04-18-2005, 02:10 AM
புத்தர் சிலைகளும் பேரினவாதிகளும்
கடல்கோள் அனர்த்தத்திலிருந்து கிழக்கு மாகாண மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, திட்டமிட்ட பேரினவாத நடவடிக்கைகளால் அவர்களுடைய இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது. மீள் கட்டமைப்பு என்ற பெயரில் சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பதன் மூலம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு அத்திவாரம் இடப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு அவர்களுடைய இருப்புக்குத் தீவிரமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் - பேரினவாதிகள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டுள்ள இரண்டு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது வெளிப்படை.
இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை அமைப்பதற்குத் தமக்குள்ள உரிமையை யாரும் தடுத்துவிட முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் ஒருவர் சூளுரைத்திருக்கின்றார். அதனைத் தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் அவர் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.
உண்மை தான்! புத்தர் சிலைகள் இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைக்கப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான். அன்பையும் அஹிம்சையையும் போதித்த புத்தரின் சிலைகள் அவருடைய போதனைகளைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்டால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், இந்த நாட்டில் பேரினவாத ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் வன்மத்தையும் வளர்ப்பதற்காகத் தானே புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
"இந்தப் பகுதி சிங்களவர்களுக்குரியது" என்பதைக் காட்டுவதற்காகத் தான் சிறுபான்மையினத்தவர்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகள் முதலில் அமைக்கப்படுகின்றன. அதன் பின்னர் என்ன நடைபெறும் என்பது இந் நாட்டின் இனவாத வரலாற்றை அறிந்துள்ள எவருக்கும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
பௌத்த - சிங்கள பேரினவாதத்தை தமது அடிநாதமாகக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவோ அல்லது ஜே.வி.பி. யினரோ கடல்கோளினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தான், தம்முடைய மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?
கடல்கோள் அனர்த்தத்தின் பின்னரான மீள் கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டு - பேரினவாதிகள் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுடன் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கியிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவங்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
சுதந்திரம் வழங்கப்பட்ட காலம் முதல் சிறுபான்மையினருடைய பாரம்பரிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் ஏற்பட்ட அரசியல் விளைவுகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். வடக்கு - கிழக்கின் இன விகிதாசாரம் திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய தாயகத்தை இரண்டாகப் பிளப்பதும், அப் பகுதிகளிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மையினத்தவர்களாக்குவதும் தான் பேரினவாதிகளின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாக தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசங்களின் பெயர்களும் சிங்களத்துக்கு மாற்றப்பட்டன. அம்பாறை மாவட்டம் திகாமடுல்லை மாவட்டமாக பெயர் மாற்றத்தைப் பெற்றது. இங்கிருந்த முஸ்லிம் கிராமங்கள் பலவும் சிங்களக் கிராமங்களாகியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் புத்தர் சிலைகள் தமது பிரதேசங்களில் அமைக்கப்படுவது முஸ்லிம் மக்களுக்கு பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக ஹெல உறுமயவின் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் நாகரிக சமுதாயத்தையே வெட்கித் தலைகுனிய வைப்பதாக அமைந்திருக்கின்றது.
`கிழக்கு மாகாணமும் சிங்கள மக்களுடைய பாரம்பரியமான ஒரு பிரதேசம். அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாம் தான் முஸ்லிம்களை கரையோரங்களில் குடியேற்றினோம்' என்ற கருத்தில் ஹெல உறுமயவைச் சேர்ந்த பிக்கு ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து முஸ்லிம் மக்களின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பின்னணியில் தான் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் தமது இருப்புகளைப் பாதுகாப்பதற்காக புத்தர் சிலைகளை அகற்றும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றனர்.
பேரினவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சிறுபான்மையினர் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளை - அவை அஹிம்சை ரீதியானதாக இருந்தாலென்ன, வன்முறைகளைப் பின்பற்றியதாக இருந்தாலென்ன - அவற்றை `பயங்கரவாதம்' என முத்திரை குத்துவதுதான் பேரினவாதிகளின் வழமை. முஸ்லிம்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை இஸ்லாமிய அடிப்படைவாதம் எனவும், இஸ்லாமியப் பயங்கரவாதம் எனவும் ஹெல உறுமயவினர் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள். இவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் மக்களுடைய எதிர்ப்பை இலகுவான முறையில் அடக்கி ஒடுக்கிவிட முடியும் என பேரினவாதிகள் கணக்குப்போடுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இன நல்லுறவைச் சீர்குலைத்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய பேரினவாதிகளின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக படைத்தரப்பும் அரசாங்கமும் கொண்டுள்ள நிலைப்பாடுதான் என்ன? மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பேரினவாதிகளுக்கு உதவுவதாகவே இவர்களது நிலைப்பாடுள்ளது.
திருகோணமலையில் அரச காணிகளின் விபரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.வி.பி.யினர், அவற்றில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களையும் வகுத்து வருகின்றார்கள். இது பல குழப்பங்களை அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு அரச உதவிகள் எதுவுமின்றியுள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அடிமேல் அடியாக இந்த பேரினவாத நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
புத்தர் சிலைகளை வைத்து - புத்தரின் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலே இங்கு நடத்தப்படுகின்றது. கொழும்பில் ஹெல உறுமயவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் இவற்றைத் தடுத்து நிறுத்த முற்படும் சிறுபான்மையினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே உள்ளது.
இந்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு அரசு தொடர்ந்தும் அனுமதிக்கத்தான் போகின்றதா? அல்லது, சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் எதனையாவது மேற்கொள்ளப் போகின்றதா?
தினக்குரல்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>