Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுக்கு அதிக இடமா? வழங்கவே முடியாது என்பதில் ......
#1
பொதுக் கட்டமைப்பில் புலிகளுக்கு அதிக இடமா?
வழங்கவே முடியாது என்பதில் அரசு விடாப்பிடி!
அதனாலேயே இழுபறி நீடிப்பு
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து இலங்கைத் தீவை மீளக் கட்டியயழுப்புவது தொடர்பான பணிகளைக் கையாள்வதற்கான பொதுக்கட்டமைப்பை அரசும், புலிகளும் சேர்ந்து உருவாக்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது.
பிரதேச ரீதியில் அமைக்கப்படவிருக்கும் கட்டமைப்பில் புலிகளுக்கு உரிய பெரும்பான் மைப் பங்கு அளிப்பதில்லை என்ற முடிவில் அரசு விடாப்பிடியாக - தீவிரமாக - இருப்பதே இந்த இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு - கிழக்குப் பிரதேச செயலணி ஒன்றை உருவாக்குவதற்குப் புலிகள் யோசனை தெரி வித்துள்ளனர். அந்தப் பதினொரு பேரில் அறு வர் புலிகளாலும், ஏனைய ஐவர் (மூன்று முஸ் லிம்கள் மற்றும் இரு தமிழர்கள்) அரசாலும் நியமிக்கப்படலாம் என்பதே புலிகளின் யோசனை.
ஆனால், அரசுத் தரப்பினால் ஐவரும் (மூன்று முஸ்லிம்கள் மற்றும் இரு சிங்களவர்களும்) புலிகளின் தரப்பில் ஐவருமாக மொத்தம் பத்து உறுப்பினர்களும் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதியால் ஒரு நிறைவேற்று அதிகாரியும் இச் செயலணிக்கு நியமிக்கப்படலாம் என்பது ஜனா திபதி தரப்பு ஆலோசனை என்று கூறப்படு கின்றது.
வடக்கு - கிழக்குப் பிரதேச செயலணியில் புலிகளுக்கு அதிக இடமளிப்பதன் மூலம் நிர் வாக அதிகாரம் புலிகளுக்குப் போவதற்கு இட மளிக்க முடியாது என ஜனாதிபதி அடித்துக் கூறிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த சனியன்று கிளிநொச்சியில் நோர்வே அனுசரணைக் குழு சார்பில் நோர்வேத் தூது வர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்தபோதும் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட் டில் மாற்றம் இல்லை என்பதே தெரிவிக்கப் பட்டதாக அறியவந்தது.
இதனால், பொதுக்கட்டமைப்புக்கான இணக் கப்பாடு எட்டப்படாமல் இழுபறிப்படும் நிலை நீடிக்கின்றது.
இந்தச் செயலணியின் நிர்வாக அதிகாரம் புலிகளுக்குச் சார்பாகச் செய்வதை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கடு மையாக எதிர்க்கும் என்ற காரணத்தைக் காட் டியே அதற்கு இணங்க முடியாது என ஜனா திபதி தெரிவித்துவருகின்றார்.
ஆனால், ஒருபுறம் ஜே.வி.பியைத் தூண்டி விட்டு அந்த நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத் தச் செய்துகொண்டே மறுபுறத்தில் மீள்கட்டு மானப் பணியில் தமது அரசு இயந்திரத்தைப் பலப்படுத்தித் தாம் நினைத்ததைச் சாதிக்க முயல்கிறார் ஜனாதிபதி என்ற அதிருப்தி நிலைப் பாடு புலிகளின் தலைமைக்கு ஏற்பட்டிருப் பதாகத் தெரிகின்றது.
பொதுக்கட்டமைப்பில் இணக்கநிலை எட்டு வதற்கான வாய்ப்புகள் அருகிவருவதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
:evil: :twisted: :evil: :evil: :evil: :evil:
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)