Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை முழுவதும் ராணுவம் உஷார்
#1
விடுதலைப்புலிகள் மோதல்: இலங்கை முழுவதும் ராணுவம் உஷார்

கொழும்பு, பிப். 9_

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முயற்சிகளை நார்வே தூதுக்குழு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அங்கு இப்போது புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கிழக்கு பகுதி தளபதி கருணாவும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரன் தலைமையில் ஆன விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள்.

கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் கவுசல்யன் உள்பட 5 விடுதலைப்புலிகள் பலியானார்கள். வன்னி பகுதிக்கு விடுதலைப்புலிகள் திரும்பிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலின் போது குண்டு பாய்ந்து காயம் அடைந்த அம்பாரை தொகுதி முன்னாள் எம்.பி. அரிய நாயகம் நேரு என்பவரும் ஆஸ்பத்திரியில் பலியானார்.

கருணா ஆதரவாளர்களின் இந்த திடீர் தாக்குதல்களுக்கு இலங்கை ராணுவம் பின்னணியில் இருப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கருணா ஆதரவாளர்கள் மீண்டும் இதே போன்ற தாக்குதல்கள் நடத்தலாம் என்பதால் விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள்.

சமரச முயற்சியில் இலங்கை அரசு மீதும் விடுதலைப்புலிகள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.

இதனால் பெரிய அளவில் மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம் என்று தெரிகிறது. கருணா கோஷ்டியும் விடுதலைப்புலிகளும் பயங்கரமாக மோதும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்பட முக்கிய நகரங்களில் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. ராணுவ முகாம்களிலும் கூடுதல் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

Maalaimalar
-----------------------------------------------------------------------



<b>கருணா படை திடீர் தாக்குதல் புலிகளின் முக்கியதலைவர் கவுசல்யன் சுட்டுக்கொலை - பதில் தாக்குதலுக்கு பிரபாகரன் தயார் - இலங்கையில் பரபரப்பு </b>

கொழும்பு, பிப்.9- புலிகளின் முக்கிய தலைவர் கவுசல்யனை கருணாபடை திடீர் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது. பதில் தாக்குதலுக்கு புலிகள் தரப்பு தயாரானதால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாவட்ட தளபதியாக இருந்த கர்னல் கருணா புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் அல்லவா? அதையடுத்து புலிகள் அமைப்பு கருணா ஆதரவு படையினர் மீது தாக்குதல் தொடுத் தது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நடந்த அந்த போரில் கருணாவின் படை தோற்று ஓடியது. கருணா கொழும்பு நகருக்கு தப்பியோடி அங்கு இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் தங்கியுள்ளார். அவரது ஆட்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காடுகளில் பதுங்கியிருந்து சமயம் கிடைக்கும் போது புலிகள் இயக்கத்தினரை தாக்கி வருகிறhர்கள். கருணாவின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இலங்கை ராணுவமும் புலிகளை தாக்கி வருகிறது.

இ;ந்தநிலையில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல்பிரிவு தலைவரான இ.கவுசல்யன் நேற்றுமுன் தினம் இரவு அம்பாறை பகுதி;யில் சுனாமி சேதத்தை பார்வையிடுவதற்காக வன்னிப்பகுதியில் இருந்து ஒரு வேனில் அம்பாறைக்கு புறப்பட்டார். அவருடன் அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் எம்.பி.யான அரியநாயகம் சந்திராநேரு மற்றும் சில புலிகளும் உடன்சென்றனர்.

அவர்களது வேன் மட்டக்களப்பு மாவட்டம் வெலிகண்டா அருகே வந்தபோது கருணாவின் படையைச் சேர்ந்தவர்கள் அந்த வேனை வழிமறித்து திடீர் தாக்குதல் நடத்தி னார்கள். இருதரப்பினருக்கும் இடையில் 10 நிமிடநேரம் சண்டை நடந்தது. அதில் கவுசல்யன் மற்றும் புலிகளின் கிளிநொச்சி பகுதி நிதிக் குழு தலைவர் தமிழேந்தி மதிமாறன், குமணன் ஆகிய புலிகள் பலியானார்கள். பலத்தகாயமடைந்த அரியநாயகம் சந்திரா நேரு பின்னர் மருத்துவமனையில் பலியானார். புலிகள் தரப்பில் கவுசல்யனையும் சேர்த்து இ;ந்த தாக்குதலில் 6 புலிகள் பலியாகி உள் ளனர்.

புலிகள் அமைப்பின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான கவு சல்யனின் மரணம் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யன் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், புலிகளின் செல்வாக்கை கிழக்கு மாவட்டங்களில் குறைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் கருணா ஆதரவாளர்கள் கவுசல்யனை தீர்த்துக் கட்டியிருப்பதாக கருதப்படுகிறது.

போர் வெடிக்குமா?

புலிகளின் முக்கிய தலைவரான கவுசல்யன் கொல்லப்பட்டதால் கிழக்கு இலங்கையில் பதுங்கியிருக்கும் கருணா ஆதரவுப்படை யினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கவுசல்யன் மீது நடந்த தாக்கு தலில் இலங்கை ராணுவப் படை யினருக்கும் தொடர்பு இருப்பதாக புலிகள் அமைப்பு நேற்று குற்றம் சாட்டியுள்ளது. கரு ணாவின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இல*ங்கை ராணுவத்தினர் தாக்கி வருவதாக புலிகள் குற்றம் சாட்டிவருவதால் அவர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தெரிகிறது. இதனால் இலங் கையில் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


Dinakaran
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ரொம்ப நல்லாவே செய்தி போட்டு இருக்கிறாங்க

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தோன்றியுள்ள முறுகல் நிலையில் இப்படி எல்லாம் செய்வாங்க...

இலங்கையில் குந்த விடாதபடியால் தானே இந்த விபரீதம்..
என்ன ஐயா இந்தியா
உங்கட அதிகாரப்பிரச்சனைக்கு தமிழர்களா கிடைத்தார்கள்..

உங்களோட பிரச்சனை என்றால் அம்மாவை பாகிஸ்தானுக்கு அனுப்பினால்
நீங்கள் அம்மாவை ஈரானுக்கு அனுப்புறீயள்...

இப்படியே உங்கட இரண்டு பேருடைய புத்தியைக்கேட்டு தொலையப்போவது இலங்கை தான்

தமிழர்கள் விரைவில் ஈழம் அமைச்சுப்போடுவாங்க
அதை மறந்துவிடாதீங்கோ....

உங்கட ஆட்டம் எல்லாம் கனநாளைக்கு இல்லைப் பாருங்கோ..
every one will die one day
Reply
#3
¦¿ø¨Ä Å¢¨¾ò¾Å÷¸û «ÚŨ¼ ¦ºöо¡§É ¬¸§ÅñÎõ.. À¡Åõ «Å÷¸û À¡Ð측츢Èõ ±ñÎÅ¢ðÎ ÍõÁ¡ ¸¡ø ¸Îì¸ ¿¢ì¸¢È¡÷¸û. ±í§¸ :?: ±ô§À¡ :?: ¡¨Ã :?: :?: ±¾¢÷À¡ò¾¢Õí¸û.. ¯í¸û ¡ú ¸Çò¨¾.. ͼîͼ ¦ºö¾¢¸û.. ÅÃ측ò¾¢Õ츢ýÈÉ.. ÁÈóÐÅ¢¼¡÷¾¢ì¸û Ò¾¢Éò¨¾.. 8) Àçġ¸õ §À¡¸ô§À¡Å¾üìÌ ¸¡ò¾¢ÕìÌõ ЧḢ¸ÙìÌõ ÒÖÉ¡ö× ¿ñÀ÷¸ÙìÌõ ±ÉÐ ¯Çõ Á¸¢ó¾ Å¡úòÐì¸û.. :wink: :twisted:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Reply
#4
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இலங்கை இராணுவம் அறுவடைக்கு தயாராகிவிட்டது. மௌனம் காத்தால் பயம் என்று தவறாக புரிந்துகொண்டது இராணுவத்தின் தவறு. அடுத்த சுனாமிக்கு இலங்கையை அழைத்தச்செல்ல சந்தரிகா தயாராகிவிட்டா.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
Vaanampaadi Wrote:அவர்களது வேன் மட்டக்களப்பு மாவட்டம் வெலிகண்டா அருகே வந்தபோது கருணாவின் படையைச் சேர்ந்தவர்கள் அந்த வேனை வழிமறித்து திடீர் தாக்குதல் நடத்தி னார்கள். இருதரப்பினருக்கும் இடையில் 10 நிமிடநேரம் சண்டை நடந்தது. அதில் கவுசல்யன் மற்றும் புலிகளின் கிளிநொச்சி பகுதி நிதிக் குழு தலைவர் தமிழேந்தி மதிமாறன், குமணன் ஆகிய புலிகள் பலியானார்கள்.

Dinakaran
?????
Reply
#6
எவன்ய அது தினகரன் செய்தியை யாழ்ல போட்டது அவனுக்கு தமிழேந்தி யார் என்றே தெரியேல்ல அதுக்குள்ள பலியானார் என்று வேற செய்தியா???? அதை கட் பண்ணாமக களத்தில ...
______________________________
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)