02-26-2005, 11:11 AM
தமிழினம் பொறுமையின் விளிம்பில்
நிற்பதை உலகிற்கு உணர்த்துவோம்
3ஆண்டு நிறைவையயாட்டி பத்மினி சிதம்பரநாதன் அறிக்கை
தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வரும் தமிழ் இனம் பொறுமையின் விளிம் பில் நிற்கின்றது என்ற செய்தியை சர்வ தேச சமூகத்துக்கு உரத்துச் சொல்லவேண் டிய நேரம் வந்துவிட்டது.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத் மினி சிதம்பரநாதன்.
அரசு - புலிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டு கள் பூர்த்தியடைந்ததையயாட்டி விடுத்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:-
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டதால் மக்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத் திருக்கின்றது. ஆனால், தீர்வு கிடைக்க வில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இன் னும் மீட்கப்படவில்லை. உழைப்புக்கான அவர்களின் வளம் பொருந்திய நிலங்கள் மீட்கப்படாது உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்திடம் உள்ளன.
உழைப்புக்கான அவர்களின் கடல் களில் சுதந்திரமாகத் தொழில் செய்யும் நிலைமை இன்னும் வரவில்லை. அது கடற் படையிடம். ஆனால், மறுபக்கம் தெற்கில் வாழ்க்கை சுமுகம் அடைந்துள்ளது. கொழும்புத் தெருக்களில் அச்சமின்றி நட மாடமுடிகின்றது. தெற்குப் பொருளாதாரத் தைப் பலப்படுத்த முடிந்தது. இந்த வகை யில் கிடைத்த ஆறுதலில் கூட இனங்க ளுக்கிடையே சமமற்ற தன்மை இருக்கின்றது.
இந்த நேரத்தில் தெற்கில் உள்ள அர சியல் கட்சிகள் அர்ப்பணிப்புடனும் நேர் மையுடனும் முழுமூச்சாகப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வுகாண உழைக்காமல் தமது பதவிப் போட்டிகளில் ஈடுபட்டு வரு கின்றன. இதனால் 3வருடங்களாக பேச்சு இழுத்தடிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல தமது இனவாதக் குரோதங்களையும் அடிக் கடி வெளிப்படுத்துகின்றனர்.
இது தமிழ் மக்களுக்கு வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டி பொறுமையின் எல்லைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதைச் சர்வதேசத்திற்குத் தமிழ் மக்கள் எல்லோரும் சேர்ந்து தெரியப்படுத்தவேண் டும். ஏனெனில், சர்வதேசம் யுத்தமின்றிய நிலைமையை மபெரும் சாதனைடு எனக் கருத்திற்கொண்டு ஆறுதல் அடைந்துவிடக் கூடும் என்ற மனக்கிலேசமும் தமிழ் மக்களுக்கு உண்டு.
நாம் பாடுபட்டது யுத்தமில்லாத நிலை மையை மட்டும் அடைய அல்ல. தமிழ் மக் கள் யுத்தத்தை விரும்பவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமி ழர் தாயகப் பகுதிகளில் உரிமைகள் புறக் கணிக்கப்பட்டு அபிவிருத்தி புறக்கணிக்கப் பட்டு தமிழ்மக்கள் அழிக்கப்பட்டபோதுதான் வேறு வழியின்றி யுத்தத்தை தெரிவுசெய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
நாங்கள் அடிப்படையில் வேண்டுவது சுதந்திரத்தை. இதனை நாம் உலகத்துக் குச் சொல்லவேண்டும். இதற்கென நாங் கள் கிராமம் கிராமமாகவும் பிரதேசங்க ளாகவும் மாவட்டங்களாகவும் தேசம் தழு வியும் அணி திரள்வதற்கு இச்சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தவேண்டும். - என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
உதயன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>