02-26-2005, 12:40 PM
சுனாமி அனர்த்த தரவுகள் மாயமாக மறைவு
25 02 2005
சுனாமியின் பின்னர் முதல் ஒரு மாதத்தில் தயாரிக்கப்பட்ட சேத விவரங்கள் அடங்கிய முக்கியமான அரசாங்க தரவுகள் காணாமல் போயுள்ளதாக கொழும்பு செய்தியொன்று தெரிவிக்கின்றது. தேசிய நடவடிக்கைகளுக்கான மையம் என்ற அண்மையில் மூடப்பட்ட அரசாங்க பணிப்பகம் திரட்டிய தரவுகளில் சுனாமி சேதம் பலியானோர் வெளிநாட்டு உதவி பற்றிய முக்கிய விவரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நடவடிக்கைகளுக்கான மையத்தின் தலைவராக இருந்த தாரா டி மெல் பதவி விலகியதுடன் அவருக்கு கல்வித் துறையில் பதவி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மையம் மூடப்பட்டு அதன் பொறுப்புக்கள் தேச நிருமான பணிக்குழு என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
செய்திகோவை

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>