Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி
#1
தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி

இந்த வார - 16 ஏப்ரல் 2005 தேதியிட்ட - தெஹெல்காவில் நிருபர் வி.கே.சஷிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து ஒரு நான்கு பக்க ரிப்போர்ட் எழுதியிருக்கிறார். அத்துடன் S.P.தமிழ்ச்செல்வன், தமிழ்க் கவி ஆகியோருடன் பேட்டிகள். தமிழ்க் கவி என்ற பெண் வே.பிரபாகரனின் speech writer என்று குறிப்பிடுகிறார்.

இந்த ரிப்போர்ட்டில் புது விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது புது விஷயம். புலிகள் சார்புநிலை உள்ள ஒரு ரிப்போர்ட் இந்திய mainstream பத்திரிகையில் வருவது இதுவே முதல் தடவை.

சார்புநிலை என்று சொல்வதைக் காட்டிலும் புலிகள் பகுதியில் உள்ள இயல்புநிலையைக் காண்பித்துள்ளது என்பதுதான் சரியானதாக இருக்கும். 'தி ஹிந்து' மட்டும்தான் அவ்வப்போதாவது இலங்கை விவகாரத்தைப் பற்றி எழுதி வருகிறது. ஆனால் அது முழுவதுமாக புலி எதிர்ப்பு நிலையாகவும், இட்டுக்கட்டிய செய்திகளாகவுமே இருந்து வருகிறது.

ஆனால் சஷிகுமாரின் செய்தி விளக்கமாகச் சொல்வது இதுதான்:

<b>* புலிகள் ஏற்கெனவே ஒரு தேசியத்தை அடைந்து விட்டார்கள் - a state within a state, a nation of their own.

* புலிகளின் தேசத்தை சுனாமிக்குப் பிறகு சர்வதேச அரசுகளும் ஓரளவுக்கு அங்கீகரித்துவிட்டன. இல்லாவிட்டால் புலிகளைச் சேர்க்காமல் நிவாரணப் பணி என்றால் காசு கொடுக்க மாட்டோம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இது புலிகளுக்கு, முக்கியமாக பிரபாகரனுக்கு, புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.

* சுனாமி அழிவு ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக ஈழப்பகுதியின் சிவில் அரசமைப்பு புணர்வாழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டது. இதிலிருந்து புலிகள் வெறும் பயங்கரவாத அமைப்பல்ல, மக்கள் நலனை முன்வைக்கும் முழுமையான அரசமைப்பு என்று புலனாகிறது (என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார், அதை சஷிகுமார் ஆமோதிக்கிறார்.)

* ஈழத்தில் நடைபெறும் நீதிமன்றம். 1993-ல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம் இப்பொழுது முழுதானதோர் அமைப்பாக விளங்குகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்ற முறைப்படி நடக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

* முழுமையான உள்நாட்டுக் காவல்துறை.

* குடியேறல் துறை. ஈழப்பகுதிக்குச் செல்பவர்கள் பாஸ்போர்ட் தனியாக பரிசோதிக்கப்படுகிறது. ஈழத்திலிருந்து இலங்கை அரசுப் பகுதிகளுக்குச் செல்வதும், வருவதும் கண்காணிக்கப்படுகிறது.

* ஆனாலும் பல அத்தியாவசியப் பொருள்களுக்காக கொழும்பு அரசைத்தான் ஈழ மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.</b>

புலிகள் இந்தியா உறவு பற்றி சிறு பத்தி வருகிறது. அதிலிருந்து நேரடி மேற்கோள்:

<i>The LTTE claims that it has witnessed a phenomenal rise in grassroots support for its cause in Tamil Nadu through the growth of caste parties.

The party leaders in Tamil Nadu, who the LTTE claims to be in contact are -- Tamil Nationalist Movement president P.Nedumaran; MDMK general secretary Vaiko; PMK leader S.Ramadoss, who has the support of the Vanniyars who form a sizeable chunk of the middle class in the state and dalit leader R.Thirumavalavan.

But the LTTE is extremely careful of the way it positions the growing political support as it does not want India to feel threatened by Tamil expansionism.</i>

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக புலிகள் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் இந்தப் பத்தி சொல்கிறது.

இந்த நீண்ட கட்டுரையை முடிக்கும் முன் ஆசிரியர் சொல்வது இதுதான்:

இங்குள்ள புலிகள் தலைமையிடம் பேசும்போது, அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருக்காமல், புலிகள் தாமாகவே சுதந்தரத்தை பிரகடனம் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அவர்களே ஈழத்தை அங்கீகரித்தது போலாகும். ஆனால் இந்த முடிவை எதிர்த்து புலிகள் மீது போர் தொடுத்தால், அது பிரபாகரனுக்கு வசதியாகப் போகும். பிரபாகரன் இலங்கை அரசுதான் அமைதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது என்று அவர்கள் மீது கையைக் காண்பித்து விடலாம். மேலும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமைதியை ஆதரித்து அமைதி இருந்தால்தான் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வோம் என்ற கொள்கையில் இருக்கும்போது, புலிகள் மீது படையெடுப்பது இலங்கை அரசுக்கு முடியாத செயலாக இருக்கும்.

ஆக சந்திரிகா எந்த முடிவை எடுத்தாலும் அது புலிகளுக்கு வசதியாகவே இருக்கும். இலங்கையில் ஓர் அரசியல் சூறாவளி நிகழவிருக்கிறது. ஆனால் புலிகளுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.

http://www.tehelka.com/story_main11.asp?fi...iger_rising.asp

நன்றி
http://thoughtsintamil.blogspot.com/2005/0...og-post_12.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
8)
நன்றி
Reply
#3
நன்றி குளக்காட்டான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி குளக்ஸ்.

தங்கமணி என்பவர் இந்த கட்டுரைக்கு கீழே தனது கருத்தை எழுதியிருக்கின்றார்

இதைப் பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். முந்திக் கொண்டீர்கள். இந்தியாவின் உதவி இப்போது பெருமளவில் புலிகளுக்கு தேவை. ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் படுத்தப்பட்டுவிட்டால், இந்தியாவிற்கும், ஈழத்திற்கும் நிறைய வர்த்தக உடன்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளுண்டு. இன்னமும், மின்சாரம் முழுமையாக இல்லை. மின் உற்பத்தி நிறுவனங்களை உண்டாக்கும் நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே, இந்தியன் ஆயில் நிறுவனம், லங்கா ஆயில் என்கிற பெயரில், இலங்கையில் கல்லா கட்டுகிறார்கள். இதனை நீட்டிப்பு செய்யலாம். விரிவாக எழுதுகிறேன், தமிழ்ப் புத்தாண்டுக்கு பிறகு. இனி புலம்பெயர்ந்த மக்கள், இந்திய அமைதிப்படையின் அரஜாகத்தினை முன்னிறுத்தி பேசவேண்டியதில்லை என்பதும், புலிகள் ராஜீவ் மரணத்தினை ஒரு துர்சம்பவம் என்றும் சொல்லி விட்டார்கள் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், காங்கிரஸ் அரசால், இதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்யஇயலும் என்று தோன்றவில்லை. அவர்கள் இன்னமும் மனவிலங்கிலேயே இருக்கிறார்கள் அல்லது இருக்கவைக்கப்படுவார்கள் என்று தோன்றுகிறது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
இந்தியவுடனான உறவை சீரமைக்கும் பணியில் விடுதலைப்புலிகள் நாட்டம்

அருணன் செவ்வாய்க்கிழமை 12 ஏப்பிரல் 2005 17:52

பழைய சம்பவங்களை மறந்துவிட்டு ஈழத்தமிழருக்கு அமைதி நியமங்களுக்கு கீழ் நிரந்தர சமாதானத் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க சிறீலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நீதி நிர்வாகப்பொறுப்பாளர் பரா தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு இந்தியாவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய புலனாய்வு இணையத்தளமான தெகல்கா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு 2002 ஆம் ஆண்டு; வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலக அதிகாரிகளில் ஒருவரான வண. கருணாரட்ணம் அடிகளார் அங்கு சென்றிருந்தார். ஆனால் அப்போது இந்திய-பாகிஸ்தான் உறவில் முறுகல் நிலை தீவிரமாக இருந்ததால் திட்டமிட்டபடி சந்திப்பு கைகூடவில்லை என்று விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தக்காரியத்தையும் விடுதலைப்புலிகள் செய்யமாட்டார்கள். அதேபோல் தமிழ் மக்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த வேலையும் இந்தியா செய்யக்கூடாது என்று தமிழகக்கட்சிகளுக்கு ஊடாக ஒரு உறுதிமொழி செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களில் விடுதலைப்புலிகள் வழங்கிய செய்தியை எடுத்துச்சென்றுள்ள அந்த அதிகாரி அதை லண்டன் தூதரகம் ஊடாக புதுடில்லி அரசிடம் சமர்ப்பித்திருப்பார் என்றும் விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச்செய்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரக ஊடகப்பிரிவு அதிகாரி பரத்வாஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடந்ததாக தனக்கு தெரியாது என்றும் அவ்வாறான தகவல் பரிமாற்றம் எதுவும் நடந்ததாகவோ நடக்கவில்லை என்றோ தன்னால் கூறமுடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
தமிழீழம் சிவக்கிறது' நூல் எழுதியமைக்காக நெடுமாறன் நேற்று நீதிமன்றில் ஆஜர்

விடுதலைப் புலிகள் ஆதரவு புத்தக வழக்கு தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று திங்கட்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஹதமிழீழம் சிவக்கிறது' என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புத்தகம் எழுதியிருந்தார். இதனைத் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளர் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யவிருந்தார்.

இது குறித்து தகவலறிந்த மத்திய குற்றப்பிரிவுப் புலனாய்வுப் பொலிஸார் சாகுல் அமீதின் சேத்துப்பட்டு அலுவலகத்தில் சோதனை நடத்தி 1287 புத்தகங்களைப் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நெடுமாறன் மீதும்இ சாகுல் அமீது மீதும் வழக்குத் தொடரப்பட்டது. தேசத் துரோகம் இழைத்ததாகவும்இ கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும்இ இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கியூ பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகக் கோரி நீதிமன்றம் சம்மன்ஸ் அனுப்பியது. அதன்படிஇ நெடுமாறன் நேற்றுக் காலை 10.30 மணியளவில் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றில் நீதிவான் அருள்ராஜ் முன்னிலையில் ஆஜரானார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் வி.புருஷோத்தமன்இ ரூபன் ஆகியோர் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்து நீதிவான் உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லாததால் சாகுல் அமீது நேரில் ஆஜராகவில்லை. தனக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது சார்சுட்டதுதினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#7
தெல்கா இணையதளம் வெளியிட்ட படங்கள் சில ,,,,

<img src='http://www.tehelka.com/channels/news/2005/Apr/16/images/TIGER_RISING8.jpg' border='0' alt='user posted image'>
புலிகளின் பொலீஸ் பிரிவு

<img src='http://www.tehelka.com/channels/news/2005/Apr/16/images/TIGER_RISING6.jpg' border='0' alt='user posted image'>
புலிகளின் நீதிமன்றம்

<img src='http://www.tehelka.com/channels/news/2005/Apr/16/images/TIGER_RISING2.jpg' border='0' alt='user posted image'>
அரச மற்றும் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்கள்

நன்றி - தெல்கா இணையத்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)