Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் பலிவெலிக்கந்தை பகுதியில் !
ஜ வாழைச்சேனை நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 06 மார்ச் 2005ää 6:28 ஈழம் ஸ
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கெக்குராவவெளியில் நேற்றிரவு இரண்டு வீடுகள் மீது இனந் தெரியாத ஆயுதக் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் குறிப்பிட்ட வீடுகளை முற்றுகையிட்ட பத்துப்பேர் கொண்ட ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்கு முஸ்லிம்களும்ää தமிழர் ஒருவரும்ää சிங்களவர் ஒருவரும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் வெலிக்கந்தை பகுதியில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் பலி!
ஞாயிற்றுக்கிழமை 6 மார்ச் 2005 ஸ ஜ அருள் ஸ
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கொலக்குனாவவெளி நேற்றிரவு இரண்டு வீடுகள் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் குறிப்பிட்ட வீடுகளை முற்றுகையிட்ட பத்துப்பேர் கொண்ட இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு முஸ்லிம்களும் தமிழர் ஒருவரும் சிங்களவர் ஒருவரும் அடங்குகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
சுட்டபழம்
நன்றி நிதர்சனம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
கிரிமிச்;சை தாக்குதல்: படைத் தரப்புக்கு விடுதலைப்புலிகள் கடும் எச்;சரிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்பினர் பகிரங்கமாகவே சண்டைக்கு இழுக்கின்றார்கள் என விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாகரை கிரிமிச்;சை சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் கிரிமிச்;சை சம்பவம் இதனையே வெளிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அண்மைக்காலச்; சம்பவங்கள் விடுதலைப்புலிகளின் பொறுமையை உச்;ச அளவில் பாதித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை சிறீலங்கா அரசும் அதன் படைத்தரப்புமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பொலன்னறுவையில் துப்பாக்கிசூடு; ஆறு விவசாயிகள் பலி
இலங்கையில் பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கொலக்கன்னாவெளி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 6 விவசாயிகள் அடையாளந்தெரியாத ஆயுத பாணிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தின்போது ஒரு 3 வயது குழந்தை உட்பட, 3 பெண்கள் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் முஸ்லிம்கள், ஒருவர் தமிழவர், ஒருவர் சிங்களவர்.
அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரகிள் குழுவொன்று அருச்சுனன் செல்வராஜா என்ற விவசாயியையும், சாந்த விஜயசூரிய என்ற விவசாயியையும் அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்கள். சாந்த விஜயசூரியவின் 3 வயது மகள் ஒருவரும், 16 வயது மகள் ஒருவரும் காயமடைந்துள்ளார்கள்.
துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து செல்லும் வழியில் வீடொன்றிற்கு முன்பாக நின்ற முஸ்லிம் விவசாயிகள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அப்போது பெண்ணெருவர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிக்கந்தை பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட 4 முஸ்லிம் விவசாயிகளும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் என்றும், தொழில் நிமித்தம் அவர்கள் கொலக்கன்னாவெளி கிராமத்தில் வசித்துவந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிதாரிகள் யாரென்றோ, இச்சம்பவத்திற்கான காரணமோ இதுவரை தெரியவரவில்லை.
இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், இன்று காலை, சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், தமது கட்டுப்பாட்டிற்குட்பட்ட வாகரைப் பிரதேசத்திலுள்ள கிரிமிச்சையில், நேற்று சனிக்கிழமை, தங்கள் போராளிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்ததியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளந்திரையன் இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவினரிடம் இது பற்றி புகார் செய்துள்ளார்
கால்நடை ரோந்து சென்ற தமது போராளிகள் மூவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்றும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் ஒருவர் சீருடை அணிந்திருந்தார் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரிகள், அருகிலுள்ள இராணுவ முகாமை நோக்கி தப்பியோடியுள்ளார்கள் என்றும் புலிகள் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்கா புலிகளின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மட்டக்களப்பில் மேலும் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் தாசன் எனப்படும் சதாச்சரலிங்கம் கமலதாஸ், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் 26ம் திகதியும் இவர் அடையாளந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், கழுத்திலும் தலையிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் வீதியில் கிடந்ததாகவும் இவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே டெலோ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், சில காலம் அப்பிரதேசத்தில் வரதன் குழுவாக இயங்கியவர் என்றும், ஈ.பி.டி.பி.யின் ஆதரவு பத்திரிகை என கருதப்படும் தினமுரசு வாரப் பத்திரிகைக்கு குறிப்பிட்ட காலம் இடையிடையே செய்திகளை வழங்கி வந்தவர் என்றும் அப்பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
இவரது மோட்டார் சைக்கிளும், கையடக்க தொலைபேசியும் கொலையாளிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுபோல் தெரிகின்றது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிசார் கூறுகின்றனர்.
கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
BBC தமிழ் செய்தி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
<b> மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் இருவர்சுட்டுக் கொல்லப்பட்டனர</b>
மட்டக்களப்பு நகரிலும் தளவாயிலும் நேற்றும் இன்று அதிகாலையும் இருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு தளவாயில் வேலாயுதபிள்ளை இலங்கேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் இனந்தெரியாத நபர்களினால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றுடன் தொடர்புடையவர் என தெரியவருகிறது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கொக்கட்டிச்சேலையைச் சேர்ந்த அழகையா கிருபைராஜா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இராணுவத்தினருக்கு தகவல் கொடுப்பவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி மீண்டும் இன்று அதிகாலை கொழும்பு செல்வதற்காக பேரூந்து நிலயம் வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
புதினம்
...............
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
<b> அக்கரைப்பற்றுப் பகுதியில் பதற்றம் பயணிகள் மீது திடீர் தாக்குதல்</b>
வெலிக்கந்தையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூன்று விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேரின் ஜனாஸா நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதனையடுத்து நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள சில இடங்களில் திடீரென வீதிகளில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மறிக்கப்பட்டு அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், நேற்று நண்பகல் வரை அக்கரைப்பற்று , கல்முனை பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. வீதிகள் சோபையிழந்து ஒரு பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது.
விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.
தினக்குரல்
...............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஆரையம்பதியில் சுட்டுக் கொலை
மட்டக்களப்பு ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி இராஜதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சடாட்சரலிங்கம் கமலதாசன் (வயது 26) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் செயற்பட்ட அதேவேளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் உறுப்பினராகவும் தினமுரசு வாரப் பத்திரிகையின் செய்தியாளராகவும் இருந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மாவிலங்கத்துறையிலுள்ள சன நடமாட்டமில்லாத இடமொன்றில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை நேற்றுக் காலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஹேரத் தெரிவித்தார்.
இவரின் தலையிலும் காதிலும் கைத்துப்பாக்கியினால் சுடப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் மூன்று வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் இரவு 6.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவரின் காற்சட்டையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களுக்கு வழங்கும் அடையாள அட்டை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் இவர் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி படுகாயமடைந்து உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மட்டக்களப்பில் புளொட் அமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்
மட்டக்களப்பு நகரிலுள்ள புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தின் மீது இன்று பிற்பகல் அடையாளந் தெரியாத ஆட்களினால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மாவட்ட அமைப்பாளர் ரதன் எனப்படும் சுப்ரமணியம் பகீரதன் உட்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இவர்களில் கடும் காயங்களுக்கு உள்ளான காந்தன் எனப்படும் தம்பிராஜா பாலசுந்தரம் மற்றும் வெள்ளையன் எனப்படும் நாகமணி சிவராசா ஆகியோர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று மாலை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அலுவலகத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் பின் பக்க காணி வழியாகவே இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்திற்கு வெளியே உள்ள கொட்டகையொன்றில் உரையாடிக் கொண்டிருந்தவர்களே காயமடைந்ததாகவும், விசாரனைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிஸார் கூறுகின்றார்கள்.
இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீதே புளொட் அமைப்பு தமது விசாரனையின் போது சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் அன்புமாறனுடன் தொடர்பு கொண்ட போது இதனை அவர் முற்றாக நிராகரித்தார்.
வெறிச்சோடிய நிலையில் வாழைச்சேனை
இதற்கிடையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி எம்.எச்.அப்துல் ரஹீம் அடையாளந் தெரியாத ஆட்களினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேச்ஙகளில் இரண்டாவது நாளாகவும் துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த பிரதேச வழமை நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலையை கண்டித்து இன்று வாழைச்சேனையிலிருந்து ஓட்டமாவடி ஊடாக மாவடிச்சேனை வரை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.
கல்குடா முஸ்லிம் மக்கள் முன்னணி என்ற பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது இதில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ஏ.ரி.எம்.பரீத் ஒரு சாராரினால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தவிர செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரும், அவரது உதவியாளரும் மற்றுமொரு ஊடகவியலாளரின் மகனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலரினால் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று இந்த பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு தொடர்கிறது; மூவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை சந்தனமடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்கள்மாவடிவேம்பைச் சேர்ந்த 41 வயதுடைய ஆறுமுகம் நாகலிங்கம் மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவலிங்கம் பாஸ்கரலிங்கம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இந்த சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருவரது சடலங்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அஜ்மீரின் உத்தரவிற்கு அமைய உறவினரிடம் பிரேத பரிசோதனையின் பின்பு ஒப்படைக்கப்பட்டது.
இதே வேளை நேற்றிரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் விடுதலைப் புலிகளோ தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கின்றார்கள்.
தமது பிரதேசத்தில் இரண்டு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை படையினரின் சிறப்பு பிரிவினரே இதனை செய்திருக்கலாம் என சந்தேகமும் தெரிவித்துள்ளனர்.
தவிர நேற்றிரவு, ஐயன்கேனியில் 23 வயதுடைய சரவணமுத்து சிவராசா என்ற இளைஞர் அடையாளந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பிற்கு அருகே செங்கலடியில் 26 வயது இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களினால் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரிடம் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்து இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கொத்தியாபுல வைச் சேரந்த நடராசா சுவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
அம்பாறை மாவட்டம் அன்னமலை அரசியல் பணிமனையிலுள்ள போராளி ஒருவரை வீதிக்கு அழைத்து சிறிலங்கா அதிரடிப்படையினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்தது. வழமையாக அன்னமலை வீதியூடாகச் செல்லும் அதிரடிப்படையினர் நேற்று மாலை அலுவலகத்திற்கு முன்பாக வந்து போராளியான மகிந்தன் என்பவரைக் கூப்பிட்டுள்ளனர்.
பின்னர் ~நீர் இயக்கமா|| எனக் கேட்டுள்ளனர். ஆம் என்று போராளி மகிந்தன் பதில் கூறிய போது அடி விழுந்துள்ளது. ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டபோது மீண்டும் பலத்த அடி உதை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈழநாதம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) யின் திருகோணமலை மாவட்டப் பிரதம அமைப்பாளர் குஞ்சன் என்றழைக்கப்படும் விஜயதாஸ் விஜேந்திரன் (வயது 30) படுகொலை செய்யப்பட்டமையை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு, வழிபாட்டுக்குச் சென்று திரும்பி வரும் வேளையில் நேற்றுக் காலை 10.20 மணியளவில், சைக்கிளில் வந்த இரு புலி உறுப்பினர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இக்கொலைச் சம்பவமானது <b>ஜனநாயக ரீதியில் மக்களுக்காகப் பணியாற்றி வரும் மற்றும் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கையாகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.</b>
தமிழ் மக்கள் மத்தியில் தோன்றி வரும் மாற்றுக் கருத்துகளைக் கருத்துகளால் எதிர் கொள்ள முடியாத நிலையில், இவ்வாறு உயிர்க் கொலைகளின் மூலம் அழிக்க முற்படுவது இன்று ஜனநாயகத்துக்கு எழுந்துள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
தமிழ் பேசும் மக்கள் இன்று எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு விரைந்து செயலாற்ற வேண்டிய காலப் பகுதியில் தமது ஏகப்பிரதிநிதித்துவ கொள்கைகளைப் புலிகள் வலிந்து கடைப்பிடித்து வருவதையே இச் சம்பவம் எமக்கு மேலும் உணர்த்தி நிற்கிறது.
¾¢ÉìÌÃø..
§ƒ¡ùù ±¾ÅÐ ¦º¡øÖí¸ôÀ¡....(À¢Ã¨É þø¨Ä ¯ñ¨Á¸¨Ç ¦º¡ýÉ¡Öõ ÀÈš¢ø¨Ä) :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
´Õ §Å¨Ç ¿£í¸û §¸ð¸Ä¡õ ²ý ¯¨¾Ôõ ¸ÕÉ¡ÌõÀø ¦ºöЧÀ¡ðÎ (¦¸ÇºøÂ¨É ¦¸¡¨Ä ¦ºö¾Á¡¾¢Ã¢) ÒÄ¢¸û Á£Ð ÀÆ¢¨Â ÍÁò¾ìܼ¡Ð ±ñÎ?? þÕì¸Ä¡õ «¨¾ ƒÉ¡¾¢À¾¢ ¬¨ÉìÌØ¾¡ý ÓÊ× ¦ºöÔõ... :? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன கேள்வியும் நானே பதிலும் நானேவா..??? :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
tamilini Wrote:என்ன கேள்வியும் நானே பதிலும் நானேவா..??? :evil: :twisted:
«Ð츢ø¨Ä 5,6 Á¡¾Á¡ ¡ú¸Çò¾¢Ä Ìô¨À ¦¸¡ðÎÈ ±ÉìÌ þôÀÊ¦ÂøÄ¡õ §¸ð¸ÜÊ Ţñ½÷¸û þÕôÀ¡÷¸û ±ñÎ ¦¾Ã¢Â¡¾¡?? «¾¡ý ²ý ¿¡§Á ӾĢ§Ä §¸ð¸ìܼ¡Ð ±ñ¼ ´Õ ¬¨ºò¾¡ý.. :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Danklas Wrote:´Õ §Å¨Ç ¿£í¸û §¸ð¸Ä¡õ ²ý ¯¨¾Ôõ ¸ÕÉ¡ÌõÀø ¦ºöЧÀ¡ðÎ (¦¸ÇºøÂ¨É ¦¸¡¨Ä ¦ºö¾Á¡¾¢Ã¢) ÒÄ¢¸û Á£Ð ÀÆ¢¨Â ÍÁò¾ìܼ¡Ð ±ñÎ?? þÕì¸Ä¡õ «¨¾ ƒÉ¡¾¢À¾¢ ¬¨ÉìÌØ¾¡ý ÓÊ× ¦ºöÔõ... :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சுட்டது துப்பாக்கி கொன்றது துப்பாக்கி ரவை....இதுக்குப் பிறகென்ன விசாரணை வேண்டி இருக்கு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|