Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த.பு.கவிடம் கணக்கு கேட்டு மூக்குடைபட்ட......
#1
புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்க ஜே.வி.பி.க்கு எவ்வித அருகதையுமில்லை|: ஜே.வி.பி. தமிழ் எம்.பி.க்கு ரவிராஜ் பதில்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 06 பெப்ரவரி 2005ää 9:17 ஈழம் ஸ
'வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ää முஸ்லிம் மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் தனியார் வானொலி நிகழ்ச்சியின் விவாதமொன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கடுமையாகக் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (05.02.05) நடைபெற்ற இந்த விவாதத்தில் சுனாமிக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது. இதில் கருத்து வெளியிட்ட ரவிராஜ்ää

'தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் அவர்கள் வேறுபல கணக்குகள் காட்ட வேண்டியிருக்கிறது. அதனை இறுதியாக சவால்களை உங்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன்" எனத் தெரிவித்தார்.

'தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேற்று இன்றல்ல கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரிந்து வந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு சிங்கள அரசுகள்ää சிங்கள பேரினவாதிகள் பனடோல் வில்லைகளைக் கூட அனுப்பாத நிலையிலேயேää தமிழ் மக்கள் வாடி வதங்கிய அந்த நேரத்திலேயே அவர்களைப் பாதுகாத்தவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான்." எனவும் ரவிராஜ் குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு 'அன்று பொருளாதாரத் தடை விதித்தவர்கள் அன்றைய ஐ.தே.க. அரசாங்கம்" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியபோதுää

ரவிராஜ் அதற்கும் கடுமையாகப் பதிலளித்தார். 'தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி ஜே.வி.பியும் ஒன்றுதான். நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நாம் யாருக்கும் அடிபணிந்தவர்கள் அல்ல என்பதனையும் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் யாரிடமும் கையேந்திப் பிழைப்பவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய இனவாத மட்டைகள். அவர்களுக்கு நாம் சரியான பாடத்தை படிப்பிப்போம்" என ரவிராஜ் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

'இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைப் பற்றி பேசுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்கிறீர்கள். இந்நாட்டு மக்கள் உங்களிடம் சில கணக்குகள் கேட்க விரும்புகிறார்கள். முதன் முதலாக இந்நாட்டில் ஆயுதத்தை ஏந்திப் போராடியவர்கள் நீங்கள். 71ம் ஆண்டு சொந்த மக்களையும்ää அரச படைகளையும் கொன்று குவித்தவர்கள் நீங்கள். 88ää 89ää 90ம் ஆண்டு காலப்பகுதியில் துண்டுப் பேப்பரை அனுப்பி இந்திய பருப்பு சாப்பிட்டவர்களை கொன்று குவித்தவர்கள் நீங்கள்.

உங்களை கேட்க விரும்புவது இதுதான். இன்று நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பார்த்து ஏந்திய ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இன்று வரையில் நீங்கள் வைத்திருந்த ஆயுதங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்திருக்கின்றீர்களா? உங்களிடம் இருந்த ஆயுதங்களின் தரங்கள்ää உங்களிடமிருந்து ஆயுதங்களின் பட்டியல்களை இன்றுவரை வெளியிட்டிருக்கின்றீர்களா? உங்களால் கொள்ளையிடப்பட்ட வங்கிகள் எவ்வளவு? அங்கே எவ்வளவு தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டது? எவ்வளவு கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டது? அப்பாவி மக்கள் அடகுவைத்த நகைகள் கொள்ளையடித்த விபரத்தை வெளியிட்டிருக்கின்றீர்களா?

உங்களால் கொல்லப்பட்ட அரசியல்வாதிகளுடைய பெயர்களை நீங்கள் வெளியிட்டிருக்கின்றீர்களா? ஏன் நீங்கள் இன்று சந்திரிகா அம்மையாரின் சீலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அவரின் கணவரைக் கொன்றவர்கள் கூட நீங்கள்தான். உங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பட்டியலை முதலில் வெளியிடுங்கள்.

கொழும்பு மாவட்ட பிரதி மேயர் அசாத் அலி கூறியது போன்றுää ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய கட்சி இன்றுவரை இத்தகைய தகவல்களை வெயிடவில்லை. ஆகவே நீங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்காதீர்கள்."

இவ்வாறு ரவிராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாதத்திலிருந்து சுடப்பட்டது நன்றி தமிழ்நாதம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
நன்றி
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)