Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாட்டுவண்டி சக்கரத்தை சுற்றி மின்சாரம் தயாரிப்பு
#1
மாட்டுவண்டி சக்கரத்தை சுற்றி மின்சாரம் தயாரிப்பு: ஆந்திர மாணவர்கள் சாதனை

நகரி, பிப். 19_

ஆந்திர மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் ரமேஷ், பிரசன்னா சுந்தரி, சதீஷ் குமார், பரிதோஷ்குமார், நவீன் ஆகிய 5 பேர் பி.டெக் படித்து வந்தனர். இறுதி ஆண்டில் அவர்கள் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதுபோல வேறு எந்த வகையில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆய்வில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டியிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று அவர்கள் கண்டுபிடித்த னர்.

மாட்டு வண்டி சக்கரம் நிமிடத்திற்கு 7 அல்லது 10 முறை சுற்றுகிறது. 6 மணி நேரம் சக்கரம் சுற்றினால் 1 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று கண்ட றிந்தனர்.

இந்த ஆய்வு குறித்து மாண வர்கள் நிருபர்களிடம் கூறிய தாவது:_

மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நவீன கருவியை மாட்டு வண்டியில் பொருத்த வேண்டும். வண்டி சக்கரம் சுற்றும் போது உருவாகும் மின்சாரம் தனியாக ஒரு பேட்டரியில் சேகரித்து வைக்கப்படும். அந்த மின்சாரத்தை பல வகைகளிலும் பயன்படுத்தலாம்.

வீட்டில் மின்விளக்கை எரிய வைப்பதற்கும் டி.வி.யை இயக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

கூடுதலாக மின்சாரம் தயாரித்தால் தெரு விளக்கு எரிய வைப்பதற்கு கூட பயன்படுத்த முடியும்.

மாட்டு வண்டி மூலம் மின் சாரம் தயாரிப்பதால் விவ சாயிகளுக்கும் அதிக வரு மானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மாட்டுவண்டி மூலம் மின் சாரம் தயாரிப்பது எப்படி என்று ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் நவீன கருவிகள் மூலம் விளக்கி கூறினார்கள்.

இந்த முறையில் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டு பிடிக்க 3 மாதம் கஷ்டப் பட்டதாகவும் விஞ்ஞானி டேவிட் தங்களுக்கு உதவி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)