாருமில்லை2. வரலாற்று ஆசிரியர்கள் இதுவரையில் தென்னிந்தியாவின் பழைய வரலாற்றினை எழுத முயன்றிருக்கிறார்கள் என்று மாத்திரம் கூறலாம். உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியில் தென்னிந்திய பூர்வ வரலாற்றினை விளக்கும் பகுதிகள் இடையிடையே காணப்படுகின்றன. அவ்வகை ஆதாரங்களையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆங்காங்குக் காட்டியுள்ள குறிப்புகளையும் துணைக்கொண்டு இந்நூல் வரையப்படலாயிற்று. வரலாறு கற்பனைக் கதை போலக் கூறத்தக்கதன்றாகலின் இன்றியமையாத இடங்களில் சற்ற மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

1. Deccan Itself one of the most ancient geological formations in the world has since the dawn of history the home of the Dravidians, the oldest of the Indian races--The people of India-P. 2, - S. H. Risely.

2. People want to know Something about Dravidian Culture. South India is a land of wonders; but the wonder of wonders is that the history of South India has not yet come out-Bhandarkar, Hindu-March. 1-1939.

இயல் - 1

தொன்மைக் காலம்
தமிழ் இந்தியாவின் பழைய நில அமைப்பு

நில நூலார் பழையகாலத்து இப்பூமியிற் றோன்றியிருந்த கண்டங்களையும் கடல்களையும்பற்றிக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றபடிஇ கிழக்குத் தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆப்பிரிக்கா முதலிய தேசங்கள் ஒரு பெரும் நிலப்பரப்பாக விளங்கின. அப்பெரிய நிலப்பரப்பிற்கு அவர்கள் கொந்வானா (புழனெறயயெ) எனப் பெயர் வழங்கியிருக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரித்தது. அராவலி மலைகளுக்கு வடக்கே கடல் இருந்தது. கொந்வானாக் கண்டத்தின் பெரும்பாகம் சிறிது சிறிதாகக் கடலுள் மறைந்தபோது இந்தியா ஆப்பிரிக்கா கிழக்கிந்தியத் தீவுகள் என்பன கடலாற் பிரிக்கப்பட்டன. இராதகுமுத்முக்கேசி என்பவர் தென்னிந்தியாவின் பழைய நில அமைப்பைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். அது வருமாறு:


கொந்வானா அல்லது லெமூரியா

"நில நூலார் கொந்¢வானா எனப் பெயரிட்டுள்ள பெரிய பூகண்டத்தின் மிச்சமாக உள்ளது இந்திய நாடு. அப் பூகண்டம் தென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா வரையில் பரந்து கிடந்தது. இஃது அப் பகுதிகளில் கல்லாகச் சமைந்து கிடக்கும் பிராணிகள் தாவரங்களின் சின்னங்களைக்1 கொண்டு அறியப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக

1. Fossil remains.
Reply
#3
கிழக்கு மேற்காகப் பிரிக்கும் முகடுபோலமைந்திருந்தது. ஆதலினாலேயே இந்தியாவின் ஆறுகள் அராபிக்கடலை நோக்கி உற்பத்தியாகி வங்காளக் குடாக்கடலுள் வீழ்கின்றன. வடக்கே இரேதேக்1 கடல் மத்திய ஐரோப்பா சின்ன ஆசியா முதலிய நாடுகளை மூடிப் பரந்து கிடந்தது. இந்தியாவிலே அராவலி மலைகள் மாத்திரம் கடலைப்பார்த்து நின்றன. நீண்ட காலத்தின்பின் மலை (இமயம்) எழ ஆரம்பித்தது. இரெதேக் கடல் மேற்கு நோக்கிப் பின்வாங்கிற்று2இ" விஞ்ஞானத்தின் சுருக்கம் என்னும் நூலில் கொந்வானாக் கண்டத்தைப்பற்றி அதிசயப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:

"ஐரோப்பாவில் நிலக்கரி உண்டாயிருக்கின்ற காலத்தில் ஆஸ்திரேலியா தென்னமெரிக்கா இந்தியா முதலிய இடங்களில் ஒரேவகைத் தாவரங்கள் வளர்ந்தன. ஆதலினால் இந்நிலங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொந்வானாக் கண்டமாக விளங்கின" என்று முடிவுசெய்யப்படுகின்றது.3 பேராசிரியர் வெசினர்4 புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: அவர் கூறுவதுஇ "இக்கண்டங்கள் ஒன்றுக்கொன்று அண்மையில் இருந்தன. அண்டாட்டிக்காஇ ஆஸ்திரேலியாஇ தென்னமெரிக்காஇ இந்தியா முதலிய நாடுகளைத் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிப் பொருத்தி வைக்கலாம். கடலின் அடியிலுள்ள கருங்கற்பாறை வெடித்தமையால் இக்கண்டங்கள் விடுபட்டுப் பனிக்கட்டி தண்ணீரில் மிதந்து செல்வதுபோல அகன்று சென்றுள்ளன. இது நிலநூலார் கூறும் 5ஐந்தாவது உகத்தில் நிகழ்ந்தது." என்பதாகும்.

1. Tethys.
2. Hindu Civilization P. 7, Radha Kumud Mookerji.
3. Outlines of Science P. 641 - Prof. Arthur Thompson.
4. Prof wegener. 5. Tertiary epoch.
Reply
#4
வளைவுள்ள கோட்டின்கீழ் இருக்கும் பகுதி கடுந்தரையாகவும்இ அதற்கு மேலுள்ள பகுதி கடலாகவும் இருந்தன. தரைப்பகுதி நாவலந்தீவு எனப் பெயர்பெற்றிருந்தது. அம்புக் குறிகள்இ தமிழ் நாட்டினின்றும் மக்கள் சென்ற வழிகளையும்இ அவர்கள் தங்கி வாழ்ந்த இடங்களையும் காட்டுவன.
Reply
#5
தாவர உயிர் நூலார் கொந்வானா என்னும் கண்டத்தை லெமூரியா என வழங்குவர்.


பழைய பூமி சாத்திரம்


இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் பூமியின் நடுவே பெரிய பூகண்ட மொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற் காட்டியுள்ள பகுதிகள் சில அப்பெரிய பூகண்டத்தைப்பற்றி ஒரளவு விளக்குவனவாகும். அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப் பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உத்தித் தானமாயுள்ள நாவலந் தீவு...................இந் நாவலந்தீவின் நடுவே மேருவரை..................மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்.....................இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில் வாழ்வோர்.........இவற்றுட்1 பாரதவருடமும் ஒன்பது


--------------------------------------------------------------------------------

1. பாரத வருடமென்பது பழைய பபிலோணியா அசீரியாவென்றும்இ கங்கையின் உற்பத்தியைக் கூறும் வரலாறு தைகிரஸ் பூபிரதஸ் ஆறுகளின் உற்பத்தி வரலாறென்றும் வி. வேங்கடாசலம் ஐயரென்பவர் "பாரதவருடம்" என்னும் நூலில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.


தாவர உயிர் நூலார் கொந்வானா என்னும் கண்டத்தை லெமூரியா என வழங்குவர்.


பழைய பூமி சாத்திரம்


இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் பூமியின் நடுவே பெரிய பூகண்ட மொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற் காட்டியுள்ள பகுதிகள் சில அப்பெரிய பூகண்டத்தைப்பற்றி ஒரளவு விளக்குவனவாகும். அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப் பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உத்தித் தானமாயுள்ள நாவலந் தீவு...................இந் நாவலந்தீவின் நடுவே மேருவரை..................மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்.....................இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில் வாழ்வோர்.........இவற்றுட்1 பாரதவருடமும் ஒன்பது


--------------------------------------------------------------------------------

1. பாரத வருடமென்பது பழைய பபிலோணியா அசீரியாவென்றும், கங்கையின் உற்பத்தியைக் கூறும் வரலாறு தைகிரஸ் பூபிரதஸ் ஆறுகளின் உற்பத்தி வரலாறென்றும் வி. வேங்கடாசலம் ஐயரென்பவர் "பாரதவருடம்" என்னும் நூலில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.


The Original Bharatavarsha was the land of the Enphrates. This is what Sir Hentry C. Rawlinsen says.........Bharatavarsha therefore originally meant the land through which the Enphrates flowed............so then the earliest monarchs of Bharatavarsha were not..........Bharata of Manu's generations but bearedd semites of Babylon an Assur Calah or Ninervah - Bharatavarsha P. 28. - V. Venkatachalam Iyer.


வடல் (Waddell) என்னும் ஆசிரியர் அக்கேடிய சார்கன் என்பவனே இந்திய சகரன் எனக் கூறுவர்.
Reply
#6
கண்டமாய் இந்திரத்தீவும்இ கசேருத்தீவும்இ தாமிரபர்ணித் தீவும்இ கபதித்தீவும்இ நாகத்தீவும்இ சாந்திரமத்தீவும்இ காந்தருவத்தீவும்இ வாருணத்தீவும்இ குமரித்தீவு மெனப் பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பல்வேறு வகைப்பட்ட சாதிகளுமுடைத்தாய் வயங்கும். இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்ட மொன்றே வேதாகமவழக்கும்இ சாதிவரம்பும்இ கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும்இ காசி முதலிய புண்ணிய தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர் வாழிடங்களாம்.

"பூமியின் மேற்பரப்பு ஏழுகடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந்தீவினடுவே மேருவரை நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்.இஇஇஇஇஇ" இது மிருகேந்திரத்திற் கண்டது.


மேரு உலகுக்கு நடு

புராணங்களும் இதிகாசங்களும் பழைய கடல் நிலங்களைப் பற்றிப் பிறழக் கூறுமாயினும் மேரு உலகுக்கு மத்தியில் உள்ளது என்பதை எல்லாம் ஒரு தலையாக ஏற்றுக்கொள்ளும். புத்தசைன நூல்கள் மேருவை மந்தரம் எனக்கூறும். பாகவத புராணமும் கந்தபுராணமும் ஒரு காலத்தில் காற்றுக் கடவுளுக்கும் மேருமலைக்கும் நேர்ந்தபோரில் காற்றுக் கடவுளால் முறித்துக் கடலுள் விசப்பட்ட மேருவின் திகரமொன்றே இலங்கை எனக் கூறுகின்றன. இது வெப்ப நாடுகளில் அடிக்கடி நேரும் காற்றுக்குழப்பம் ஒன்றையும் அக்காலத்தில் மேருவின் ஒருபகுதி கடலுள் மறைந்த வரலாற்றினையும் குறிக்குமெனக் கருதப்படுகின்றது. ஆகவே இம்மலை பூமத்திய இரேகையை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததெனத் தெரிகின்றது. பிற்காலத்தில் இம்மலை இமயமலையை அடுத்தோ அதற்கு வடக்கிலோ இருந்ததெனக் கருதப்பட்டது. கி. மு. 4-ம் நூற்றாண்டில் விளங்கிய மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் மேருமலை பாண்டி நாட்டில் உள்ளதெனக் கூறியுள்ளார்.1

பாஸ்கராச்சாரியர் எழுதிய வானநூற் குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமத்திய இரேகை சுமத்திராவுக்கு ஊடாகச் செல்கின்றது. இலங்கைப் புத்த நூல்கள் இப்பொழுதுள்ள இலங்கைஇ முன்னைய இலங்கையில் பன்னிரண்டில் ஒரு பகுதி எனக் கூறுகின்றன. இப்பொழுது இலங்கைக்கு 400 கல் தூரத்திலுள்ள மாலைத் தீவு எனப் படும் தீவுக்கூட்டங்கள் இலங்கையின் பகுதியாக இருந்தன என்று நில நூலார் கூறுவர். அத்தீவுகளில் வாழும் மக்கள் ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவிற் காணப்படும் சில மக்கட் கூட்டத்தினருக்கும் இனமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்1 செங்கோன்றரைச் செலவு என்னும் நூலில் கடல் கொண்ட நாட்டின் சில மலைஇ ஆற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. இறையனாரகப் பொருளுரை தலைச்சங்கமிருந்த மதுரையைக் கடல் கொண்டதெனக் கூறுகின்றது. இளங்கோவடிகள் பஃறுளியாறுஇ குமரியாறு முதலியவைகளைக் கடல் கொண்டதெனக் குறிப்பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் குமரிமுனைக்குத் தெற்கே கிடந்து கடல் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளைக் குறிப்பிட்டதோடு அந்நிலப் பரப்பு 700 காவத2 முடையதெனவுங் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தியக் குடாநாட்டின் அமைப்பு வேறு வகையில் இருந்ததென்பதை நன்கு விளக்குவன.


கடல் கோள்


இவ்வுலக மக்கள் எல்லோரும் ஒரு பெரிய கடல் கோளைப்பற்றிக் கூறுகின்றனர். ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரும் அது தத்தம் நாட்டில் நிகழ்ந்ததென்பர். இக்கதை சிறிய சிறிய வேறுபாடுகளுடன் ஒரே வகையாக எல்லோராலும் கூறப்படுகின்றது. ஆகவே உலக மக்கள் மத்திய இடமொன்றிலிருந்து பிரிந்து செல்வதன் முன் இக் கடல்கோள் நிகழ்ந்ததெனக் கருதப்படுகின்றது.3

1. The formation of Malaidives P 23,-J. S. Gardmer.
2. காவதம் 10 கல் தூரம்.
3. When the ancestors of Indians. the Pereans, the Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together within the same onclosures. Nay under the same roof, Lectures on the science of language.--1864-Maxmuller.
Reply
#7
இந்திய மக்கள் கடல்கோளைப் பற்றிக்கூறும் வரலாறு சதபதப் பிராமணத்தில் (கி. மு. 1300) முதன்முதற் காணப்படுகின்றது. வடமொழி நூலிற் றனித்து நிற்கும் கதையாயிருப்பதால் இது அக்கேடியரிடமிருந்தோ தமிழரிடமிருந்தோ ஆரியருக்குக் கிடைத்ததென வரலாற்று நூலார் கூறுகின்றனர். சதபதப் பிராமணத்திலும் புராணங்களிலும் கூறப்படும் வெள்ளப் பெருக்கின் வரலாறு வருமாறு:

மனு தனது காலைவழிபாட்டைச் செய்துகொண்டிருக்கும்போது ஒரு மீன் அவரது கையில் வந்தது. அம் மீன் மனுவை நோக்கிஇ "என்னைக் காப்பாற்று நான் உன்னைக் காப்பேன்; ஒரு வெள்ளப் பெருக்கு எல்லா வுயிர்களையும் அழித்துவிடும்" என்றது. அவர் மீனை ஒரு முட்டியுள் விட்டார். அது பெரிதாக வளர்ந்தபோது அவர் அதனை ஒரு குளத்தில் விட்டார். அது இன்னும் பெரிதானபோது அவர் அதைக் கடலுள் விட்டார். பின்பு மீன் அவரை ஒரு தோணி செய்யும்படி வேண்டிற்று. மனு அப்படியே செய்தார். வெள்ளப் பெருக்கு நேர்ந்தது. மீன் தலையில் ஒற்றைக் கொம்புடன் வந்தது. மனு கொம்பில் ஒரு கயிற்றைக் கட்டினார். மீன் அவரை வடமலைக்குக் கொண்டு போய்விட்டது. மீன்இ "யான் உன்னைச் காப்பாற்றிவிட்டேன்இ தோணியை மரத்திற் கட்டுஇ" என்று மனுவிடங் கூறிற்று.

மாபாரதத்தில் இவ் வரலாறு வேறு வகையிற் கூறப்படுகின்றது. வைவசுதமனு வைசாலவனத்தில் தவஞ் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது மீன் ஆற்றங்கரையில் வந்து மற்ற மீன்களைப் பார்த்துத் தன்னைக் காக்கும் படி கேட்டது. மனு அம்மீனை எடுத்துச் சாடியில் விட்டார். பின் மேற்கூறியவாறு சொல்லப்படுகின்றது. மனு புழுது குடிகளுடனும் பலவகை விதைகளுடனும் தோணியில்
ஏறினார். மீன் தோணியை இமயமலைக்குக் கொண்டு போயிற்று. அத்தோணி ஒரு மரத்திற் கட்டப்பட்டது. பின்பு அம்மீன் இருடிகளை நோக்கிஇ "யானே பிரமா; யான் மீன் வடிவெடுத்து உங்கள் எல்லோரையும் காத்தேன்இ" எனக் கூறிற்று.

பாகவத புராணத்தில் இவ்விடம் தென்னிந்தியா வென்று கூறப்பட்டுள்ளது. அதில் மனு அல்லது சத்திய விரதன் திராவிட வேந்தன் எனக் கூறப்படுகின்றான். அங்கு மனு மலைய மலையில் ஊற்றெடுத்து வருகின்ற கிருதமாலையில் (வையையில்) பலி செலுத்தும்போது மீன் அவருடைய கையில் வருகின்றது.

புராணங்கள் பழைய ஞாபகங்களை ஒரளவிற் கூறியுள்ளன. இவ் வரலாற்றுள் சில உண்மைகள் இருக்கின்றன என்பது மறுத்தற்கில்லை. பு£ராணங்கள் பிற்காலங்களில் கூட்டியும் திருத்தியும் குறைத்தும் எழுதப்பட்டுள்ளன.1

1. In the 4th century (A. D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written-collected works of R. G. Bhandarkar Vol. 11, P. 444.
Reply
#8
காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான்இ அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப்பட்டது. இவ்விடங்களிலெல்லாம் சர்ப்பமும் இடபமும் பரிசுத்த முடையனவாகக் கருதப்பட்டன. இவ்விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தௌ¢ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளன சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம்.

"செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரேவகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார்.1

"நீலாறுஇ தைகிரஸ்இ சிந்துஇ கங்கைஇ இந்து ஆசியாஇ ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன0.2" (இவை ஒரேவகை அமைப்புடையன.)

"அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கி யோரா யிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்."

"அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு

ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்கஇ அமெரிக்கஇ பசிபிக்கியஇ யப்பானியஇ கோறியஇ திராவிடஇ தாத்தாரியஇ பின்னியஇ துருக்கியஇ பாஸ்க் மொழிகள் சேர்ந்தன."
"ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக் கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது."1

"பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர். திராவிட (துரூயிதிய - னுசரனை)க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல்மார்துக்2 எனப் பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார்.3 அவ்வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்குஇ திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக்கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது."

"பகற் (டீயயட) கடவுளும்இ பலிபீடமும்இ இடபமும் (சூரியனைக்குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000-க்கும் கி. மு. 5000-க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (னுசயரஎயனய) திராபட (னுசயியனய) என்னும் பெயர்கள் பெரிதும் காணப்படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்."4

"திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியாஇ இறான் முதலிய தேசங்களில் காணப்படுகின்றன. மிந்தனி5 என்னுமிடத்தில் பேசப்பட்ட மொழி இக்காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது."1

"சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தியருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்."

"தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்."2

"தென்னிந்திய ஆலயங்களும் சீனா யப்பான் (வுழசii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (குபையைளெ) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டாமையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்."

"கீரேத்தா (ஊசநவந) பபிலோன் கிழக்கிந்திய தீவுகளில் 3சங்கு வாத்தியங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத்

தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிட மிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்து சீனாஇ சீனாயப்பான் வரையும் கொண்டு சென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டு போகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன."1

"சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப்பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச்சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக் கட்டைகளில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்படவில்லை. அவர்களின் எழுத்து முழுதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியாஇ சூசாஇ தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அயிப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது."

"சுமேரியர்இ இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவைகளுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப் படுகின்றபோதும் எழுதப்படுகின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்."

பிராமி எழுத்துக்கள் எல்லம் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஒரளவில் சரியாகவே கூறியுள்ளார்கள். இவைகளும் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன."1

"சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசியஇ கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரியஇ எல். எம். மினோவஇ கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுண்ட என என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்."2

டாக்டர் பாஸ்டவ் (னுச. டீயளநனழற) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவதுஇ "உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென்றும்இ நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்டமிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேடவேண்டும்இ" என்பதாகும்.1

றிவெற்ட் (சுநஎநசவ) என்னும் ஆசிரியர்இ சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா யப்பான் தஸ்மேனியாவரையும் சென்று இந்நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார்2.

ஆரம்பகாலப் பொத்தகம்3 என்னும் நூலில்இ எகிப்திய மொழிச் சொற்களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (வுயடைழச) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார்.
Reply
#9
1. In the 4th century (A. D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written-collected works of R. G. Bhandarkar Vol. 11, P. 444.
உலகமக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள்


கி. மு. 4000 வரையில் உலகமக்களை எல்லாம் ஒரு கூட்டத்தில் இணைப்பதற்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்குரிய இரண்டு ஆதாரங்கள் மொழியும், வழி பாடுமாகும். கி. மு. 4000 வரையில் கிழக்குத் தீவுகள் சீனா அமெரிக்கா சுமேரியா பபிலோன் கிரேத்தா சைபிரஸ் முதலிய தேசங்களில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான்,
காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப்பட்டது. இவ்விடங்களிலெல்லாம் சர்ப்பமும் இடபமும் பரிசுத்த முடையனவாகக் கருதப்பட்டன. இவ்விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தௌ¢ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளன சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம்.

"செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரேவகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார்.1

"நீலாறு, தைகிரஸ், சிந்து, கங்கை, இந்து ஆசியா, ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன0.2" (இவை ஒரேவகை அமைப்புடையன.)

"அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கி யோரா யிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்."

"அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு

14

ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்க, அமெரிக்க, பசிபிக்கிய, யப்பானிய, கோறிய, திராவிட, தாத்தாரிய, பின்னிய, துருக்கிய, பாஸ்க் மொழிகள் சேர்ந்தன."
"ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக் கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது."1

"பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர். திராவிட (துரூயிதிய - Druid)க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல்மார்துக்2 எனப் பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார்.3 அவ்வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்கு, திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக்கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது."

"பகற் (Baal) கடவுளும், பலிபீடமும், இடபமும் (சூரியனைக்குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000-க்கும் கி. மு. 5000-க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (Drauvada) திராபட (Drapada) என்னும் பெயர்கள் பெரிதும் காணப்படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்."4

"திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியா, இறான் முதலிய தேசங்களில் காணப்படுகின்றன. மிந்தனி5 என்னுமிடத்தில் பேசப்பட்ட மொழி இக்காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது."1

"சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தியருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்."

"தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்."2

"தென்னிந்திய ஆலயங்களும் சீனா யப்பான் (Torii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (Figians) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டாமையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்."

"கீரேத்தா (Crete) பபிலோன் கிழக்கிந்திய தீவுகளில் 3சங்கு வாத்தியங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத் தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிட மிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்து சீனா, சீனாயப்பான் வரையும் கொண்டு சென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டு போகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன."1

"சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப்பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச்சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக் கட்டைகளில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்படவில்லை. அவர்களின் எழுத்து முழுதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியா, சூசா, தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அயிப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது."

"சுமேரியர், இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவைகளுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப் படுகின்றபோதும் எழுதப்படுகின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்."


"பிராமி எழுத்துக்கள் எல்லம் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஒரளவில் சரியாகவே கூறியுள்ளார்கள். இவைகளும் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன."1

"சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசிய, கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரிய, எல். எம். மினோவ, கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுண்ட என என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்."2


டாக்டர் பாஸ்டவ் (Dr. Basedow) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவது, "உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென்றும், நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்டமிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேடவேண்டும்," என்பதாகும்.1

றிவெற்ட் (Revert) என்னும் ஆசிரியர், சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா யப்பான் தஸ்மேனியாவரையும் சென்று இந்நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார்2.

ஆரம்பகாலப் பொத்தகம்3 என்னும் நூலில், எகிப்திய மொழிச் சொற்களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (Tailor) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார்.
Reply
#10
சுமேரியரும் தமிழரும்


"சேர்யோன் மார்சலும் டாக்டர் ஹாலும் சுமேரிய மக்கள் திராவிட மக்களைத் தோற்றத்தில் ஒத்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். இது சுமேரியரும் இந்தியரும் ஒரு தொடர்பி லுள்ளவர்களென்பதை வலியுறுத்துகின்றது. இருமக்களின் தோற்றப்பொலிவும், தலையை அலங்காரம் செய்யும் முறையும் ஒரேவகையின. அரப்பாவிற் கிடைத்த குத்துவாள்கள் சுமேரியரின் அவ்வகை வாளை ஒத்திருக்கின்றன. சுமேரியர் சிந்து மக்களின் நீரருந்தும் கிண்ணங்கள் ஒரே வகையின. சிந்து மக்களின் உருளை வடிவான வெள்ளிப் பாத்திரங்கள் சுமேரியரின் கல்நார்ப் பாத்திரங்கள் போன்றன. இரு மக்களும் வாசனைப்பொடி முதலிய மேனியலங்காரப் பொருள்களை வைக்கப் பயன்படுத்திய சிமிழ்கள் ஒரேவகையின. பூச்செண்டுகள் பூமாலைகளைப் பயன்படுத்தும் வகையும், வழிபாட்டில் மிருகங்களைத் தொடர்புபடுத்தும் முறையும் இரு நாடுகளுக்கு மொத்தன. இரு நாட்டவர்களும் வண்டி செய்யும் முறையைத் தனித் தனி கண்டுபிடித்தார்களெனக் கூற முடியாது. இரு நாடுகளின் வீட்டு அமைப்புக்களையும், முத்திரை வெட்டும் முறையையும், மட்பாண்டங்களின் செம்மையையும் நோக்குமிடத்து மூவாயிரமாண்டுகளின் முன் சிந்துமக்கள் பபிலோனியரை விட உயர்நிலை அடைந்திருந்தார்கள் என்பது புலப்படும். இது இந்திய நாகரிக காலத்தின் கீழ் எல்லையாகும். அதற்கு முற்பட்ட இந்திய நாகரிக காலத்தில் வீற்றினால் பபிலோனிய நாகரிகம் தோற்றியிருத்
***** போயிருத்தல்கூடும்."1

"இன்று காணப்படும் இந்தியன் ஒருவனுடைய முகவெட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்த 20

சுமேரிய மக்களின் வடிவம் போன்றது. இக்கால இந்தியர் கிரேக்கர் இத்தாலியர்களிடையே ஆரியரல்லாத மக்களின் சாயல் காணப்படுகின்றது. உருவச் சிலைகளிலிருந்து அறியுமளவில் பழைய சுமேரியர் இந்தியாவிலுள்ள திராவிட மக்களை உடலமைப்பில் ஒத்திருந்தனர். அக்காலச் சுமேரியன் தமிழை அல்லது அது தொடர்பான மொழிகளை வழங்கும் இன்றைய ஒரு திராவிடனை மிக ஒத்திருந்தான். சுமேரியர் கடல் வழியாலும் தரைவழியாலும் தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத் தாக்குகளை அடைந்த இந்திய மக்கள் என்பது இருக்கக் கூடாததன்று. இவர்களின் நாகரிகம் இந்தியாவிலே சிந்துநதிப் பள்ளத்தாக்குளில் வளர்ச்சியடைந்திருக்கலாமென்று யான் எண்ணுகின்றேன்.1

உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியாளர் உலகின் ஆங்காங்கு வசதியும் மக்களின் உடற்கூறு, மொழி, வழிபாடு ஆதியன ஒத்திருத்தலை இவ்வாறு ஆங்காங்குக் காட்டியிருக்கின்றனர். இவை மக்களின் ஒரு பொது உற்பத்தியையும் சிறப்பாகத் தமிழரின் பழமையையும் நன்கு விளக்குவன. மக்கள் வளர்ச்சி நூலார் (Anthropologists) ஓர் ஆதித் தாய் தந்தையரினின்றே உலகமக்கள் பெருகினார்கள் என வலியுறுத்துவர்.

உலகிலே மிகப் பழைய மனித எலும்பு யாவாதேசத்திற் கிடைத்தது. இதன் காலம் ஐந்திலட்சம் ஆண்டுகள் எனப்படுகின்றது. ஆகவே விஞ்ஞானிகள், பூமியின் மத்தியிற்கிடந்த பெரிய கண்டத்திலேயே மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனத் துணிகின்றனர். அவ்வாறாயின் பெரிய வெள்ளப்பெருக்கு, பூமத்தியில் விளங்கிய கண்டத்தில் நிகழ்ந்ததாகலாம் எனக் கூறுதல் பிழையாகாது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)