02-08-2005, 06:06 PM
கௌசல்யன் கொலை செய்யப்பட முதல் இராணுவத்தினரால் இறந்துவிட்டதாக வெளியிடப்பட்ட போராளிகளின் பட்டியல்.
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 குமரப்பா
மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மீதும் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தப்படுவதற்க முதல் இரண்டு மணித்தியாலம் முன்னராக கௌசல்யன் உட்பட மூன்று போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையரச இராணுவத் தகவல்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கியமை தாக்குதலை மேற்கொண்டது அரச படைகள் என்பதனை உறுதிபடுத்தியுள்ளது. மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் மதிமாறன் குமணன் ஆகியோர் கருணா குழுவினரால் கொல்லப்பட்டதாக அரச இராணுவ தரப்பினர் ஆங்கில ஊடகங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவல் இலங்கை நேரம் பிற்பகல் 6 மணியளவில் பரிமாறப்பட்டது. ஆதேநேரம் கௌசல்யனுடன் இறந்த போராளிகளின் பெயர் வேறாகவே இருந்தது. எனினும் மட்டு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் பயணம் செய்த வாகனம் இரவு 7.45 அளவில் தாக்குதலுக்கு உள்ளானதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் இன்னெருவர் இறந்ததாகவும் இராணுவம் தகவல்களை வெளியிட்டிருந்தது.
சமாதான காலத்தில் ஒருதலைப்பட்சமான மறைவு யுத்தத்தை கிழக்கு மாகாணத்தில் கட்டவிழ்த்து நாடத்திவரும் இலங்கையரசு அதனை கருணா குழு என்று கூறி அரசியல் மற்றும் இராணுவ நலன் தேடிவருவதுடன் ää பல போராளிகள் இக்காலப்பகுதியில் இராணுவத்தால் கொலை செய்யபடுவதற்கு முதல் கொலைசெய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் ஊடக செய்தி வெளியிட்டு வருவதுடன் அதே நடைமுறையினை நேற்றைய சம்பவத்திலும் கையாண்டுள்ளது.
இதே நேரம் இக்கொலையினை கருணாகுழு என்ற பெயரில் இயங்கும் இராணுவ அதிரடிப்படையினரின் விசேட தாக்குதல் பிரிவினர் செய்தனர் என்பதை வெளிப்படையாக இலங்கை அரச பணத்தில் ஜேர்மனியில் இருந்து இயங்கும் தமிழ்த் தேசவிரோத இணையமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.
Source : http://www.nitharsanam.com/?art=8659

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>