03-16-2005, 01:04 AM
ஆட்சிக் கவிழ்ப்பில் மங்கள சமரவீர உடந்தை?: சந்திரிகா அதிரடி நடவடிக்கை!
சிறீலங்கா ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செயலணி ஒன்று ஊடகத்துறை விடயங்களை கையாளும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகத்துறை அமைச்;சர் மங்கள சமரவீர மற்றும் ஊடகத்துறை அமைச்;சின் செயலர் கணேகொட ஜனாதிபதியின் செயலாளர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ள இருவரும் இந்த செயலணியில் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்;சர் மங்கள சமரவீரவுடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்கவில்லை என தெரியவருகின்றது.
ஊடகத்துறையில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் பதவி உயர்வுகள் இடமாற்றங்கள் என அனைத்து விடயங்களும் இந்த செயலணியின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்த தகவல்கள் எழுத்து மூல ஆவணமாக ஊடகத்துறை அமைச்;சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான இந்த செயலணி நாளை தனது முதலாவது சந்திப்பை நடத்தவுள்ளது.
ஜனாதிபதிக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில் ஜே.வி.பியினருக்கு சர்பாக செயல்படும் அமைச்;சர் மங்கள சமரவீரவிடம் ஊடகத்துறை அமைச்;சு இருப்பது அரசியல் நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகமாக அமையும் என ஜனாதிபதி கருதுவதாகவும் இதனை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜே.வி.பியினர் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவர எத்தனிப்பதாகவும் இதற்கு ஊடகத்துறை அமைச்;சின் பங்களிப்பு அவசியம் என்பதால் அமைச்;சர் மங்கள சமரவீரவுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருவதாகவும் வெளியான தகவல்கள் ஜனாதிபதி தரப்பை பீதியடையச்; செய்துள்ளன.
ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறலாம் எனவும் சில ஊகங்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]