Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரும பிரச்சனையா? இனி கலங்க வேண்டாம்
#1
சரும பிரச்சனையா? இனி கலங்க வேண்டாம்

பெண்களின் சருமத்தை தாக்கி அதன் ஆரோக்கியத்தையும், அழகையும் கெடுக்கும் நோய்களுள் முக்கியமான ஒன்று செதில் படை. படை படையாக வரும் இது வெள்ளைச் செதில்களாகவும் உதிரும்.

செதில் படை நோய் சருமத்தின் செல்களை வேகமாக மூப்படைய வைக்கும். ஒரு மாதத்தில் வளர்ச்சி அடைய வேண்டிய செல்கள் 3 அல்லது 4 நாட்களிலேயே வளர்ந்து முதிர்ந்து விடும். ஆனால் உதிர்வதில் மட்டும் வேகம் காட்டுவதில்லை. சருமத்தில் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும்.

நோயின் பாதிப்பு ஏற்பட்டவுடன் தொடக்க காலங்களில் சிறு சிறு வட்டங்களாக தோன்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும். சருமத்தின் மேல் புறத்தில் உறுத்தலான செதில்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். குறைந்த பட்சம் 30மி.மீ. அளவில் இருந்து 200 மி.மீட்டர் வரை படைகளின் அளவுகள் அமையும். ஓயாத நமைச்சல் இருக்கும்.

சொறிந்தால் இவை உதிரும். ரத்தக் கசிவும் இருக்கும். மருந்துகளின் ஒவ்வாமை நுரையீரல் நோய்கள், மனக்கவலை, மன உளைச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்று இதற்குக் காரணமாகும்.

பரம்பரையும் கூட இந்த பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
பெரும்பாலும் இது தொற்றுவதில்லை. நோய் கண்ட இடங்களை மிதமான சூடுள்ள வெந்நீரை ஊற்றி செதில்களை மென்மையாகத் தேய்த்து அகற்றிய பின்பு மருத்துவர் தரும் மருந்துகளைப் பூசலாம்.

சரும பாதிப்புகளுக்கு நல்ல நிவாரணம் தரக் கூடியது உயிர் சத்து டி. சூரிய ஒளியில் இருந்து இதைப் பெற முடியும். உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பதும் நல்ல பலனைத் தரும். மனதை ஒருநிலைப்படுத்தும் முறையாக தியானம் இந்த பாதிப்பிற்கு நல்ல பலன் தரக்கூடியது.

அமிலத் தன்மை கொண்ட தக்காளியை விலக்குவதுடன் இறைச்சியையும் ஒதுக்குதல் வேண்டும். இந்த நோய் ஒருமுறை வந்து குணமான பின்பு மீண்டும் வரும் வாய்ப்பும் உண்டு. சிலருக்கு ஒரு சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் ஏற்படுவதும் உண்டு. இந்த பாதிப்பை சாதாரண சொறி - சிரங்கு என நினைத்து அலட்சியமாக இருப்பது மிகவும் தவறான ஒன்று. இந்த பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மருத்துவரை நாடி உடனடியாக ஆலோசனையுடன் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)