Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடப்பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைப்படுகின்றனரா?
#1
இன்று புகலிடத்திலே தமிழர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று அசைப்படுகின்றனர் ஆனால்? இதில் அவர்கள் அக்கறைப்படுவது மட்டுமே உண்மை. எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அறிந்துள்ளனர்? இது விடை தேட முடியாத வினாத்தான். இருப்பினும் சில பெற்றோர் தமது விருப்பு வெறுப்புக்களை (அதாவது நீ வைத்தியருக்குப் படிää நீ வழக்கறியருக்கு படிää நீ வேறு ஏதாவதுக்கு படி) தமது பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். கனடாவில் தமிழப் பெற்றோர்கள் பற்றி ரொன்ரோ உயர் கல்விகூட அதிபர்கள் மிகவும் அதிப்பதி அடைந்துள்ளனர் என்று சொல்லாhம் காரணம்.. பெற்றோர் ஆசிரியர் சங்ங கூட்டத்திற்க்கு தமிழ்ப் பெற்றோர்கள் போவது நூற்றுக்கு இரண்டு வீதம் இதனால் அதிபருக்கோ ஆசிரியருக்கோ நட்டம் எதுவுமில்லை. அனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி அறிய அவர்களது ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் விட்டால் அது அவர்களுக்கே நட்டம். எனது பாடசாலை ஆசிரியரிடம் நான் சொன்னேனர் அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அதனால் அவர்கள் வருவதற்க்கு சங்கடப்படுகிறார்கள் பொல என்றேன் அதற்க்கு அவர் இங்கு தமிழ் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதை விட் அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிந்தால் நாங்கள் நிச்சயம் மொழி உதவியாளரை அழைப்போம் என்றார். இவ்வாறு அவர்கள் எங்கள் மீது காட்டும் அக்கறையில் ஒரு பங்காவது தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது காட்டுகின்றனரா?என்பது சந்தேகமே!
எனவே; கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ....

நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
பிரான்சிலும் இதே பிரச்சனை இருக்கிறது நிதர்சன்! அநேகமான பெற்றோர்கள் கூட்டங்களுக்கு வந்தாலும் கூட மொழிப்பிரச்சனையால் அவர்களுக்கு ஆசிரியர்களிடம் உரையாட முடிவதில்லை. ஆகவே பிள்ளையின் பிரச்சனையை அதே பிள்ளையை மொழி பெயர்ப்பாளராக வைத்தே கேட்க வேண்டியிருக்கிறது. இங்கே பிள்ளையின் நேர்மையைப் பொறுத்ததே மிகுதி!!
மொழி தெரிந்த வேறு தமிழர்கள் அவ்விடத்தில் இருந்தாலும் கூட அவர்களிடம் கேட்டால் ஏதோ குறைந்து விடும் போல போய் விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது பிள்ளையின் இன்றைய கல்வி எதிர்காலம் மாத்திரம் இல்லை. பெற்றோரின் எதிர்கால நிம்மதியும் தான். அவரவர் இருக்கும் நாட்டின் மொழியைக் கொஞ்சமாவது தெரிந்திருக்காததினால் பிள்ளைகள் தங்களிடையே என்ன பேசுகின்றார்கள்? பெற்றோரை எப்படித் திட்டுகின்றார்கள்? கேலி செய்கின்றார்கள் என்பது கூடப்புரியாமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளை பிரெஞ்சு மொழியில் நன்றாகப் பேசுகிறது; பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று கூறிப் பெருமைப் படுவதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மனதுக்குப் பெரும் கவலையாயய் இருக்கும். மற்றும் படி நீங்கள் கூறியது போல் இங்கு பாடசாலைகளில் மொழி பெயர்ப்புக்கு அரசாங்கம் மொழிபெயர்ப்பாளரை வரவழைப்பது பற்றி நான் கேள்விப்படவில்லை.
!!
Reply
#3
ஐரோப்பாவில் மொழிப்பிரச்சினையால் அதிகளவு பெற்றோர் பாதிக்கப்படுகிறார்கள்... இது உண்மைதான் ... ஒரு விடயம் எனக்கு தெரியவில்லை எனின் தெரிந்தவர்களிடம் கேட்க ஏன் வெட்கப்படுகிறார்கள் என்பதும் எனக்குப்புரியவில்லை
Reply
#4
பாடசாலைக்கு அனுப்பினால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைப்பவர்கள் தான் அதிகம். பிள்ளைகள் அங்கு படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும்.
[size=16][b].
Reply
#5
[quote=Nitharsan] சில பெற்றோர் தமது விருப்பு வெறுப்புக்களை (அதாவது நீ வைத்தியருக்குப் படிää நீ வழக்கறியருக்கு படிää நீ வேறு ஏதாவதுக்கு படி) தமது பிள்ளைகள் மீது திணிக்கின்றனர்.

நேசமுடன் நிதர்சன்

இந்தத் திணிப்பு என்பது புகலிடத்திலை மட்டுமல்ல இங்க தாயத்திலையும் தான் இருக்கு. குறிப்பாக மற்றவர்களை மேற்கோள் காட்டி - அதாவது அப்பிள்ளையுடன் படிக்கின்ற வேறொரு பையனையோ பெண்ணையோ சுட்டிக்காட்டி - அவன் படிக்கிறான் தானே அல்லது அவள் படிக்கிறாள் தானே என்று சொல்லி பிள்ளைகள் மீது திணிப்பை மேற்கொள்கிறார்கள்.
--
--
Reply
#6
மொழிபிரச்சனையால் பெற்றேர்கள் அவ்வளவு பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் அதிகளவு அக்கறை எடுக்கமுடியாமலுள்ளது என்பது உண்மையே ஆனாலும் பிள்ளைகளின் கல்வி பெறு பேறுகள் திருப்தி தருவதாகவே இருக்கின்றது
; ;
Reply
#7
¦¸Êò¾ÉÁ¡ ÀÊ츸 ÜÊ À¢û¨ÇÔõ, §ÁüÀÊôÒ ÀÊ츧À¡É¡ ÅÕºí¸û §À¡Ì¦¾ýÎ ¦º¡øÄ¢, ¦¾¡Æ¢ø¸øÅ¢ ÀʦÂñÎ «ÛôÒ¸¢Éõ. «¦¾ñ¼¡ø ÀÊ째쨸Ôõ ¸¡Í ÅÕ¦ÁñÎ. «¾¡ø À¢û¨ÇÂû À¢ýÛìÌ À¾Å¢ÔÂ÷× ¸¢¨¼ì¸¢È Å¡öô¨À¦ÂøÄ¡õ þÆì¸¢Éõ.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)