Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோடையில் சாப்பிட வேண்டியவை
#1
கோடையில் சாப்பிட வேண்டியவை

<b>தர்பூசணி</b>

இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.

<b>ஆரஞ்சு</b>

பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும் ஆரஞ்சை ஆயுர்வேத சிகிச்சை முறை பெரிதும் கைக்கொள்கிறது. வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது.

சளி பிடித்துள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். காலையிலும் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோய்களுக்கு அருமருந்து ஆரஞ்சு, உடலுக்குத் தெம்பு கூட்டும், செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்ப காலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்கவேண்டும். செரிமானச் சக்தியைக் கூட்டி, செரிமான உறுப்புகளை வலுவூட்டி வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.

<b>சாத்துக்குடி</b>

குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.

<b>வெள்ளரிக்காய்</b>

வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது.

வெள்ளரியில் "கலோரி"கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

தொகுப்பு : மா. பிரபா
நன்றி - குமுதம்-ரHealth
Reply
#2
நன்றி மன்னத.. அப்படியே அனுப்பிவிட்டால் சாப்பிட ஈசியாய் இருக்கும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
tamilini Wrote:நன்றி மன்னத.. அப்படியே அனுப்பிவிட்டால் சாப்பிட ஈசியாய் இருக்கும். :wink:

ÁýÉ¡ ¿ýÈ¢..

«ÐºÃ¢ ¼Á¢ú «Åü¨È ¾É¢Â «ÛôÀ¢Å¢ð¼¡ø ÁðÎõ §À¡Ð§Á¡?? «øÄÐ «¨¾ ÅÊÅ¡¸ º£Å¢ ÌÇ¢÷º¡¾É¦ÀðÊ¢ø ¨ÅòÐ «¨¾ °ðÊŢΞüìÌ ´Õ ¬¨ÇÔõ «ÛôÀ¢ Å¢¼§ÅϧÁ¡?? :evil: :oops: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
குமுதம் முன்னர் பாடசாலைகளில் போட்டிருந்து பின்னர் படிக்க தடை செய்யப்படதாச்சே...அதுகளில இப்படி நல்ல குறிப்புகள் இன்னும் வருகுதா... நன்றி மன்னா... தங்கள் தரவுகளுக்கு... சாதாரண மக்களுக்கு உதவியா இருக்கும் இக்குறிப்புகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:ÁýÉ¡ ¿ýÈ¢..

«ÐºÃ¢ ¼Á¢ú «Åü¨È ¾É¢Â «ÛôÀ¢Å¢ð¼¡ø ÁðÎõ §À¡Ð§Á¡?? «øÄÐ «¨¾ ÅÊÅ¡¸ º£Å¢ ÌÇ¢÷º¡¾É¦ÀðÊ¢ø ¨ÅòÐ «¨¾ °ðÊŢΞüìÌ ´Õ ¬¨ÇÔõ «ÛôÀ¢ Å¢¼§ÅϧÁ¡??
சே சே அனுப்பினால் போதும் பிறிஜ் எல்லாம் தேவையில்லை.. இடமில்லை வைக்க.. ஆக்களும் தேவையில்லை. தன்கையே தனக்குதவியாச்சே..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
மோனே நீர் எழுதிய எல்லாம் சரி ஆனால் எங்கட தாயகத்து பனம்பாலை மறந்திட்டியே மோனே அளவோடு உபயோகித்தால் நீh சொன்ன வருத்தம் ஒன்றும் கிட்ட கிட்ட நெருங்காது அப்பு கோடைகாலத்திற்கு அருமையான சாமான் ராசா
________________________________________________________________
'' தமிழ் மண்ணே வணக்கம் ''
________________________________________________________________
Reply
#7
மன்னா தேவையானவிடயம் நன்றி
[b][size=18]
Reply
#8
பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
கோடையில் இளனி குடிப்பது நல்லம் தானே?!
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)