Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஜே.வி.பி. எம்.பிக்களின் உயிருக்கு
விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்!
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சு றுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பி. அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பண்டார.
கடந்த வாரம் ஜே.வி.பியினர் கூட்டிய செய்தியாளர் மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்த ஊடக வியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களது கருவிகளும் அடையாள அட்டைகளும் சோதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஜே.வி.பியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான பண்டார என்பவரிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் கூறியதாவது:-
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளால் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக செய்தியா ளர்களைச் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இதனைப் பெரிதுபடுத்தி விமர்சிக்கத் தேவையில்லை - என்று பதிலளித்தார்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பௌத்தத்திற்கு புலிகள் முன்னுரிமையளித்தால்
பிரபாகரன் ஆண்டாலும் ஆட்சேபனையில்லை அதுரலியே ரத்ன தேரர்
சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்க புலிகள் முன்வருவார்களாயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்நாட்டை ஆட்சி செய்தாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை என ஜாதிக ஹெல உறுமய வின் பாராளுமன்றக்குழு தலைவர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சிங்கள இனத்துக்காக வாதாடும் ஒரே கட்சி ஜாதிக ஹெல உறுமய மட்டும்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்பதை உறுதி செய்ய புலிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், சிங்களவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று இருப்பதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக், கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என இரு பிரதான கட்சிகள் இந்நாட்டில் உள்ளன. அத்துடன், மூன்றாவது சக்தியாக மக்கள் விடுதலை முன்னணியும் செயற்படுகின்றது. ஆனால், சகல கட்சிகளும் இலங்கை பௌத்த, சிங்கள நாடு என்பதை குறிப்பிட்டுக் கூறுவதில்லை. இது பல்லின மக்கள் வாழும் நாடு என்றே கூறுகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி செல்வந்தர்கள் சார்ந்ததாகவே செயற்பட்டு வருகின்றது. சுதந்திரக் கட்சியும் ஆரம்ப காலத்தில் பௌத்த மதத்தை சார்ந்ததாக செயற்பட்டாலும் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடும் மாற்றமடைந்து வருகின்றன.
மக்கள் விடுதலை முன்னணியும் ""இலங்கை மக்கள்'' என்ற பதத்தை பயன்படுத்துகின்றதே தவிர பௌத்த, சிங்கள மக்கள் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை.
இந்நாடு சிங்கள, பௌத்த மக்களுடையது என்பதை எமது ஜாதிக ஹெல உறுமய கட்சி மட்டுமே தொடர்ந்து கூறி வருகின்றது.
தற்போது அமுலில் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் பௌத்த, சிங்கள மக்களுக்கு சாதகமானதாக இல்லை. இது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய பௌத்த, சிங்கள மக்களின் உரிமைகளுக்காக போராடும் என்பதை உறுதிபடதெரிவிக்கிறேன் என்றார்.
வீரகேசரி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பௌத்த சிங்கள ஸ்ரீலங்காவை அழித்து தமிழ் கிறிஸ்தவ ஈழத்தை அமைக்க முயற்சி - சர்வதேச சமூகத்தை சாடுகிறார் வீரவன்ச
பௌத்த ஸ்ரீலங்கா இராஜ்யத்தை அழித்தொழித்து விட்டு தமிழ் கிறிஸ்தவ தமிழ் ஈழத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலையே சர்வதேச நாடுகள் தற்போது இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைந்து மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஒரு போதும் எமது இராஜ்யத்தை பலவீனமடையும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாதென்றும் தெரிவித்தார்.
கொழும்பு, விஹாரமகாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மார்ச் 2 ஆம் திகதியை "மீள் அடிமைத்தனத்திற்கு எதிரான தினமாகவும்" 2005 ஆம் ஆண்டையும் மேற்படி ஆண்டாக பிரகடனப் படுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றபோதே எம்.பி.யும் இவ்வியக்கத்தின் இணைத் தலைவருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்டி உடன்படிக்கை 1815 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடன் கைச்சாத்திட்டபோது ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் பிரிட்டிஷ் தேசியக் கொடியை கீழிறக்கி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வை நினைவு கூருமுகமாகவே இத்தினம் மீள் அடிமைத்தனத்திற்கு எதிரான தினமாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ்ச்செல்வனும் மறந்த இடைக்கால நிர்வாக சபை யோசனை தமிழீழம் தொடர்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளே இங்கு வந்து வீடு திரும்பும் போது புலிகளுடன் பேசுமாறும் தேசிய இணக்கப்பாடுடன் செயற்படுமாறும் கூறிவிட்டுச் செல்கிறார்கள்.
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துவதில் சர்வதேச சமூகமும் டொலர்களுக்காக இங்கு செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே மேற்கொண்டு வருகின்றன.
உலக பயங்கரவாத பட்டியலில் உள்ள ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத ஆயுதக் குழுவான புலிகளுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு நியாயமாகும்.
இது போன்று அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும்- பின்லேடனும் தேசிய இணக்கப்பாட்டுன் செயற்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தால் அதை புஷ் ஏற்றுக் கொள்வாரா?
எமது இராஜ்யத்தை பலவீனப்படுத்தி அதனை சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதே சர்வதேச நாடுகளின் திட்டமாகும்.
கடல்கோளுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் இலங்கைக்குள் புகுந்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதோடு, பிரிவினைக்கான திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறதென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இயக்கத்தின் இன்னுமொரு இணைத் தலைவர் தம்பர அமிலதேரர் உட்பட மத்திய குழு செயற்குழு உறுப்பினர்களும் பெருந்திரளான மக்களும் பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
`நோர்வே எதிரிநாடு' ஹெல உறுமய அறிவிக்கும்
இலங்கையின் எதிரி நாடாக தாங்கள் நோர்வேயை அறிவிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறி வருகையில், நோர்வே அரசு அதனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருப்பதாகவும், ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
நோர்வேயின் இந்த மௌனத்தை எதிர்த்தே, தாங்கள் அந்த நாட்டை இலங்கையின் எதிரிநாடாக அறிவிக்கவுள்ளதாகவும் ஹெல உறுமய கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின், பாராளுமன்ற குழுத்தலைவர் வண. அத்துரலியே ரத்ன தேரர் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கிளாலியில் படைவீரர் ஒருவரை சுட்டுக்கொன்றும் மற்றொரு படைவீரரை சுட்டுக் காயப்படுத்தியும் விடுதலைப்புலிகள், போர்நிறுத்த உடன்பாட்டின் 3 ஆவது ஆண்டு, நிறைவை கடைப்பிடித்துள்ளனர்.
இந்த மூன்றாண்டு காலத்தில் புலிகள் 600 இலங்கையரை கொன்றுள்ளனர். 5000 தடவைகள் உடன்பாட்டை மீறியுள்ளனர். சிறுவர்களை படைகளுக்குச் சேர்த்து அவர்களின் கைகளில் ஆயுதங்களையும் கொடுத்துள்ளனர்.
மாற்றுக் கருத்துள்ள தமிழ் கட்சி உறுப்பினர்களை கொன்றுவருவதுடன் வேறு வகையான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், நோர்வே அரசோ, போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ, இவற்றுக்கெதிராக எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேநேரம், நோர்வே, பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது.
கௌசல்யனின் கொலை தொடர்பாக நோர்வே வெளியிட்ட அறிக்கை அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இது எமது நாட்டின் ஒற்றுமைக்கு நோர்வே செய்யும் துரோகமாகும்.
இதனால், இலங்கையின் எதிரி நாடாக நோர்வேயை அறிவிக்க தாங்கள் தயங்கப் போவதில்லையெனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியில் பெருந்தொகை கிளிநொச்சிக்கே செல்கிறது
<b>இந்நிறுவனங்கள் விடுதலை புலிகளை விடபயங்கரமானவை என்கிறார் விமல் வீரவன்ச</b>
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/March/04/art.jpg' border='0' alt='user posted image'>
விடுதலைப் புலிகளை விட பயங்கரமானவர்கள் இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் சர்வதேச ஸ்தாபனங்களும் இவர்கள் தான் இன்று. புலிகளுக்கு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்காக எமது ராஜ்யத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என ஜே.வி.பி. யின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்ற சாட்டுகிறார்.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாநாடு கடந்த புதன்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற போது அங்கு பேசிய போதே எம்.பி.யும் இவ்வியக்கத்தின் இணைத் தலைவருமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
1815 ஆம் ஆண்டில் கண்டி ராஜதானியை காட்டிக் கொடுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது தான் ஹிக்கடுவை ஷ்ரீ சுமங்கல தேரர் பிரிட்டிஷ் தேசியக் கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். இது போன்ற வீரம் எமக்குத் தேவை.
யுத்தத்தின் மூலம் ஆக்கிரமிக்க முடியாத கண்டி இராஜதானியை அன்று வெள்ளைக்காரன் தந்திரத்தால் ஆக்கிரமித்தான். அதற்காக ஜோன் டொய்லியை வெள்ளைக்காரன் பயன்படுத்தினான்.
இந்த ஜோன் டொய்லி சிங்கள மக்களுடன் நெருங்கிப் பழகினார். வெற்றிலை போட்டார். மகாநாயக்க தேரர்களை வணங்கினான். ஷ்ரீ விக்கிரம ராஜசிங்கவுக்கு மது அருந்தக் கொடுத்தார். இது போல நெருங்கிப் பழகித்தான் கழுத்தறுக்கப்பட்டது. அதே நிலைமை இன்று தோன்றியுள்ளது.
எரிக் சொல்ஹெய்ம் இன்று மகா நாயக்க தேரர்களை சந்தித்து வணங்குகிறார். சிங்கள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். இதெல்லாம் அன்பல்ல, நஞ்சு. நோர்வே மற்றும் சர்வதேச நாடுகளின் நோக்கம் எமது இராஜ்யத்தை பலவீனமாக்குவதே ஆகும்.
1505 ஆம் ஆண்டில் கடல் கொந்தளிப்பினால் போர்த்துக்கேயரான லோரன்சோ டி அல்மேதா இலங்கையை வந்தடைந்தார். இன்று கடல்கோளுக்குப் பின்னர் உதவி வழங்கும் போர்வையில் எமது நாட்டை அடிபணியச் செய்ய பலர் வந்துள்ளனர். அன்று கண்டி இராஜதானியை ஆக்கிரமித்தது போல் யுத்தத்தால் அல்ல உதவி செய்யும் போர்வையில் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, இனங்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கி பலமற்ற நாடாக எமது நாட்டை வெளிக்காட்டி அடிமைப்படுத்துவதே சர்வதேசத்தின் நோக்கம்.
இதற்காகத் தான் புலிகளே மறந்து போயுள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனை, தமிழ் ஈழத்தை எல்லாம் இவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.
கடல்கோளுக்கு பின்னர் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் கொபி அனான், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன், புஷ் மற்றும் ஸ்கென்டி நேவிய நாட்டு, நோர்வே நாட்டு பிரதிநிதிகள் அனைவரும் வீடு செல்லும் போது புலிகளுடன் தேசிய இணக்கப்பட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டே செல்கிறார்கள்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்த, ராஜீவ் காந்தியை கொலை செய்த உலக பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்படுமாறு கோருவது ஜனநாயகமாகுமா? புஷ்-பின்லேடன் இணைந்து செயற்படுமாறு இவர்கள் கோருவார்களா புஷ் தான் அதை ஏற்பாரா?.
எமது நாட்டிலுள்ள ஐ.நா. பிரதிநிதிகள் கௌசல்யனின் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இதனால் யுத்தம் மூளும் என்றும் தெரிவிக்கின்றனர். இவர்க ள் யார் எமது நாட்டில் யுத்தம் வருமென ஆரூடம் கூறுவதற்கு.
இந்த சர்வதேச சூழ்ச்சிக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்தி டொலர்களை வழங்கி தமிழ் ஈழத்தை ஏற்படுத்தப் பார்த்தனர். அதுவும் இத்திட்டம் 2005 இலே நிறைவேற்றப்பட விருந்தது. தமிழ் ஈழக் குழந்தை 2005 இல் பிறந்திருக்கும். ஆனால் எம்மால் அது தடுக்கப்பட்டு விட்டது.
பிரசவிக்க முடியாத தமிழ் ஈழத்தை `சீசர்' செய்தாவது வெளியில் எடுப்பதற்கு தான் இன்று அனைத்து வழிகளிலும் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் முயன்று வருகின்றன.
புலிகளும் தமிழ்ச்செல்வனும் மறந்துவிட்ட தமிழ் ஈழத்தை சர்வதேசம் தான் நினைவுபடுத்திக் கொண்டுள்ளதோடு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிக்கின்றது.
அதற்காகத்தான் நிவாரணப் பணிகளை அரசாங்கம் - புலிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை கொடுக்கிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையால் யுத்தம் நிறுத்தப்பட்டது வரவேற்கிறோம். ஆனால் புலிகள் பிரதேசம், இராணுவப் பிரதேசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதையே எதிர்க்கிறோம். உண்மையில் அது மீட்கப்பட்ட பகுதி, மீட்கப்படாத பகுதி என்றிருக்க வேண்டும். விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும்.
அத்தோடு, புலிகளுக்கு மேஜர், ஜெனரல், கோப்ரல் என பதவிப் பெயர்களை நமது ஊடகங்களும் பாவிக்கின்றன. விசேடமாக ஆங்கில ஊடகங்கள் இதனைச் செய்கின்றனன.
இங்கு வந்த ஐ.நா.செயலாளரை எவ்வாறாவது கிளிநொச்சிக்கு வரவழைக்க புலிகள் பலமுறை முயற்சித்தனர். நாம் அதனை தடுத்து விட்டோம். ஐ.தே.கட்சி ஆட்சியிலிருந்திருந்தால் போயிருப்பார். எமது அரசாங்கத்திலும் கிளிநொச்சிக்கு போகும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் கட்டுப்படுத்தியிருக்கிறோம்.
இதெல்லாம் எதற்காக, மெது மெதுவாக இராஜதந்திர அந்தஸ்தை புலிகள் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தர எடுக்கப்படும் முயற்சிகளே ஆகும்.
கடல்கோள் வந்து 5-6 நாட்களாக புலிகள் காணாமல் போயிருந்தனர். பின்னர் தான் வெளியே வந்தார்கள். அரசு ஒட்சிசன் கொடுத்தது. இந்த லட்சணத்தில் தான் அரசாங்கம் எந்த உதவியையும் வடபகுதிக்கு செய்யவில்லையென்று குற்றம் சுமத்துகின்றனர்.
இங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (‡எˆ)க்கள் நிவாரண நிதியத்தை சரிபார்க்க சர்வதேச கணக்காய்வாளர்கள் தேவை என்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்வி கேட்க அவர்கள் யார்.
உண்மையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் அதனை மில்லியன் கணக்கில் பண மோசடிகளில் ஈடுபட்டு வருமானத்தை சம்பாதிக்கின்றார்கள். மக்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையிலேயே மோசடிகளை செய்து வருகின்றனர்.
பேர்க் பவுண்டேசன் என்ற அமைப்பில் ஒரு பிரதியமைச்சரும் இணைந்து செயற்படுகிறார். புலித்தேவனின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இவர்கள் தான் மாற்றுக் கொள்கை எனக் கூறப்படும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் பத்திரிகைக்கும் நிதி கொடுத்தவர்கள்.
மோதல் தவிர்ப்பு, சமாதானம் இசைந்து போதல் என்ற பெயர்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன. அமைச்சர்கள், ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து வாங்கி, வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொக்டேயில் வைத்து கோடிக்கணக்கான ரூபாக்களை செலவழிக்கின்றது. எதற்காக நாட்டை பிரிக்க மனச்சாட்சியை விற்று சம்பாதிக்கின்றார்கள்.
இந்த அரச சார்பற்ற நிறுவனக்காரர்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்களுக்கு மனச்சாட்சியோ, தான் ஒரு இலங்கையன் என்ற எண்ணமோ கிடையாது, இருப்பது ஒன்று தான் பணத்தை கொள்ளையடிப்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது.
ஒருவர் இருக்கிறார் தேர்தல்களில் வன்முறை தடுப்பு என்ற பெயரில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனத்தில். இவர்கள் பெயரளவில் தான் இலங்கையர்கள். பணம் கோடிக் கணக்காக குவிந்துள்ளது. இவர்தான் இலங்கைக்கு நிதி கொடுக்க வேண்டாம் என்று சர்வதேசத்திற்கு தெரிவித்தவர். அரச தரப்பு உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து வழங்கி அதற்கு மேலும் வழங்கி பிரிவினைக்காக மூளைச் சலவை செய்பவர்.
கண்டி ராஜ்யத்தை காட்டிக் கொடுத்த ஜோன் டொய்யிலியின் வேலையை அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதற்காகத் தான் இலங்கையை பலவீனமடைந்த ராஜ்யம் என்பதை நிரூபிக்க அனைத்த வழிகளிலும் துரோகத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக எதையும் செய்பவர்கள்.
பௌத்த ராஜ்யத்தை அழித்தொழித்துவிட்டு தமிழ் கிறிஸ்தவ தமிழ் ஈழத்தை உருவாக்கவே சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன. நான் இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவில்லை. சூடானிலும் உட்புகுந்த நோர்வே அங்கும் சிலுவைப் போரை தொடக்கி வைத்து நாட்டை பிரித்து சின்னா பின்னமாக்கியது.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியை பெருமளவில் கிளிநொச்சிக்குத் தான் அனுப்புகிறார்கள், அரசாங்கத்திற்கு கொடுப்பதில்லை ஏன்? கிளிநொச்சிக்கு கொடுத்தால் கணக்கறிக்கையொன்றும் வெளியிடத் தோவையில்லை. இதன் மூலம் தான் பணத்தை சுருட்டலாம். அரசுக்கு வழங்கினால் கணக்கு காட்ட வேண்டுமே, சுருட்ட முடியாது. புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழக அமைப்பு இன்று பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய வாகனங்களாகும். இதன் மூலம் ஆயுதங்களும் புலிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஒரு சில வெள்ளைக்காரர்களை இவர்கள் வரவழைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை வைக்கிறார்கள். நமது ஊடகவியலாளர்களும் அங்கு போகிறார்கள். வெள்ளைக்காரன் என்ன சொல்கிறான் அது தான் பொன்மொழியென்று அப்படியே எழுதுகிறான். அவனது சுய அறிவையே அடகு வைத்துவிடுகிறான்.
இலங்கையில் எல்லைக் கிராமங்கள் என்று ஒன்றில்லை. கடல்கோளால் அழிந்த பிரதேசங்கள் தான் எமது எல்லைக் கிராமங்களாகும். இது போன்ற கருத்தரங்குகளுக்கு சென்று அநுராதபுரத்தில் எல்லைக் கிராமங்கள் என எழுதுகிறார்கள். வெள்ளைக்காரன் சொல்வதைக் கேட்டு சமாதி அடைந்துவிடுகிறார்கள். சுய புத்தியை பயன்படுத்துவதில்லை.
அம்பாறை - மட்டக்களப்பு வேலை பார்த்த கௌசல்யனுக்கு கிழக்கு மாகாண பொறுப்பாளர் என பதவி கொடுத்தவர்களும் ஊடகவியலாளர்கள் தான். ஏன் திருகோணமலை கிழக்கு மாகாணத்துடன் இல்லையா? ஏன் இதனை யோசிப்பதில்லை.
நாம் அரசுக்குள் இருக்கலாம் - வெளியில் இருக்கலாம். ஆனால், ராஜ்யத்தை பலமிழந்து விட இடமளிக்கக் கூடாது. பலத்தை பாதுகாக்க வேண்டும்.
புலிகளை விட பயங்கரமானவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் அமைப்புகள்.
இவர்கள் இன்று சிங்களவர்கள் மத்தியிலும் பிரிவினையை உருவாக்கி சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்கின்றனர். கத்தோலிக்க சிங்களவர்கள் - பௌத்த சிங்களவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கத் திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த வலையில் சிக்கி விடக்கூடாது.
இத்தருணத்தில் சிங்கள -பௌத்த சமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாட்டை பாதுகாப்பதும் அழிப்பதும் இவர்கள் கையில் தான் உள்ளது.
சிலுவைப் போருக்கோ அல்லது முஸ்லிம்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஞானத்தை பயன்படுத்தி செயற்பட வேண்டும். அனைத்து இனங்கள் மத்தியிலும் இலங்கையன் என்ற எண்ணம் மேழௌ வேண்டும்.
கட்சி பேதங்களை ஒதுக்கித் தள்ளி ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் எமது ராஜ்யத்தை பலமுள்ளதாக்கலாம். இல்லாவிட்டால் சூழ்ச்சிக்காரர்கள் நமது நாட்டை பலவீனப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுத்து விடுவார்கள். இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
பிரிவினைவாத புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் மேற்கொண்டுவரும் திட்டத்தை தோல்வியடையச் செய்ய ஒன்றுபடுவோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
செய்தி நீக்கப்பட்டுள்ளது
Vaanampaadi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>