Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகள்
#1
குடந்தை அருகே அதிசயம்
குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகள்

குடந்தை,பிப்.26_

குடந்தை அருகே குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர்.

குடந்தையை அடுத்த திருவலஞ்சுழியை சேர்ந்த புதுப்படையூர் மாதா கோயில் தெருவைச்சேர்ந்தவர் விஜயா (30), விதவையான இவருக்கு வெண்ணிலா (10), தேவயானி (6), முத்து (5) நித்யா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.

அவருடைய ஜீவனத்திற்கு கஷ்டப்பட்டு கூலி வேலை பார்க்கும் விஜயாவுக்கு பிறந்த முத்து, நித்யா இரண்டு குழந்தைகளும் பிறந்தது முதல் உருவ ஒற்றுமையில் குரங்கை போலவே உள்ளன. இக்குழந்தைகள் பேச முடியாமலும், பசி என்றால் சாப்பாடு என கேட்கமுடியாமலும் உள்ளதுடன், குரங்கு சேட்டையில் தங்களது சைகைகளை காட்டிவருகின்றனர். கோபம் வரும் போது குழந்தைகள் இரண்டும் கடுங்கோபத்துடன் சீறுவது பார்ப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.

முரட்டு சுபாவம் கொண்ட இந்த குழந்தைகளை பராமரித்து வரும் தாயின்இக்குழந்தைகள் எதிர்காலத்தை எண்ணி மிகவும் கவலைப்பட்டு வரும் நிலையில் இங்கே சேவை மையம் நடத்தி வரும் குடந்தை துர்கா மாதர் சங்க தலைவி ராஜாத்தி நமது நிருபரிடம் கூறியதாவது

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் அசல் குரங்கின் சாயலுடன் பிறந்துள்ள இக்குழந்தைகளை பற்றி ஆய்வு செய்ய மருத்துவ ஆலோசனை பெறவோ விஜயாவால் முடியவில்லை. மேலும் இருதய நோயாளியான விஜயாவால் பெண் குழந்தை இரண்டையும் படிக்கவைக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த குழந்தைகளை பராமரிக்கவும் முடியவில்லை. அரசு சிறப்பு கவனத்துடன் கருணை அடிப்படையில் இக்குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு பி.வி.ராஜாத்தி கூறினார்.

தினபூமி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Cry Cry Cry Cry Cry Cry
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)