Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு
#1
இலங்கை பாராளுமன்றத்தில்
அதிபர் சந்திரிகா கட்சி மெஜாரிட்டி இழந்தது
தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு வாபஸ்


கொழும்பு, பிப்.26-

தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற தால் இலங்கை பாராளு மன்றத்தில் அதிபர் சந்திரிகா கட்சி மெஜாரிட்டி இழந்தது.

கூட்டணி கட்சி மிரட்டல்

இலங்கையில் அதிபர் சந்திரி காவின் இலங்கை விடுதலை கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ராஜ பக்சே பிரதமராக இருக்கிறார்.

சந்திரிகாவுக்கு 39 எம்.பி.க் களை கொண்ட மார்சிஸ்டு மக்கள் விடுதலை முன்னணி, 8 எம்.பி.க்கள் கொண்ட சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தமிழர் கட்சி ஆகியவை ஆதரவு கொடுத்து வருகின்றன.

மார்சிஸ்டு மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த கட்சி சமீபத்தில் அதிபர் சந்திரிகாவுக்கு மிரட்டல் விடுத் தது. விடுதலைப்புலிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி ஒப் பந்தம் செய்ய கூடாது. அப்படி ஒப்பந்தம் செய்தால் ஆளுங் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்தது.

தமிழர் கட்சி விலகல்

இந்த மிரட்டலை தொடர்ந்து ஆளும் கூட்டணியில் பிளவு ஏற் பட்டது. தமிழர் கட்சி (சிலோன் தொழிலாளர் காங்கிரஸ்) ஆளுங் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றது.

இந்த தகவலை தமிழர் கட்சி யின் மூத்த எம்.பி.யான ஆர். யோகராஜன் நேற்று அறிவித் தார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி வரிசையில்...

``சந்திரிகா அரசில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். பாராளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்கள் 8 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவார்கள். சில முக்கிய வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மெஜாரிட்டியை இழநëதது

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 225 ஆகும். ஆளுங்கட்சிக்கு 119 எம்.பி.க்கள் ஆதரவு இருந்து வந்தது. தமிழர் கட்சி எம்.பி.க்கள் 8 பேரும் ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் ஆளுங்கட்சி பலம் 111 ஆக குறைந்து விட்டது.

ஆகவே அதிபர் சந்திரிகாவின் கட்சி மெஜாரிட்டியை இழநëது விட்டது. ஆட்சிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் சுமூக மாக பேச்சு நடத்தி இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் தான் சந்திரிகா அரசுக்கு தமிழர் கட்சி ஆதரவை கொடுத்து வந் தது. அந்த முயற்சிக்கு இடைïறு ஏற்பட்டுள்ளதால் தமிழர் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிய வருகிறது.

பங்கு மார்க்கெட் சரிவு

இந்த அரசியல் நெருக்கடி எதிரொலியாக இலங்கை பங்கு மார்க்கெட்டில் 0.2 சதவீதம் சரிவு ஏற்பட்டது.




லூ ஈஹகூஙீட் பகுஹஙூஞ்குகூ 1999.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)