03-07-2005, 02:57 AM
பேரன் தேவை_பாட்டியின் விளம்பரம்
சீனாவில், பேரன் தேவை என்று ஒரு பாட்டி செய்திதாளில் விளம்பரம் செய்துள்ளார். அவரது பெயர் லியுலான். 64 வயதாகிறது. சிச்சுவான் மாநிலம் செங்க்டு என்ற ஊரைச் சேர்ந்தவர்.
இவருடைய மகனுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தனக்கு பேரன் வேண்டும் என்று அடிக்கடி மகனிடம் தகராறு செய்தும் பலன் ஏற்படவில்லை. சொந்தப்பேரன் இல்லாததால் ஒரு பேரனை தத்து எடுக்க விரும்புகிறார்.
``என்னிடம் போதுமான வசதி இருக்கிறது. ஆனால் என்னைப் பார்த்துக்கொள்ள ஒரு பேரன் இல்லை. சிறு குழந்தையுடன் கூடிய 3 பேர் கொண்ட குடும்பத்தை என் உறவினர்களாக்கி கொள்ள விரும்பு கிறேன். அவர்கள் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள் என்று 6 மாதம் பார்ப்பேன். அவர்கள் மீது திருப்தி ஏற்பட்டால் அவர்களை என்னுடன் சேர்த்துக்கொள்வேன். அதன் பின் நான் அந்தக் குழந்தைக்கு உண்மையான பாட்டியாக மகிழ்ச்சியுடன் என் வாழ் நாளை கழிப்பேன்.
இவ்வாறு அவர் விளம்பரப்படுத்தி உள்ளார். தங்களது குழந்தையை பேரனாக ஏற்றுக்கொள்ளும்படி ஏராளமான பேர் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>