Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்செல்வனின் எச்சரிக்கை
#1
தமிழ் மக்கள்ää விடுதலைப் போராளிகளை படுகொலை செய்யும் நிகழ்வுகளுக்கு முடிவுகட்டும் வகையில் விரைவில் தமிழீழத் தேசியத் தலைமை தீர்க்கமான முடிவை அறிவிக்க உள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்;செல்வன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அளித்த நேர்காணலில் சு.ப.தமிழ்ச்;செல்வன் இதைத் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் தமிழ்ச்;செல்வன் கூறியுள்ளதாவது:

தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் எமது போராளிகள் கொல்லப்படுவதையும் எங்களுடைய தலைவர் தொடர்ந்தும் பார்த்து சகித்துக்கொண்டிருக்க மாட்டார்.

நிச்;சயமாக எமது தலைமைப்பீடம் மிக விரைவில் இதற்கொரு தீர்க்கமான முடிவை எடுக்கின்ற சூழலை நோக்கி நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது.

இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மக்கள் சொந்த இடங்களில் இருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்தமை தமிழ்மக்கள் மீது பெரியதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் மேற்கொண்டடு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவை ஆகியவற்றால் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது.

எங்களுடைய இந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது ஒரு தேசிய விடுதலை அமைப்பாக பரிமாணம் பெற்றுள்ளது.

பெரியதொரு பலங்கொண்ட படைக்கட்டுமானங்களைக் கட்டி எழுப்பி இன்று எங்கள் நிலப்பிரதேசத்தின் அறுபது எழுபது வீதமான நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.

முழுமையாக தமிழ் மக்களுடைய ஆதரவோடும் பங்களிப்போடும் எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக உயர்ந்த ஒரு நிலையில் இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் மீது இப்படியான படுகொலைகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தால் விடுதலைப்புலிகள் பொறுமைகாத்துக் கொண்டிருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது.

விடுதலைப்புலிகள் ஒரு கால அவகாசத்தை- ஒரு சந்தர்ப்பத்தை தெற்கிற்கு- சிங்கள அரசாங்கங்களுக்கும் இனவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எப்பொது இதில் இருந்து சலிப்படைந்து வெறுப்படைந்து அவர்கள் ஒரு உறுதியான முடிவை எடுக்கிறார்களோää அந்தக்கட்டத்தில் விடுதலைப்புலிகளும் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.

நிச்;சயமாகப் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. பொறுமை என்பதற்கு உண்மையில் கணிசமான அளப்பெரிய தியாகங்களைச்; செய்துவிட்டோம்.

இனி அடுத்தகட்டமாக சர்வதேச சமூகத்திற்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் எங்களுடைய செய்திகளை ஆணித்தரமாக கொடுத்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இப்படியான போக்குகளில் இருந்து மாற்றங்கள் ஏற்படாவிட்டால் நிச்;சயமாக நிலமை மோசமடையும் என்றே நான் கருதுகிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் நாங்கள் எப்பொழுதுமே யுத்தத்தையோ வன்முறையையோ பெரும் உயிரழிவையோ நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் மக்கள் மீது அவை திணிக்கப்படும் பொழுது அதனை எதிர்கொள்வதற்காக எங்களுடைய மக்களையும் தேசத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு தற்காப்பு நிலையாகத்தான் எங்களுடைய விடுதலை அமைப்பு கட்டி எழுப்பப்பட்டது.

உயிரழிவும் இழப்புக்கள்ää அவலங்கள் ஆகியவற்றை மீறி நாங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தைக் கட்டி எழுப்புகிறோம். அதற்கான ஒரு சந்தர்ப்பமாகத் தான் விடுதலைப்புலிகள் மீது ஒரு நிழல் யுத்தத்தை படுகொலைகளைச்; செய்து கொண்டிருக்கின்ற சூழலிலும் இவ்வளவு இழப்புக்களையும் தாங்கிக்கொண்டு நாங்கள் கால அவகாசத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம். பொறுமை காக்கின்றோம் ஆனால் தொடர்ச்;சியாகச்; சிங்கள அரசாங்கம் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசம் மீதும் ஒரு யுத்தத்தைச்; சுமத்துமேயாக இருந்தால் விடுதலைப்புலிகள் தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.

அதனை எதிர்கொள்வதற்கு மிகத்துணிககரமான துணிச்;சலான தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்குச்; செல்வார்கள் என்பதில் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையைச்; செலுத்துகின்றோம் என்றார் அவர்.




:roll: :roll: :roll: நன்றி புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)