Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகளின் வித்துடல்கள் கையளிப்பு
#1
News: www.puthinam.com

போராளிகளின் வித்துடல்கள் கையளிப்பு

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் மற்றும் நான்கு போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகள் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடைபெற்றது.

பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி எஸ்.சிவபாதசுந்தரத்தின் உத்தரவின் பேரில் இந்த உடலங்கள் நேற்றிரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யனின் வித்துடல் வைத்தியசாலையிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் மன்முணை இறங்குதுறை ஊடாக பண்டாரியாவெளியிலுள்ள அவரது தாயின் இல்லத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது. மண்முனை - கொக்கட்டிச்சோலை இறங்குதுறை வரை பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இன்று அதிகாலை வரை அங்கு வைக்கப்பட்டு பின்னர் அம்பிலாந்துறையிலுள்ள அவரது மனைவியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்று அங்கிருந்து நேரடியாக பட்டிருப்பு பாலம் வழியாக அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் மக்களின் அகவணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நாளை அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அகவணக்கத்திற்காக வைக்கப்படும்.

இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றி இதுவரை எத்தகைய தகவலும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை குறிப்பிட்ட சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய மூன்று போராளிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி ஆகியோரின் உடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து தற்போது அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் கொழும்பிலிருந்து இன்று அவரது திருக்கோவில் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு பொது மக்களின் அகவணத்திற்காக வைக்கப்படவுள்ளது.
Reply
#2
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
[b]
Reply
#3
வீரவணக்கங்கள்
do or die, Raman
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)