Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு எதிராக யாழ் முல்லையில் ஏப்.6-ல் பிரமாண்ட பேரணிகள்
#1
எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும்ää முல்லைத்தீவிலும் பேரணிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

கிழக்கில் போராளிகள் மீதும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டித்து நல்லூர் கோட்ட பொது அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து யாழ். நகரில் நல்லூர் ஆலய முன்றலில் பேரணி ஆரம்பித்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை சென்று மனு கையளிப்புடன் முடிவடையவுள்ளது.

குடாநாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள அவர்களுடைய இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இப்பேரணியில் வலியுறுத்தப்படும்.

முல்லை மாவட்ட மக்கள் நடத்தும் கண்டனப்பேரணி புதுக்குடியிருப்புää ஒட்டிசுட்டான் ஐயனார் கோவிலடிää பரந்தன் வீதியில் ஆகிய இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் ஆரம்பித்து புதுக்குடியிருப்புச் சந்தியை வந்தடைந்ததும் கண்டனக்கூட்டமும் மனு கையளிப்பும் நடைபெறும்.

புதுக்குடியிருப்பு தேசிய எழுச்;சிப் பேரவை செயலாளர் வீ.கனகசுந்தரம் சுவாமி தலைமையில் இந்த பேரணி நடைபெறும்.

முல்லைத்தீவில் அரசின் தமிழர் விரோத செயற்பாடுகளைக் கண்டித்தும் பல கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தும் பேரணி நடத்தப்பட உள்ளது.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)