Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் ஈழ வானொலி பெண் அறிவிப்பாளர் புகழாரம் -
#1
உலகப் பெண்களுக்கு முன்மாதிரி சோனியா - தமிழ் ஈழ வானொலி பெண் அறிவிப்பாளர் புகழாரம் - ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்காதவர்

யாழ்ப்பாணம், ஏப். 10- ராஜீவ் படுகொலையை அரசியலாக்காத சோனியாகாந்தி உலகப் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழ் ஈழ வானொலியில் பெண் அறிவிப்பாளர் புகழ்ந்து பேசினார்.

விடுதலைப்புலிகள் நடத்தும் தமிழ்ஈழ வானொலியில் செய்தி அறிவிப்பாளராக பணிபுரிபவர் தமிழ் கவி. இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இவரது எழுத்துக்கள் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இவர் தெகல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது„-

கடந்த 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் வெறியாட்டம் ஆடிய போது எனக்கு வயது 8. எங்கள் கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் யாழ்ப்பானத்திற்கு அகதிகளாக சென்றோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு பூவாயி என்ற 12 வயது பெண்ணை கொண்டு வந்தார்கள். அவள் உடலில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. அவளை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்து விட்டனர் என பின்னர் என்பாட்டி என்னிடம் தெரிவித்தாள். பூவாயி நிலைமை எனக்கு வந்துவிடக்கூடாது எனக் கருதிய என் குடும்பத்தினர் என்னை பள்ளிக்கூடம் அனுப்ப மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பின்னாளில் இதை அடிப்படையாக வைத்து -இனி வானம் வெளுத்திடும் என்ற கதை எழுதினேன். அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. எங்கள் தலைவர் என்னை நேரில் அழைத்து பரிசு வழங்கினார். பிரபாகரனுக்கு புத்தகம் படிப்பதில் நல்ல ஆர்வம் உண்டு. அவரது தாயிடமிருந்து அந்தப்பழக்கம் வந்ததாக அவர் குறிப்பிடுவார்.

கல்கி,குமுதம், ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களை அவர் விரும்பிப் படிப்பார். கல்கியில் 1950 ஆம் ஆண்டுகளில் தங்க சுரங்கம் என்ற சிறுவர் தொடர் கதை வந்தது. அதில் பிரபாகரன் என்ற கதாபாத்திரம் வரும். அதனை வைத்து தான் அவருக்கு பிரபாகரன் என்ற பெயரை அவரது தாயார் வைத்ததாக கூறுவார். ஈழத் தமிழர்களுக்கான தனி தாய் நாடு நிச்சயம் உருவாகும். அமெரிக்க போன்ற நாடுகளும் தற்போது இலங்கையின் வடபகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் சுனாமி நிவாரணப் பணிகளில் இலங்கை அரசை விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்ப்பட கேட்டுக்கொண்டார்.

தமிழ் ஈழத்தில் பெண்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் உறுதியானவர்களாகவும் உள்ளனர். யுத்தத்தில் ஆண்களை பறிகொடுத்த குடும்பங்கள் பல. இதனால் பெண்களே குடும்பத் தலைவிகளாக இருந்து குடும்பத்தை வழி நடத்தி செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் ஈழப் பெண்கள் நெஞ்சுரம் பெற்றவர்களாக மாறி வருகிறார்கள். எங்களது போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இது குறித்து எமது தலைவர்கள் தற்போது அதிகம் பேசி வருகிறார்கள். இந்திராகாந்தி காலத்தில் இந்திய ராணுவம் எங்களுக்கு பயிற்சி அளித்தது. எம்.ஜி.ஆரும் எங்களுக்கு முழு உதவி செய்தார். இடையில் இந்திய அரசின் கொள்கைகள் மாறிப்போய்விட்டது. இந்தியாவின் உதவிஇன்றி இலங்கை இனப்பிரச்சனைக்கு முடிவு வராது. சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் சந்திரிகா , ஸ்ரீமாவோ,பெனசிர் மற்றும் கலிதா போல் அரசியலால் பாதிக்கப்பட்டவர். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் பிறந்த தேசத்திற்காக போராடி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார். எங்களது போராட்டத்தில் அவர் குறுக்கீடு செய்ததில்லை. அவரது கணவர் படுகொலையையும் அரசியலாக்க வில்லை. இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற அவரது கணவரின் கனவை சோனியா நனவாக்க முயல்வதை நான் பாராட்டுகிறேன். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து காங்கிரஸ் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்க அவர் பாடுபட்டு வருகிறார். உலக பெண்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்.

இவ்வாறு கூறினார்.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
போலியோ மருந்து சாப்பிட்ட 4 மாத குழந்தை பரிதாப சாவு தாய்மார்கள் முகாமை விட்டு ஓட்டம் பிடித்தனர்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Apr/11/others/C139_21md-all.jpg' border='0' alt='user posted image'>

பழநி அருகே பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த 4 மாத குழந்தை சங்கீதாவை படத்தில் காணலாம்.

பழநி, ஏப்.11- பழநியில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் கைக்குழந்தை பரிதாபமாக இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனால் போலியோ சொட்டு மருந்து கொடுக்க குழந்தைகளுடன் நின்று இருந்த பெற்றோர் அலறி அடித்து ஓடினர்.

போலியோ மருந்து

பழநியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரை சேர்ந்தவர் வாய்க்கால் துரை (வயது 2. இவர் மனைவி நாச்சம் மாள் (வயது 20). இவர்களுக்கு சங்கீதா என்ற பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுதான் முதல் குழந்தை ஆகும். வாய்க்கால் துரை கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறது.

தற்போது இவர்கள் பழநி அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். நேற்று இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்காக குழந்தை சங்கீதாவை தூக்கிக் கொண்டு வாய்க்கால் துரை வந்திருந்தார்.

பரிதாப சாவு

காலை 8 மணிக்கு முகாம் தொடங்கியது. 10 மணி அளவில் 176-வது குழந்தையாக சங்கீதாவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தை சங்கீதா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனது. இதனால் அருகில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க காத்திருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை மயங்கி விழுந்து செத்த சம்பவம் பழநி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை சங்கீதாவை மடியில் போட்டுக் கொண்டு …எங்களின் ஒரே குழந்தையை பறி கொடுத்துவிட்டோமே என்று பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறந்த குழந்தை சங்கீதாவிற்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து ஒரு முறை கொடுக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு இருதய நோய் இருந்ததாகவும் தெரிகிறது.

ஆறுதல்

இது குறித்து தகவல் அறிந்தவுடன் பழநி ஆர்.டி.ஓ. எஸ். நாராயணமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அலுவலர்கள், மருத்துவ துறை அதிகாரிகள், பழநி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை பறிகொடுத்து கதறி அழுத பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் இது குறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் கூறியபோது …குழந்தையை பறிகொடுத்த வாய்க்கால் துரை கூலி தொழிலாளி ஆவார். எனவே அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வானம் பாடி மீண்டும் கண்டதில் மகிழ்சி
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)