Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் மழை
#1
[size=12] உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது
உச்சியிலே சுள்ளென முறைக்கும்
சாய்ந்தாடும் மரஞ்செடியும்
சலனமின்றி விறைக்கும்.

ஊரெல்லாம் புழுங்கும்
உடல்களெல்லாம்
வியர்வை வெள்ளம்விழுங்கும்.

அடர்மர முற்றமதில்
சுற்றமொன்றாய்க்கூடும்
சிறுசுகளும் பெருசுகளும்
விசிறிகொண்டு வீசும்
நாசியிலே புழுதிமணம்
புதுச்சேதி ஒன்றுபேசும்.

காய்ந்த புல்லை மேய்ந்தபசு
தாகசாந்தி தேடும்
நட்டுவைத்த பயிர்களெல்லாம்
தலைகுனிந்தே வாடும்.

வாய்பிளந்த பூமியது
நீலவானை நோக்கும்
பொறுமையன்றோ உனது பண்பு
என்று வானம் கேட்கும்.

தூரவான இடியோசை
காற்றின் சிறை உடைக்கும்
சில்லென்றதென்றல் வந்து
புதிய யுகம் படைக்கும்.

தபஸ் கலைந்த மரங்களெல்லாம்
கல கல எனச்சிரிக்கும்-இலைகளை
பொல பொல என உதிர்க்கும்.

தொலை வானில்
தலை காட்டும் கொண்டல்-அதை
மெல்ல மெல்லத்தள்ளிவரும் தென்றல்.

சிருங்காரக்காற்றுக்கு
சினதாய் வெறி பிடிக்கும்
அப்பாவி மரங்களை உலுப்பி அடிக்கும்,
துகிலுரிக்கும்...,
இலையாடை களைந்து
நிர்வாணமாய் நிறுத்தும்.

வானமது இருள இருள
வனரங்கள் மருள மருள
கார்முகிற்காடெங்கும்
மின்னல்ப்பூக்கள் மொட்டுவிடும்
சட்டென்று பட்டு விடும்.

மயில்க்கூட்டம் தோகைவிரிக்க
மான்கூட்டம் துள்ளிச்சிரிக்க
புள்ளினங்களெல்லாம்
புதுச்சிறகு கொண்டு பறக்கும்
இடியோசை கேட்ட
தரணி இனிச்சிறக்கும்.

வானமகள் ஆர்ப்பரிக்க
பூமியவள் தான்சிலிர்க்க
உள்ளமெங்கும் புதுச்சந்தோச வெள்ளம்
கோடையின் சோகச்சுமையினை அள்ளும்.

தொலைவினிலே தடதடத்து
பக்கத்தில் படபடத்து-என்
தலையினிலே சடசடத்து
சோவெனத்தொடங்கும் பெய்ய
புது மாரியைத்தொடக்கியே பைய
இந்த மார்கழியின் முதல் மழை.

NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply
#2
முதல் மழையை அழகாக வர்ணித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)