Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவளுக்கு கல்யாணம்....
#1
அவளுக்கு கல்யாணம்
என் கை பிடித்து
என் கண் பார்த்துக் காதல்
சொன்ன கண்மணிக்கு
கல்யாணம்

கூடித் திரிந்து
ஆடிச் சிரித்து
பேசிப் பழகி
பறக்கும் முத்தம் தந்து
நாளை சந்திப்போம் என்று
சொல்லிப் போன என்
தேவதை

முகூர்த்தம் பார்த்து
பந்தலிட்டு
மணவறையில் இருக்க
மணமகளாய் கோலம்
பூண்டு போகிறாள்
என்னவள்!

மனம் விட்டுப் பேசி
என் மடிமீது சாய்ந்து
மணமாலை சூடப் போகும்
என்நாள் என எனைக்
கேட்டவள்
தேதி குறித்து விட்டு

என்னைத்
தேடுகிறாள் தன்
திருமண அழைப்பிதழ்
கொடுப்பதற்கு!

கொஞ்சிப் பேசிய
காலம் இன்னும்
கசிந்து கொண்டிருக்கிறது
இதயத்தின் ஓரமாய்

என் இனியவள்
மனதிலோ மாறுதல்
ஏதும் இன்றி
மங்களக் காட்சிகள்
இதயத்திரையில்

மௌனமாய்
என்னை
அழ வைத்து விட்டு
நானத்தின்
நடையோடு நாயகி
வலம் வரப் போகிறாள்

இதயத்தில் எழுதி
வைத்த காதலை
அழிப்பதென்பது கடினம்
என்று பலர் சொல்லக்
கேட்டதுண்டு

நியத்தில் அது
சுலபம் என்று
நிரூபித்து விட்டாள்
என்னவள்

சிரித்துக் கொண்டு
என் செல்லப்பூ
வாழ்க்கைக்குப் போகும
;போது நான் மட்டும்
எப்படி அழுது கொண்டு
வாசலில் நிற்பது

மறப்போம் என்ற
சொல்லைக் கேட்ட போது
இதயத்தில் விட்டு விட்டு
வந்தது வலி

ஆனால்
மணக்கப் போகிறாய்
என்ற சொல்லைக்
கேட்ட போது இதயத்தில்
விழுந்ததடி இடி

சரி !
அன்பே
விட்டுக் கொடுத்த
இந்தக் காதலனின்
வாழ்த்துத் தான்
நிறைவான வாழ்த்து
வாழி!

www.eelakkathir.de
Reply
#2
அருமையான கவிதை வாழ்த்துக்கள்! Cry Cry Cry
Reply
#3
கவிதை அருமை.
நன்றாக எழுதுகிறீர்கள். தங்கள் இணையதளமும் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து தாருங்கள் ஆக்கங்களை...
Reply
#4
தம்பி ஆனந்தன் நான் அந்தக் காலத்திலை படிச்ச ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகுதடா..........எதைத்தான் மறக்க முடியும் எண்டு...

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கொடுத்த முத்தத்தையா......?

பிடரியில் சிலும்பிய முடிகளை முகர்ந்து பார்த்ததையா..............?

உள்ளங்கால் அழுக்கில் சிரிக்கச் சிரிக்க படம் வரைந்ததையா....?

மேலுதட்டின் மச்சத்தை நாக்கால் அழித்துவிட முயச்சித்ததையா?

உன் உமிழ்நீர் சுவை அறிந்ததையா?...எதைதான் மறக்கமுடியும்?

இதெல்லாம் ஞாபகம் இருந்தால் மறந்துவிடு.......அன்பே

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நீ............




முகத்தாரும் லேசுபட்ட ஆளில்லை
Reply
#5
ஆனந்தன் கவிதை அருமை .பெண்கள் பிழைக்கத்தெரிந்தவர்கள். ஆண்கள் இளிச்சவாயர்கள் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள். பெண்கள் காதலிப்பது ஒரு பாதுகாப்புக்காக காதலித்துக்கொண்டுதான் அவர்கள் சுயம்வரம் நடத்துவார்கள்.

என்ன முகத்தார் உங்களை அனுபவித்துவிட்டு தூக்கிபோட்டுவிட்டார் போலை கிடக்கு அந்தப்பெண் ம்ம் ம் ... குடுத்துவைச்சவர் நீங்கள்.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
வாழ்த்துக்கள். ஆனந்தன் தொடருங்கள்......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
ஆனந்தன் கவி வரிகள் நன்றாய் உள்ளது. வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
Quote:இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கொடுத்த முத்தத்தையா......?

பிடரியில் சிலும்பிய முடிகளை முகர்ந்து பார்த்ததையா..............?

உள்ளங்கால் அழுக்கில் சிரிக்கச் சிரிக்க படம் வரைந்ததையா....?

மேலுதட்டின் மச்சத்தை நாக்கால் அழித்துவிட முயச்சித்ததையா?

உன் உமிழ்நீர் சுவை அறிந்ததையா?...எதைதான் மறக்கமுடியும்?

இதெல்லாம் ஞாபகம் இருந்தால் மறந்துவிடு.......அன்பே

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நீ............

இதைக்காதல் என்று யார் சொன்னங்கள. இரண்டு லூசுகள் காதலிற்கு அர்த்தமே புரியாமல் பண்ணிய ஏதோ ஒன்று. தொடுகைகள் காதலாகாது. தூய அன்பும் மனசும் தான் காதலை நினைவுகொள்ளும் அழியாமல் வைத்திருக்குமே ஒழிய தொடுகைகளின் நினைவுகள். காதலாகாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
பெண்ணெனும் உரு
தாய்மைக்குள் தங்குவதால்
அகிலத்தில் இன்னும்
தப்பிப் பிழைக்கிறது...!
வலிகள் தரும் தேளாய் அவள்
உண்மைத் தோற்றம்
உள்ளத்தைத் தீண்ட இடமளிக்காதீர்...!
அது அவள் குற்றமல்ல
ஆடவர் உம் குற்றமே...!
தேளோடு விசத்தோடு
விளையாடல் தேவையோ
இனிப்பான வாழ்வை
கசக்க வைக்க ஒரு காதல்
வேண்டுமோ...???!
தேளோடு தோள் சேர்த்தால்
வலி வதம் நிச்சயம்...!
உணர்ந்து வாழ்ந்தால்
மறுமைக்கும் இல்லை ஏமாற்றம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
[quote="ஆனந்தன்"] Cry Cry Cry

மனம் விட்டுப் பேசி
என் மடிமீது சாய்ந்து
மணமாலை சூடப் போகும்
என்நாள் என எனைக்
கேட்டவள்
தேதி குறித்து விட்டு

என்னைத்
தேடுகிறாள் தன்
திருமண அழைப்பிதழ்
கொடுப்பதற்கு!
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#11
ஆனந்தன் அண்ணா கவி வரிகள் அழகா இருக்கு...நீங்க ஏன் ஏமாற்ற பெண்களா பார்த்துக் காதலிக்கிறிங்க....பாலும் தண்ணியும் கலந்த மாதிரித்தான் உலகமும் உலக இயக்கமும் அதனால் நாம் தான் அன்னம் மாதிரி இருக்கணும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
" "
" "

Reply
#12
மழலை இதுதானே வேண்டாமெண்டுறது. பாலும் தண்ணியும் கலந்திருக்கும் அதை நாங்கள்தான் பிரிக்கவேண்டுமென்கிறீர் ஒரு கவிஞன் சொல்லியிருக்கிறான்

ஆறுமது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழமது ஐயா இந்த பெம்பளை மனசுதான்யா என்கிறார்
பிறகு எப்படி நாங்கள் தண்ணியையும் பாலையும் பிரிக்கிறது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#13
அழகாகக் கோக்கப்பட்ட கவிதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#14
அவளுக்கு கல்யாணம்.... எண்ட உடனே... நான் விழுந்தடிச்சு ஓடி வந்து பார்த்தன்.
எங்கட தமிழ்ஸ்க்குதான் கல்யாணமோ எண்டு.... ச்சே.... justஉ missஉ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எண்டாலும் கவிதை நல்லாருக்கண்ணோய்.
தன்னுடைய வேதனை மற்றவன் சந்தோஷம்.... வேற என்னத்த நான் சொல்ல.... Confusedhock:
:: ::

-
!
Reply
#15
ஆனந்தன் Wrote:அவளுக்கு கல்யாணம்
என் கை பிடித்து
என் கண் பார்த்துக் காதல்
சொன்ன கண்மணிக்கு
கல்யாணம்

ஆழ்வார்பேட்டை ஆனந்தா..வேட்டியை மடிச்சு தாண்டவா.....
ஒரே காதல் ஊரில் இல்லையடா.........
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)