Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரமுகிக்காக மல்லுக்கட்டும் சன், ஜெயா!
#1
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini380.jpg' border='0' alt='user posted image'>சந்திரமுகிக்காக மல்லுக்கட்டும் சன், ஜெயா!

சந்திரமுகி டிவி உரிமையை வாங்க சன் டிவியும், ஜெயா டிவியும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

தமிழில் பட பூஜை தொடங்கியவுடனேயே அந்தப் படத்தின் உரிமையை வாங்கும் அளவுக்கு சன் டிவியிடம் பண பலம் உள்ளது அனைவருக்கும் தெரியும். விட்டால் படங்கள் சன் டிவியிலேயே நேரடியாக ரிலீஸ் ஆகும் போலிருக்கிறது.

திரைக்கு வரும் பெரும்பாலான சமீபத்திய படங்களின் டிவி உரிமையை சன் டிவிதான் வைத்துள்ளது, தொடர்ந்து வாங்கி குவித்தும் வருகிறது. சமீப காலமாக ஜெயா டிவியும், ராஜ் டிவியும் சன்னுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் புதுப படங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.

இதனால் 3 பேருக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடக்கிறது. இடையில் ராஜ் டிவி சற்று தொய்ந்து போனதால், ஜெயாவுக்கும், சன்னுக்கும்தான் இப்போது புதுப் படங்களை வாங்குவதில் நேரடிப் போட்டி நடந்து வருகிறது.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini380a.jpg' border='0' alt='user posted image'>

இப்போது சந்திரமுகி படத்தின் உரிமையைப் பெறுவதிலும் இரு டிவிக்களும் கடுமையாக மோதி வருகின்றன. சமீப காலத்தில் வந்த ரஜினியின் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் சன் டிவிதான் வாங்கி வைத்துள்ளது. இதில் கடைசியாக வந்த பாபாவும் அடங்கும்.

அதேபோல சந்திரமுகியையும் வாங்க கடும் பிரயத்தனத்தில் சன் டிவி இறங்கியுள்ளது. ஆனால் ரஜினிக்கும், திமுகவுக்கும் இப்போது நல்ல நட்பு இல்லை என்பதால் சந்திரமுகியை வாங்குவதில் சன் டிவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


சன் டிவிக்கு சந்திரமுகியை விற்பதில் ரஜினிக்கும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஜெயா டிவிக்கு படத்தை விற்க ரஜினி பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் என்ற வகையில் இறுதி முடிவை சிவாஜி பிலிம்ஸ் எடுக்கலாம் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டாராம்.

சசிகலா குடும்பத்தினருக்கு சிவாஜி குடும்பம் சம்பந்தி முறை தான் என்பதால் ஜெயா டிவி சார்பில் சுமூகமாகப் பேசியே படத்தை வாங்கிவிட முயற்சி நடக்கிறது. பிரபுவுக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது அதீத மரியாதை உண்டு என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் முன்னணித் தொலைக்காட்சியான சன் டிவிக்கு எப்படி நோ சொல்வது என்ற குழப்பத்தில் சிவாஜி பிலிம்ஸ் உள்ளதாம். பட ரிலீசின்போது சன் டிவி மூலமாக விளம்பரம் பக்கபலமாக இருக்குமே என்பதால் தயாரிப்பாளர்களான ராம்குமாரும் பிரபுவும் கொஞ்சம் குழப்பத்தில் தான உள்ளதாகத் தெரிகிறது.

சன் டிவியோடு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுகவையும் பகைக்க வேண்டுமே என்ற டென்சனும் உள்ளதால் இப்போதைக்கு பட உரிமையை விற்காமல் தள்ளிப் போடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.

இருந்தாலும் சன் டிவி தரப்பில் தொடர்ந்து சிவாஜி குடும்பத்தாரை நெருக்கி வருகிறார்களாம். படத்துக்கு மிகப் பெரிய விலையையும் பேசி வருகிறார்கள்.

அதேபோல, ஜெயா டிவியும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று களத்தில் இறங்கியுள்ளது.

இந்த முட்டல் மோதலை ரஜினி அமைதியாக பார்த்துக்
கொண்டுள்ளாராம்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini-330.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஆனால் இங்க கூத்தாடிக்காக ரெண்டு படப்போறானுகள். எதுவாக இருந்தாலும்
நாங்கள் பார்க்கப்போறது என்னவோ கமரா கொப்பிதானே... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
:: ::

-
!
Reply
#3
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)