Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டுமொரு ஏமாற்று நாடக அரங்கேற்றமா?
#1
புலிகளின் யோசனைக்கு அரசாங்கம் இணக்கம்

இடைக்கால தன்னாட்சி அதிகாரம் குறித்து பேச்சுக்கு தயாரென அரச சமாதான செயலகப் பணிப்பாளர் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கும் வட, கிழக்குக்கான இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையை அடிப்படையாக வைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தேசிய சமாதான பேரவை நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்திய போர்நிறுத்த உடன்படிக்கையின் மூன்றாண்டு நிறைவையொட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜயந்த தனபால அரசின் இந்த முடிவை வெளியிட்டார்.

அவர் இங்கு பேசுகையில் கூறியதாவது:-

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை ஏற்படுத்திய பின்னரே சமாதானப் பேச்சுகளை தொடர முடியுமென அறிவித்திருந்தது. ஆனால், அதில் சில சிக்கல்கள் காணப்பட்டதால் அதனைச் செய்வதில் அரசு தயக்கம்காட்டி வந்தது.

எனினும், இவ் விடயத்தை மிக ஆழமாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க முடிவு செய்திருக்கின்றார்.

இதன் பிரகாரம் முதலில் வடக்கு, கிழக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை அமைக்கப்படும். அதன் பின்னர் இறுதித் தீர்வை நோக்கிய பேச்சுகளை ஆரம்பித்து தொடரப்படும்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான நோக்கிலேயே அரசாங்கம் இந்த முடிவு எடுத்துள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடித்த விடயத்தில் அரசு பூரண திருப்தி கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பேணவும் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்த அறிக்கையில்,

வடக்கு, கிழக்கில் இடைக்கால அதிகார சபையொன்றை அமைப்பது குறித்தும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது குறித்தும் விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசு தயாராயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு நேற்று 22 ஆம் திகதியுடன் 3 ஆம் ஆண்டு நிறைவடைவதையொட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தொடர்ந்தும் பாரிய அளவிலான யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் பல பெறுமதிமிக்க உயிர்கள் காக்கப்பட்டு பரவலான அழிவு தடுக்கப்பட்டுள்ளது பற்றி திருப்தியைத் தெரிவிக்கும் அதேவேளை, சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொண்ட போதிலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பெறப்படும் நிரந்தரத் தீர்வொன்றுக்கான சாதகமான சூழல் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதையிட்டு அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

அரசாங்கத்தை பொறுத்தவரை, சொல்லிலும் செயலிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான அதன் உறுதியான ஈடுபாட்டை அரசு வலியுறுத்துகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி தேவைகளை நிறைவு செய்வதற்காக இடைக்கால அதிகார சபையொன்றை அமைப்பது பற்றி புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்தவும் இனப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வொன்றுக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் தொடர்ந்தும் அது தயாராகவுள்ளது.

சகல இலங்கையரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்கு ஏதுவாக எமது நாட்டிலிருந்து யுத்தத்தின் துன்பத்தையும் அரசியல் வன்செயல்களையும் களைய சம்பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பை வழங்குவர் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த பூர்த்தியை முன்னிட்டு இலங்கை அரசு தனது வழமையான மேற்குறிப்பிட்ட அறிவித்தல்களை உள்நாட்டிலும், சர்வ தேசத்திலும் தவள விட்டுள்ளது. இவ்வறிவிப்பானது உண்மையிலேயே பேச்சு வார்த்தை மூலம் இலங்கையின் புரையோடிப் போயுள்ள இனப்பிரட்சனையை தீர்ப்பதற்காக, இலங்கை அரசு கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடா? அல்லது ..

1) இன்று சர்வதேசத்தினால் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்குமாறு கொடுக்கப் பட்டுவரும் அழுத்தங்களை சமாளிக்கும் ஓர் ஏமாற்று வித்தையா?

2) சுனாமியின் பின் இலங்கையின் பொருளாதாரம் பல முன்னேற்றங்களைக் கண்டது. ஆனால் மீண்டும் உறுதியளிக்கப்பட்ட இவ்வுதவிகள் வராததனால், ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. இதனால் இவ்வுதவிகளைப் பெறுவதற்காக சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னொரு நாடகமா?

3) பலத்த யுத்த ஏற்பாடுகளை தொடங்கிய இலங்கையரசிற்கு, அவர்களுடைய எசமானர்கள் இன்னும் சிறிதுகாலம் இழுத்தடித்து புலிகளைப் பலகீனப் படுத்தலாம் எனக்கூறிய அறிவுரைகளின் வெளிப்பாடா?

4) யுத்த நிறுத்தத்தை பேச்சுவார்த்தைகள் எனும் நாடகத்தில் இழுத்தடித்து இன்னும் பல படுகொலைகளைத் தொடருவதற்கோ? பிரதேச வாதங்கள், இனப்பூசல்கள் போன்றவற்றை தென் தமிழீழத்தில் முனைப்பாக்குவதற்காகவோ? ...

.... இந்தப் பேச்சுவார்த்தை நாடகத்தை மீண்டுமொருமுறை அரங்கேற்ற முற்படுகிறது?
"
"
Reply
#2
இலங்கை அரசின் ஒருநாடக அறிவிப்பு வந்த சூடு அடங்குமுன்பே அடுத்தடுத்து பல கிலைமாக்ஸ்ஸுகள் நடந்தேறிவிட்டன. .

1) நேற்று முந்தினம் யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உறையாற்றிய சிங்களத்தின் பிரதமர் ராஜபக்ஸ "அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆனால் விடுதலைப் புலிகளுடன் பேசத்தாயாரில்லையாம்!"

2) ஜெ.வி.பியானது அரசின் பேச்சுவார்த்தை சம்பந்தமான அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தாம் அரசிலிருந்து வெளியேறுவோம் என எச்சரித்துள்ளது.

3) இன்று நாடக உச்சக் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கரஸானது அரசிலிருந்து வெளியேறியுள்ளது!

... இதில் ராஜபக்ஸவின் அறிவிப்பானது, அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இலக்காக வைத்து வெளியிடப்பட்டதாகும். ஜெ.வி.பியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திபதற்காக ஜெ.வி.பியை திருப்திப் படுத்தும் செயற்பாடு.

இரண்டாவது ஜெ.வி.பியின் அறிவிப்பில் ஏதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே வழமையான இனவாதக் கும்பலின் இனக்குரோத வெளிப்பாடு.

இதில் இன்று நடந்த கிளைமாக்ஸான இ.தொ.காவின் அறிவிப்பின் உள்நோக்கம், பின்னனி, நேரம் ஆச்சரியமாகவுள்ளது. இவ்வறிவிப்பில் பிராந்திய வல்லரசென்று கூறும் நாட்டுடைய கை பலமாகவேயிருக்கும். இந்த சமாதான பேச்சில் எவ்விதத்தில் விருப்புகளற்ற இந்நாடானது பலவடிவங்களில் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளைக் குழப்புவதற்குத் தொடங்கியுள்ளது. கிழக்கில் "கருனாவின் பெயரால்" படுகொலைகள், கொலைப்பயமுறுத்தல்கள் என செயற்படுத்திவந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை அறிவிப்பு சர்வதேச அழுத்தங்களால் வந்தவுடன் இலங்கையின் அரசையே கவிழ்த்து பேச்சுவார்த்தையை குழப்ப முற்படுகின்றது. இதற்கான நடவடிக்கையே , அவர்களின் எடுபிடிகளான இ.தொ,காவின் ராஜினாமா நாடகம்.
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)