Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமையல் டிப்ஸ்
#1
1. நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது கோதுமை மாவும், சிறிது ரவையும் சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் வந்திருந்த என் மாமியாருக்கு தோசை செய்து போட்டேன். அப்போது ஊருக்குப் போனவர்தான் மாமியார், இன்னும் வரவேயில்லை. மாமியார் தொல்லையுள்ளவர்கள் இந்த தோசையைச் செய்து பார்க்கலாம்.


2. நிறைய செய்து வைத்திருந்த பஜ்ஜி மாவில் பல்லி விழுந்து விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது என் கணவர் தனது குடிகாரத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். குடித்துக் கொண்டே பஜ்ஜி போட்டு எடுத்துக் கொண்டு வா என்று ஒரே ரகளைதான் போங்கள், நான் வேறுவழியின்றி அந்த பஜ்ஜி மாவிலேயே பஜ்ஜி போட்டு கொடுத்தேன்.( பஜ்ஜியை என் கணவருக்கு மட்டும் கொடுக்கவில்லை ). சில மணிநேரங்களில் என் கணவரின் நண்பர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். விஷச்சாரயம் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் என் கணவர் அதன் பின்னர் குடிக்கவேயில்லை என்பதுதான் நல்ல விஷயம். உங்கள் வீட்டிலும் இது போன்று பஜ்ஜிமாவில் பல்லி விழுந்தால் இதைச் செய்து பாருங்கள்,


3. இட்லி நிறையச் சுட்டு மீந்து விட்டதா கவலைப்படவேண்டாம். அந்த இட்லியை மீண்டும் அரைத்து தோசை சுடலாம். அந்த தோசை கண்றாவியாக இருக்கிறது என்று யாரும் சாப்பிடாமல் மீந்து விட்டால் கவலையை விடுங்கள், அந்த தோசைகளையும் தோசை மாவையும் சேர்த்து அரைத்து கொஞ்சம் கறுவேப்பிலை, கொத்துமல்லி, வினிகர், கடலைமாவு, கொஞ்சம் சோயாஸாஸ், கொஞ்சம் பெருங்காயம் (பழைய மாவு நாற்றம் போவதற்காக), கொஞ்சம் பாதாம் பருப்பு, கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய், அரைக்கிலோ சர்க்கரை போட்டு அரைத்து நிறைய கோதுமைப்பால் ஊற்றி ஹல்வா கிண்டுங்கள். நிச்சயம் தின்றுவிடுவார்கள். என்ன போட்டாய் என்று யார் கேட்டாலும் சொல்லிவிடாதீர்கள்.


4. கத்தரிக்காய் ரசம். ஐந்து பேருக்கு தேவையான அளவுக்கு கத்தரிக்காய் சாம்பார் செய்யுங்கள். சாம்பார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றுங்கள். நன்றாக கலக்குங்கள். இப்போது, எவ்வளவு தண்ணீர் ஊற்றினீர்களோ அவ்வளவு சாம்பாரை மேலாக எடுத்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். இப்போது கத்தரிக்காய் சாம்பாரும் ரெடி, கத்தரிக்காய் ரசமும் ரெடி. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதே வகையில் மாங்காய் ரசம், உருளைக்கிழங்கு ரசம், முருங்கக்காய் ரசம் அனைத்தும் செய்யலாம். என் கணவர் சாம்பார், ரசம் என்று சாப்பிட்டுவிட்டு, எப்படித்தான் இப்படி வீட்டுக்கு ஓடாய் உழைக்கிறாயோ என்று பாராட்டினார். நீங்களும் அவ்வாறு பாராட்டைப் பெறலாம்,

-வானம்பாடி-
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது கோதுமை மாவும், சிறிது ரவையும் சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் வந்திருந்த என் மாமியாருக்கு தோசை செய்து போட்டேன். அப்போது ஊருக்குப் போனவர்தான் மாமியார், இன்னும் வரவேயில்லை. மாமியார் தொல்லையுள்ளவர்கள் இந்த தோசையைச் செய்து பார்க்கலாம்.
பாவங்க மாமியார்.. எதக்கும் மாமி வரட்டும் முயற்சிசெய்து பாக்கலாம்.. (வாலாட்டினால் மட்டும்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
Á¡Á¢Â¡¨Ã Å¢Ãð¼ þôÀÊÔõ ´Õ ÅÆ¢ :roll: :roll: :roll:
Reply
#4
ஏன் பெண்களுக்குப் பெண்களே எதிரியா இருக்காங்க..இவர்கள் எப்படி ஆண்களை மட்டும் இதய சுத்தியோட அரவணைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறது....??! :roll: :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
என்னங்க இது.. மாமியார் என்றால் அம்மா மாதிரி மருமகள் என்றால்.. மகள் மாதிரி.. ஒரு சிலர் தான். பிரச்சனை பண்ணுறாங்க.. இப்ப மருமகளைக்கொடுமைப்படுத்தில மாமனாரும் இருக்கினம் தானே.. ஒரு சிலது இப்படித்தான்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:என்னங்க இது.. மாமியார் என்றால் அம்மா மாதிரி மருமகள் என்றால்.. மகள் மாதிரி.. ஒரு சிலர் தான். பிரச்சனை பண்ணுறாங்க.. இப்ப மருமகளைக்கொடுமைப்படுத்தில மாமனாரும் இருக்கினம் தானே.. ஒரு சிலது இப்படித்தான்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்க என்ன இலட்சியப் பெண்ணாட்டம் கனக்கப் பேசுறீங்க...இதையெல்லாம் கடைப்பிடிக்கிற தைரியம் இருக்கா...இல்ல கனபேர் ஏட்டுச் சுரக்காயில கெட்டிக்காரர்..அதுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஓ இலட்சியப்பெண்கள் இப்படித்தான் பேசுவாங்களா..?? :wink: :mrgreen: நம்ம மனசில தோன்றினதைச்சொன்னம்.. தைரியம் நிறைய இருக்கு.. இனி காலம் பதில் சொல்லும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
ஏங்க இங்க எப்படியும் எழுதலாம்...யாரு உங்க எதிர்காலத்தக் கவனிக்கப் போறாங்க என்ற துணிவிலதானே இத்தனையும் புளுகுறீங்க..ஏங்க பெண்களே இப்படி இருக்கீங்க...புளுக்குப் பெட்டிகளா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
இத்தனை சீக்கிரம் புரிஞ்சிட்டீங்க பறவாய் இல்லையே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
Quote:ஏங்க இங்க எப்படியும் எழுதலாம்...யாரு உங்க எதிர்காலத்தக் கவனிக்கப் போறாங்க என்ற துணிவிலதானே இத்தனையும் புளுகுறீங்க..ஏங்க பெண்களே இப்படி இருக்கீங்க...புளுக்குப் பெட்டிகளா...!

ஏன் குருவிகள் அண்ணா அப்படிச் சொல்லுறிங்கள்
மானிடர் விசயத்தில் ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கில் பார்க்க முடியாது தானே அண்ணா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#11
Quote:நம்ம மனசில தோன்றினதைச்சொன்னம்.. தைரியம் நிறைய இருக்கு.. இனி காலம் பதில் சொல்லும்..
தமிழினி அக்கா எவ்வளவு தைரியமான பொண்ணு பார்த்திங்களா அண்ணா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#12
இது போல இன்னும் இருந்தால் சொல்லுங்கள்.. என்ட ஆசிரியர் தவறாமல் ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கு வந்து தொல்லை கொடுக்கிறா...அவவுக்கு இப்படி ஒன்று சொன்னால் நல்லா இருக்கும். :mrgreen:
[size=16][b].
Reply
#13
Quote:இது போல இன்னும் இருந்தால் சொல்லுங்கள்.. என்ட ஆசிரியர் தவறாமல் ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கு
அப்படியே மாக்ஸ்சையும் அள்ளிப்போடுவாவோ..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)