Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனையிறவுத்தள வெற்றி மூலம்...
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஆனையிறவில் புலிகளின் வெற்றி வரலாற்றுத்திருப்புமுனை</span>

2000ஆம் 2001ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவம் தனது காயங்களைக் கழுவிக் கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆனையிறவுப் பெரும் படைத் தளத்தைக் கைப்பற்றியதும் பாதுகாத்ததுமான பெரும் சமர்களில் வெற்றிபெற்று தாம் ஓர் அசைக்க முடியாததொரு சக்தி என்பதை உலகிற்கு வெளிக்காட்டியதோடு இவ்வெற்றிகள் குறித்து தமிழ் மக்களுடன்கொண்டாடிக் கொண்டிருந்தது.

இன்றும் இவ்வெற்றிகளின் ஐந்தாம் ஆண்டு நான்காம் ஆண்டு நிறைவினை விடுதலைப்புலிகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவ் வெற்றியானது ஐந்து ஆண்டுகள் என்ன ஐந்நூறு ஆண்டுகள் வரையிலும் தமிழ் மக்களினால் கொண்டாடப்படுவதற்கு ஏற்ற மகத்தான வெற்றி என்பதில் எவருமே சந்தேகமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை.

ஆனையிறவுப் படைத்தளத்தின் வீழ்ச்சியானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனை என்பது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. உலகின் இராணுவ விற்பன்னர்கள் விமசர்கள் பலரும் பல கேள்விகளுடன் இச்சமரை அவதானித்து நிற்கையில் விடுதலைப்புலிகள் ஆனையிறவுப்படைத் தளத்தை தமது தொடர்தாக்குதல் மூலம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ஓயாத அலைகள் - ஐ நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டியவேளை புலிகளின் அடுத்த இலக்கு ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்பது உணரப்பட்டதாகவே இருந்தது. இதற்கேற்ப சிறிலங்காப்படைத்தளமும் மிகப் பலம்மிக்கதானதொன்றாக புலிகளின் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வகையில் சிறிலங்காப் படைத்தரப்பினால் பலப்படுத் தப்பட்டதாக இருந்தது.

ஆனையிறவுப் படைத்தளத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு டிவிசன் படையணிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இப்படையணிகளில் நன்கு தேர்ச்சிபெற்ற கொமாண்டோப் படைப் பிரிவுகள் உட்பட அதிநவீன ஆயுத தளபாடங்களும் குவிக்கப்பட்டிருந்தன.

களப் பகுதியில் 155 மில். மீற்றர் 122 மி. மீற்றர் ஆட்லறிகள் டாங்கிகள் மற்றும் மோட்டார்கள் கனரக பீரங்கிகள் என்பன நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இவற்றிற்கும் மேலாக யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த ஆயுதப்படைப் பிரிவுகள் ஆனையிறவுப் படைத்தளத்திற்கு தரையாலும் கடலாலும் வானாலும் பாதுகாப்பு வழங்குவதற்குத் தயாராக இருந்தன. இவையாவற்றுடனும் வெளிநாட்டு இராணுவ ஆய்வாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டிருந்தது.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆரம்பிக்கத் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியானபோது கொழும்பிலுள்ள பிரபல இராணுவ ஆய்வாளர்; ஒருவரிடம் சக்தி வாய்ந்த வெளிநாடு ஒன்றின் ஆலோசகர்களில் ஒருவர் தெரிவித்தாராம் ஆனையிறவைப் புலிகளால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது. வன்னியைப் போலல்லாது ஆனையிறவில் இராணுவம் சிறப்பாகப் போரிடும் எனத் தெரிவித்தாராம்.

ஆனால் சகலருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் வியூகம் இருந்தது. சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு எவ்வளவு முனைந்தும் ஆனையிறவுப் படைத் தளத்தைக் காப்பாற்ற முடியாது போய்விட்டது. சிறிலங்கா இராணுவம் ஆனையிறவுப் படைத்தளத்தில் இருந்து தனது இறந்த சகாக்களையும் பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களையும் கைவிட்டுவிட்டு தப்பியோட வேண்டியிருந்தது.

ஆனையிறவில் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மறுத்தது. அவ்வாறு பொறுப்பேற்பது அவமானகரமானதென அது கருதியது. வழமை போலவே சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு ஆனையிறவில் இருந்து இராணுவம் தந்திரோபாய ரீதியில் பின்வாங்கியுள்ளது எனத் தெரிவித்தபோது முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளே இதனைக் கேலி செய்தனர். ஏனெனில் சிறிலங்கா இராணுவம் சந்தித்த இத்தோல்வியானது இலங்கையின் இராணுவ அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை விளைவிப்பதாகியது குறிப்பாக

1 கேந்திர முக்கியத்துவம் மிக்க ஆனையிறவு இழக்கப்பட்டமை.
2 இராணுவச்சமநிலையில் ஏற்பட்ட பாதிப்பு.
3 அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு.

ஆனையிறவுப் பிரதேசத்தில் முக்கியத்துவம் பற்றிக் கூறுவதானால் அது யாழ். குடாநாட்டின் நுழைவாயில் ஆகும். இவ்வாயில் யார் கையில் இருக்கின்றதோ அவர்கள் யாழ். குடாநாட்டை இராணுவ ரீதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பெரும் வாய்ப்பாக இருக்கும்.

சிறிலங்கா இராணுவம் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைகளை யாழ். குடா நாட்டில் மேற்கொண்டபோது ஆனையிறவுப் படைத்தளம் சிறிலங்கா இராணுவத்திடம் இருந்தமை காரணமாகவே புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குத் தந்திரோபாய ரீதியிலான பின்வாங்கலை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. அன்று ஆனையிறவு புலிகளின் கையில் இருந்திருக்குமானால் தென்மாரட்சியையும் வடமராட்சியையும் சிறிலங்கா இராணுவம் இலகுவில் கைப்பற்றியிருக்க முடியாது. வேட்டுக்கள் தீர்க்கப்படாமல் வடமராட்சியைக் கைப்பற்றிவிட்டதாக அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பெருமைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

அடுத்ததாக சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இராணுவச் சமநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடன் எப்பொழுதும் இராணுவ மேலாதிக்க நிலையில் இருந்துகொண்டு பேசவே சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பியது. இதனை அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்தää வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன் கதிர்காமர் போன்றோர் வெளிப்படுத்தவும் தவறவில்லை. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த பின்னரே பேச்சுவார்த்தை புலிகளுடன் கைகுலுக்கல் எனப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் போன்றவர்கள் கூறினர். செயற்பட்டனர்.

ஆனால் ஆனையிறவில் ஏற்பட்ட தோல்வியானது சிறிலங்கா ஆட்சியாளர்களின் இராணுவ மேலான்மையென்ற சிந்தனையினாலேயே இல்லாது ஒழிந்தது. ஓயாத அலைகள் ஜயசிக்குறு ரணகோச நடவடிக்கைகளை முறியடித்த போது ஓரளவு இராணுவச் சமநிலை காணப்பட்டதெனக் கொண்டாலும் ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சியுடன் இராணுவ சமநிலை என்பது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகியது. சிறிலங்காப் படைத்தரப்பு இராணுவ ரீதியிலான மேலான்மையைப் பேசுவதென்பது கேலிக்குரியதொன்றாகியது.

மூன்றாவதாக அரசியல் சூழ்நிலையிலும் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சனாதிபதி சந்திரிகாவின் 'சமாதானத்திற்கான யுத்தம்" என்ற சித்தாந்தத்திற்கு ஆனையிறவில் பெரும் அடிவிழுந்தது. இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகளை ஒடுக்குதல் ஓரம் கட்டுதல் என்பது சாத்தியமாகாத நிலையில் சர்வதேச ஏற்பாட்டாளர்களின் துணையுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்தும் சிறிலங்கா அரசியல் தலைமை சிந்திக்கத் தொடங்கியது.

இந்த வகையில் ஆனையிறவுப் படைத்தளத்தின் வீழ்ச்சியானது இராணுவ அரசியல் ரீதியில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியதோடு சிறிலங்கா படைத்தரப்பிற்கு சில அடிப்படைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாகவும் இருந்தது. இதில் முக்கியமானது யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகள் மீதும் விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தலாம் என எழுந்த அச்சமே ஆகும்.

இந்நிலையில் ஆனையிறவைத்தவிர ஓயாத அலைகள் மூலம் விடுதலைப் புலிகள் நிலை கொண்ட பகுதிகள் மீது முதல் கட்ட நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டது. இதன் பிரகாரம் வலிகாமத்தில் கொழும்புத்துறை பகுதியிலும் தென்மராட்சியில் சாவகச்சேரி கைதடி நாவற்குழி பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளில் இராணுவம் பெற்ற வெற்றியானது சிறிலங்கா இராணுவத்திற்கு புதியதென்பை ஊட்டியது.

அது மட்டுமன்றிää ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் கைப்பற்றியதுடன் சர்வதேச நாடுகளிடம் சிறிலங்கா அரசு பகிரங்க இராணுவ உதவி கோரியதினால் பல அனுகூலங்களையும் ஈட்டியது. குறிப்பாக பாகிஸ்தான் செக்குடியரசு என்பனவற்றில் இருந்து பல நவீன பீரங்கிகளும் ஆயுத தளபாடங்களும் கிடைக்கப்பெற்றன. குறிபபாக பலகுழல் எறிகணை செலுத்தி - (மல்டிபெரல்) போன்ற ஆயுத தளபாடங்கள் சிறிலங்கர் ஆயுதப்படைக்குக்கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஆனையிறவுப் படைத்தள வெற்றியின்பின் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பு அதற்கான முன்முயற்சிகள் எவையும் சிறிலங்கா அரச தரப்பினரால் கருத்திற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக நோhவேத் தரப்பின் சமாதான முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகள் வழங்கிய ஒத்துழைப்பு ஒருதலைப்பட் சமான யுத்த நிறுத்த அறிவிப்புகள் என்பன அரசாங்கத் தரப்பால் புறம்தள்ளப்பட்டன.

மாறாக விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த காலத்தை சிறிலங்காப் படைத்தரப்பு தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் யாழ். குடா நாட்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீளக் கைப்பற்றிக் கொள்வதற்குமான கால அவகாசமாகவே பயன்படுத்திக் கொண்டது. அத்தோடு இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற ஆயுத தளபாடங்களும் சில வெற்றிகளும் ஆனையிறவுப் பிரதேசத்தை மீளவும் கைப்பற்றுவதற்கான தூண்டுதலைச் சிறிலங்கா படைத் தரப்பிற்குக் கொடுத்தது. இதன் நிமித்தம் பெருமளவு பயிற்சி நடவடிக்கைகளிலும் தயாரிப்பிலும் சிறிலங்கா இராணுவத் தரப்பு இறங்கியது.

இந்நிலையில் 2001 ஏப்ரலில் 25ஆம் திகதி அதிகாலை விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் முடிவிற்கு வந்து நான்கு மணித்தியால இடைவெளியில் தீச்சுவாலை என்னும் பெயரில் பாரிய படை நடவடிக்கை ஒன்றைச் சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்தது.

நன்கு தயார் செய்யப்பட்ட நிலையில் மூன்று டிவிசன்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான துருப்புக்கள் டாங்கிகள் கவச வாகனங்கள் என்பனவற்றின் துணையுடன் ஆட்லறிகள் பலகுழல் எறிகணைச் செலுத்திகளின் ஆதரவுச் சூட்டுடனும் விமானப் படையின் குண்டு வீச்சு உதவி என்பனவற்றுடன் இப்பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை ஊடறுத்து ஊடுருவிப் புலிகளின் முன்னணிப் படையணிகளை முற்று கைக்குள்ளாக்கித்தாக்கி அழிப்பதோடு ஆனையிறவு வரை முன்னேறி மீண்டும் ஆனையிறவை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இப்படை நடவடிக்கையின் இறுதி இலக்காகும்.

சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பின் முப்படைத் தளபதிகளும் பலாலிப் படைத்தளத்தில் இருந்து இத்தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்தினர். பெரும் எடுப்பிலான இப்படை நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் நடத்திய உக்கிரச்சமரானது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் முறியடிப்புச் சமர்களில் ஒன்றாகும். இரவு- பகலின்றி நான்கு நாட்கள் நடைபெற்ற இவ் உக்கிரச்சமரில் சிறிலங்கா இராணுவம் பாரிய அளவிலான இழப்பைச் சந்தித்தது. இப்படை நடவடிக்கையின் வெற்றிச் செய்தியை எழுதுவதற்காகப் பலாலிப்படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு இறந்த மற்றும் காயமடைந்த படையணியினரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதே சிரமமாகியது. இது குறித்துப் பின்னர் அவர்கள் பிரஸ்தாபிக்கவும் தவறவில்லை.

இந்த வகையில் விடுதலைப்புலிகள் ஆனையிறவுப் பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கு மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளையும் அப்பிரதேசத்தை பாதுகாக்க மேற்கொண்ட முறியடிப்புச்சமரும் ஒன்றிணைந்து இன்றைய இலங்கையின் இராணுவ அரசியல் வரலாற்றையே தீர்மானித்துள்ளது எனின் மிகையாகாது.

வெற்றிகரமான இவ்விரு சமர்களும் சிறிலங்கா இராணுவத்தின் தொழில்சார் திறமையைக் கேள்விக்குள்ளாக்கியதோடு சிறிலங்கா இராணுவ இயந்திரத்தை இயங்க வைக்க முடியாத இக்கட்டானதொரு நிலைக்கு இட்டுச் சென்றதெனலாம்.

இதனைத் தீச்சுவாலை நடவடிக்கையின் பின்னர் சிறிலங்கா இராணுவத் தரப்பு பாரிய படை நடவடிக்கைகள் எதையும் திட்டமிட முடியாமல் இருந்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்கள் சமாதான முயற்சிகளில் இணக்கப்பாட்டிற்கு வராது போனாலும் அவர்களின் காயங்கள் ஆற்றப்பட முடியாதவையாகவே இருந்தன.

அது மட்டுமல்ல பொ.ஐ.முன்னணி அரசாங்கம் அடுத்த பொதுத்தேர்தலில் தோல்வி அடையவும் சமாதானப்பேச்சுவார்த்தைகளை ஆதரித்த ஐ.தே.முன்னணி ஆட்சி அதிகாரத் தைக்கைப்பற்றவும் ஆனையிறவில் இராணுவம் சந்தித்த தோல்விகளும் அடிப்படையாயின.

இன்று கூடச் சிறிலங்கா ஆட்சியாளர்கள் யுத்தத்தையே விரும்புகின்றனர். ஆயினும் அவர்கள் கடந்த காலத்தில் இராணுவ ரீதியில் பெற்ற கசப்பான அனுபவங்கள் - அதிலும் குறிப்பாக புலிகளின் ஓயாத அலைகள் - பெற்ற வெற்றி இராணுவத்தின் தீச்சுவாலை நடவடிக்கையின் போது சந்தித்த இழப்பு என்பன அவர்களை யுத்தத்தைத் தேர்ந்தெடுக்க முடியாத அளவிற்கு அச்சத்தை கொடுப்பவையாகவுள்ளன.

அவ்வாறு இல்லாதுவிடில் ஐ.தே.முனனணி அரசாங்கம் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்பாட்டை சமாதான முயற்சிகளுக்கான முன்னெடுப்பதற்கான இடைக்கால நிர்வாகம் சுனாமி அனர்த்த நிதி முகாமைத்துவத்திற்கான பொதுக் கட்டமைப்பு ஆகிய அனைத்தையும். எதிர்த்துக்கொண்டும்-அதேவேளை அவற்றை நிராகரிக்க முடியாமல் ஆளும் கூட்டணிக்குள் முரண்பட்டு பிணக்குகளை வளர்த்துக் கொண்டும் அவர்கள் இருக்க மாட்டார்கள். இது வரையில் யுத்தத்தை ஆரம்பித்திருப்பார்கள்.

நன்றி: ஈழநாதம் </b>

---------------------------------------------------------------------

<b>தமிழிழ மண்மீட்பு போரிலே தங்களை இன்னுயிர்களை தாய் மண்ணுக்கக அர்பணித்த மாவிரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவிக்கும் அதே நேரம் 240 வருடகால தொண்டைக்குள் முள்ளாய் சிக்கிகிடந்த ஆணையிறவை மீட்ட 5ம்வருட வெற்றிகழிப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழிழ விடுதலைபுலிகள் தமிழிழ மக்களுக்கு எனது வாழ்த்தையும் யாழ்களம் ஊடக தெரிவித்துக்கொள்கிறேன்... :!: </b>
[b]

,,,,.
Reply
#2
நன்றி செல்வன்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#3
<b>பாதையைப் பிடிக்கவேண்டும் அல்லது சாகவேண்டும்
வட போர்முனைக்கட்டளைத் தளபதி கேணல் தீபன்


சிறிலங்கா இராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும்படைத்தளமாகிய ஆனையிறவுத் தளம் விடுதலைப்புலிகளால் முற்றாகதுடைத்தளிக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு வெற்றி விழாவினைக்கண்டுள்ள நிலையில் அத்தளம் மீதான தாக்குதலின்போது நடந்த முக்கிய சம்பவங்களையும் அச்சமரில் ஏற்பட்ட திருப்புமுனைகளையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார் வட போர்முனைக்கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள்.

<img src='http://img197.echo.cx/img197/7016/thipan0hf.jpg' border='0' alt='user posted image'>
வட போர்முனைக்கட்டளைத் தளபதி கேணல் தீபன்.

ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதி முன்னணிக் காப்பரணாக விளங்கிய பரந்தன் பகுதி காப்பரண்கள் தென்னாசியாவிலேயே மிகப் பலம்பொருந்திய இராணுவக் காப்பரணாக உள்ளதென அன்று இராணுவ ஆய்வாளர்களால் கூறப்பட்டது. இக் காப்பரண்களை நீங்கள் தாக்கி அழிக்கின்ற சந்தர்ப்பத்தில் எதிரியின் தாக்குதல்கள் எவ்வாறு அமைந்திருந்தது? அதற்கான எதிர்த் தாக்குதல்களை நீங்கள் எவ்வாறு மேற்கொண்டீர்கள்?

ஆனையிறவுத் தளத்தின் முன்னணி காப்பரண்களின் வரிசையில் பரந்தன் காப்பரணும் முக்கியத்துவமானது. உண்மையிலேயே ஆனையிறவினதும், அதனைச் சூழவிருந்த தளங்களினதும் பலம் என்பது உலக இராணுவ வல்லுநர்களாலும், சிறிலங்கா இராணுவத்திற்கு பயிற்சி வழங்கிய இராணுவப் பயிற்சியாளர்களாலும் இது ஒரு வெற்றிகொள்ள முடியாத அளவில் இதன் பலமும் பரிணாமமும் கொண்டதென கூறப்பட்டதை அறிந்துள்ளேன்.

அந்த வகையில், அத்தளத்தை நாம் தாக்க முற்படும்போது ஒரு வித்தியாசமான யுத்திமுறையை, அதாவது, புதிய தந்திரோபயத்தையே தலைவர் காட்டித் தந்தார். பரந்தன் பகுதியை உடைத்து ஆனையிறவின் மையப்பகுதியை நெருங்கும் வரைக்கும் ஒரு புதிய யுத்தியையே நாம் கையாண்டோம். அதுவும் ஒரு சவாலாகத்தான் அந்த இடத்தைக் கைப்பற்றினோம்.

ஏனெனில், இவ்வளவு பலப்படுத்தப்பட்ட அதுவும் பகல் நேரங்களில் முழுமையாக நகர முடியாது என்று கருதப்படக்கூடிய ஒரு புவியியல் அமைப்பில்; பகலிலேயே அந்தப் பகுதியை உடைத்துக் கைப்பற்றினோம் என்பது எமது போரியலில் ஒரு மாற்றமும், எங்கள் போராளிகளின் செயற்பாட்டிலும், அவர்களின் மனநிலையிலும் ஒரு மாற்றத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது என்றுதான் என்னால் கூறமுடியும்.

அந்தச் சண்டையைப் பொறுத்தவரையில், நாங்கள் அந்தப் பகுதிக்காவலரண்களை தாக்கத் தொடங்கும்போது பகல் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் தான் அந்த உடைப்பைச் செய்தோம். அப்போது நாங்கள் எமது மறைமுக, நேரடிச் சூட்டு ஆயுதங்களை அந்தக் களத்தில் பயன்படுத்தி அக்காவலரண்களைத் தாக்கி செயலிழக்கச் செய்த நிலையில், ஊடறுப்பைச் செய்து முன்னேறி காவலரண்களை அழித்து அந்த பகுதியை கைப்பற்றத் தொடங்கினோம்.

ஆரம்பத்திலேயே நாங்கள் முதலாவது நகர்வை செய்யும்போது எமக்கு கடுமையான எதிர்ப்புக் கிடைக்கவில்லை. அதாவது, நாம் உள்நுழைய வேண்டிய பாதையை உடைத்து அணிகள் அந்தப் பகுதிக்குள் நுழையும்போது எமக்கு எதிர்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அதனை உடைத்து முன்னேறிய பின் நாம் பிடித்த பகுதியை தக்கவைக்க முடியுமோ என்ற அளவிற்கு இராணுவத்தினரின் எதிர்ப்பு தீவிரமடைந்திருந்தது.

பரந்தனின் இரு பக்கவாட்டு காவலரண் பகுதிகளாலும் நேரடியாகவும், அத்தோடு, அந்த நேரத்தைப் பொறுத்த வரையில் கனரக ஆயுதங்களை தூரத்திலிருந்தே பயன்படுத்தி எங்களை செயலிழக்க வைக்கக்கூடிய நேரமாகவும் இருந்ததானால், உடைத்து உள்நுழைந்து அப்பகுதியை விரிவாக்கிக் கொண்டு போகின்ற சந்தர்ப்பத்தில் எமக்கு மிகவும் பலமான எதிர்ப்புக் கிடைத்தது. எதிரியின் டாங்கி அணிகள் மிக மூர்க்கத்தனமாக எல்லாப் பகுதிகளாலும் எமது நகர்வை தடுத்துக் கொண்டிருந்தன.

அதே நேரத்திலே ஆனையிறவுத் தளமானது மிகுந்த பலத்துடன் அதாவது, காவலரண்கள், ஆளணி, சூட்டாதரவு இந்த மூன்று வகையாலும் பலமாகவே இருந்தது. இப்பகுதியை நாம் உடைத்த அந்த நேரத்தில் இருந்து அவர்களின் சூட்டு ஆதரவு அதாவது, ~ஆட்லறி பவர்| மிகப் பலமாகவே இருந்தது. இவ்வளவு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாம் கைப்பற்றிய அந்தப் பகுதியில் இருந்து முன்னேறுவது என்பது ஒரு கடினமானதாகவும், சவால் நிறைந்ததுமாகவே இருந்தது. அத்தோடு, அந்தத் திட்டமானது எமக்கு முக்கியமானதாகவும், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தது.

தலைவர் அவர்களிடமும் எம்மிடமும் எந்தத்திட்டத்தையாவது பயன்படுத்தி அந்தத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அதனாலேயே, நாம் அந்த கடினத்துக்குள்ளும் எமது தந்திரோபயங்களாலும், எமது சூட்டு ஆதரவுகளின் செறிவாலும் நாங்கள் அதை முறியடித்து வந்தோம்.

பரந்தன் இராசயனத் தொழிற்சாலைப் பகுதியில் இருந்த பிரிகேட்தளம், உமையாள்புரம் பகுதியில் இருந்த ஒரு பிரிகேட்தளம் ஆகிய இரண்டு பிரிகேட்தளங்கள் நாம் முதற்கட்டமாக தாக்கிய பகுதிக்குள் இருந்தன.

ஆகவேதான், நாங்கள் மிகவும் கடின முயற்சி எடுத்து அந்தப் பகுதிகளைப் பிடித்தாலும் அவற்றைத் தக்கவைப்பதென்பது கடினமாக இருந்தது. நாங்கள் பிடித்த பகுதிகளை பின்பு எதிரி பிடிப்பதும், அதன் பின் நாம் கைப்பற்றுவதுமாக பலமுறை முயன்றுதான் அப்பகுதியை நாங்கள் பிடித்தோம். சமரின் ஆரம்பத்தில் முல்லை வீதியையும், பின்பு பூநகரி வீதியையும் பிடிக்கும் வரை மிகக்கடுமையான எதிர்ப்பு எங்களுக்கு வந்தது.

அடுத்து ஆனையிறவில் இருந்தும் மேலதிக உதவி அணிகளை எதிரிபெற்று முல்லைத்தீவு, பூநகரி வீதிகளையும் உடனடியாக நிலைகளை அமைத்து பலப்படுத்தத் தொடங்கிவிட்டான். ஆகவே, அந்த இரண்டாவது அரணையும் உடைத்த பின்பு குறிப்பிட்ட நகர்வு இலகுவாக இருந்தது. ஆனால், இரசாயனத் தொழிற்சாலை முகாமை கைப்பற்ற முன்னர் அந்த முகாமிலிருந்து மீண்டும் அரண்களைப் பலப்படுத்தத் தொடங்கியிருந்தான்.

ஏனெனில், புவியியல் ரீதியாக இந்தப் பிரதேசம் கனரகஆயுதத் தாக்குதல்களுக்கும் நிலையெடுத்திருப்பவர்களுக்கும் வாய்ப்பான பிரதேசம். ஆனால், நாம் நகர வேண்டிய கட்டத்திலிருந்தோம். எனவே, இந்த நிலையில், எமது போராளிகளின் உணர்வு, உத்வேகம், தியாகம் என்பனதான் இப்பகுதியை நாம் கைப்பற்றத் துணையாக இருந்தன.

<img src='http://img197.echo.cx/img197/285/palraj5ln.jpg' border='0' alt='user posted image'>
தளபதி கேணல் பால்ராஜ்.

பல கட்டங்களாக நடைபெற்ற இச்சமரில் திரும்புமுனையை ஏற்படுத்திய சமர் எதுவெனக் கூறமுடியுமா? அச்சமர் எவ்வாறு அமைந்திருந்தது?

ஆனையிறவின் வெற்றிக்குத் திருப்புமுனையாக அமைந்தது குடாரப்புவில் தரையிறக்கிய சமர்தான் வெற்றிக்கு மூலமாக வித்திட்ட சமராகும். அதாவது, நாங்கள் எதிரிக்குப் பின்னால் சென்று தரையிறங்கி அந்த விநியோகப் பாதையை நாங்கள் தடுத்து நிறுத்த ஆரம்பித்தது எதிரிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆகவே, இதுதான் ஆனையிறவின் இறுதி வெற்றியின் சமராக அமைகிறது. அதாவது, ஆனையிறவுப் பகுதியைக் கைப்பற்ற தலைவர் இரண்டு திட்டங்களையிட்டார். தரையிறங்கி ஆனையிறவுக்கும், யாழ்ப்பாணத்திற்குமிடையே விநியோகத்தைத் துண்டிப்பது, உதவிப் படைகளையும் தடுப்பது ஒரு திட்டம். அந்தத் திட்டம்தான் குடாரப்பு தரையிறக்க திட்டமாகிய முதலாவது கட்டம்.

இது இரகசியமாக ஊடுருவி அவர்கள் நிலைப்பட்டவுடன் ஆனையிறவுப் பகுதிகளை தாக்கியழிப்பது. இந்தத் தாக்கியழிப்புத் திட்டத்தினை நான் பொறுப்பேற்றிருந்தேன். தரையிறங்கும் திட்டம் கேணல் பால்ராஜின் தலைமையில் நடந்தது. தரையிறங்கிய பின் என்னுடைய நடவடிக்கை அவர்களுக்குரிய தரைவழிப்பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், கடலால் தரையிறக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு பொருட்களுடன்தான் அவர்கள் சென்றிருந்தார்கள். அதன்பின் தொடராக சண்டையிட விநியோகம் முக்கியமாகவிருந்தது. இதற்குப் பெரிய பலமான ஒரு பகுதியை நாம் உடைத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அது தாளையடியில் அமைந்திருந்த பொக்ஸ் என குறிப்பிடுகின்ற பகுதியாகிய அதாவது, கடற்கரையை மறித்து கிட்டத்தட்ட 10 கிலோ மீற்றர் சுற்றளவு கொண்ட ஒரு பகுதி அந்தப் பகுதிக்குள் ஐம்பத்து மூன்றாவது டிவிசன் கொமாண்டோ அணி நிலை கொண்டிருந்த பகுதி. இவற்றை உடைத்து அழித்தால்தான் தரையிறக்கப்பட்டவர்களுக்கான தரை விநியோகம் அங்கு நடக்கும்.

எமது நடவடிக்கையில் முதல் கட்டமாகிய இந்தத் தரைவழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சண்டையில் அதாவது, 26.03.2000 ஆம் ஆண்டு அந்த அணி தரையிறங்க நாங்கள் மறுநாள் காலை பாதை ஏற்படுத்துவதற்கான சமரை ஆரம்பிக்க வேண்டும். இதற்கிடையில் இராணுவமும் இருபத்தேழாம் திகதி மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றைச் செய்து, விட்ட பகுதியை மீளக் கைப்பற்றுவதற்குரிய திட்டத்தையும் போட்டிருந்தது.

எமது இந்தத் தாக்குதல் நடைபெறாவிட்டால் முதல் அவர்கள் இழந்த கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பகுதிகளைப் பிடிப்பதற்குரிய பெரிய திட்டமொன்றை இட்டிருந்தனர். இதனால், நாம் பாதை திறக்கவேண்டிய அந்தப் பகுதிக்குள் கூடிய ஆளணியும் கூடிய கனரக டாங்கிகள், பவல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்து அங்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால், எமது திட்டப்படி இரண்டு நாட்களுக்குள் பாதையைத் திறந்து கொடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே, இது அப்போது ஒரு சவால் நிறைந்த சண்டையாகவே இருந்தது. இதன்படி 27 ஆம் திகதி காலை நாங்கள் சண்டையை ஆரம்பித்துவிட்டோம். ஆனால், அன்று மாலை வரை 900 மீற்றர் பகுதியைத்தான் பிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், நாங்கள் கடற்கரையாக மூன்று கிலோ மீற்றர் பகுதியைப் பிடித்தால்தான் குறிப்பிட்ட பிரதேசத்தைப் பிடிக்க முடியும். ஏனென்றால் அப்பிரதேசம் கடலும் வெட்டையும், மணலும் சார்ந்த ஒரு பிரதேசம்.

ஆகவே, பகல் நகர்வுகளில் நிலையெடுத்திருப்பவர்களுக்கு வாய்ப்பானதாகவும், நகர்பவர்களுக்கு கஷ்டமான பகுதியாகவும் இருந்தது. ஆகவே, சரியான உத்தியின்றி நகர்ந்தால் நாங்கள் இழப்பையே சந்திக்க வேண்டிவரும். அத்தோடு, எதிரியிடம் டாங்கி வலுவும் அங்கேயே பலமாக இருந்தது.

நாங்கள் இருபத்தேழாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரண்டு பக்கமாக நகர்ந்து கொண்;டிருந்தோம். ஒரு பக்க நகர்வு சிறிது பின்னடைவாகவே இருந்தது. மறுபகுதி 900 மீற்றர் வரை சென்று விட்டது. ஆனால், மதியத்திற்கு பிறகு நாங்கள் கைப்பற்றிய பகுதியை இராணுவத்தினர் பதில் தாக்குதல் செய்து கைப்பற்றிக் கொண்டுவர ஆரம்பித்தனர். அவர்களோடு எமது அணிகளும் மிக உக்கிரமாக சண்டையிட்டுக்கொண்டு பின் நகர்ந்து கிட்டத்தட்ட 900 மீற்றரில் அறுநூறு மீற்றரை இழந்துவிட்டோம்.

இந்த நேரத்தில் எமக்கு சவால்கள் அதிகரித்துக் காணப்பட்டது. மறுபுறம் தரையிறங்கிய 1200 பேருக்குரிய விநியோகத்தை தரைவழியாகக் கொடுத்தே ஆகவேண்டும். இது கொடுக்காமல் விடப்பட்டால் அந்தச் சண்டையை நடத்த முடியாது.

இதேநேரத்தில் அவர்களுக்கான கடல் வழி விநியோகமும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டது. அத்துடன் கடல் தாக்குதலையும் எதிரி அதிகரித்திருந்தான். இதேவேளை, தரையிறங்கிய 1200 பேருக்கும் அழுத்தம் அதிகரித்த அதேவேளை, அவர்களுக்கான விநியோகத்தை வழங்க வேண்டிய முக்கியத்துவமும் எமக்கு அதிகரித்தது.

ஏனெனில், அந்த ஆயிரத்தி இருநூறு பேரினதும் உயிரும் கிட்டத்தட்ட எமது கையிலென்ற நிலைக்கு மாறிவிட்டது. இதனால், எமது நகர்வினுடைய தந்திரோபாயங்களை மாற்றி எமது நகர்விற்கான மாற்றுத் திட்டங்களை வகுத்து வேவு ரீதியாக நகர்ந்தும் ஏனைய இடங்களில் புதுநிலைகளை அமைத்தும் ஆளணிகளை கூட்டியும் 29 ஆம் திகதி மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தோம்.

இத்தாக்குதலின் உக்கிரத்தால் எதிரி பின்வாங்க மூன்றாம் நாள் இப்பாதையை நாங்கள் முற்றாகக் கைப்பற்றினோம். அது எங்களுக்கு ஒரு சவாலாகத்தான் இருந்தது. இவ்வளவு பேரும் வீழ்ந்தாலும் அந்தப் பாதை திறபடவேண்டும் அல்லது இவ்வளவு பேரும் விழவேண்டும்.

ஏனென்றால் அந்த ஆயிரத்தி இருநூறு பேரும் எங்களுடைய விநியோகத்தை நம்பி நின்றதால் முதல் நாள் எமது திட்டத்தில் பின்னடைவு வந்தவுடன் எமக்கான அழுத்தம் அதிகரித்தது.

நாம் கைப்பற்றிய இடங்கள் மீளவிடுபட்டதும் எமக்கு நெருக்கடி நிலைகள் ஏற்பட்டது. ஆகவே, மூன்றாவது நாள் எம்மோடு நின்ற தளபதிகள் லெப். கேணல் சேகர், அறிவு, கடற்புலிகளைச் சேர்ந்த வினோத் எல்லோருமாக முடிவெடுத்து நாம் ஒவ்வொரு வரும் சாகவேண்டும் அல்லது பாதையைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்தோம்.

ஆகவே, ஒவ்வொருவருடைய அந்த மூர்க்கத்தனமான முடிவும் போராளிகளின் மன உணர்வுகளும் உறுதியும் இரண்டில் ஒன்றை காணவே வேண்டும் என்ற எண்ணத்தோடும் சண்டை செய்யும்போது எமக்கு வெற்றி கிடைக்கிறது.

ஆனையிறவுத் தளத்தின் உட்பகுதியை தாக்கியழிக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய தாக்குதல்களினால் நிலைகுலைந்திருந்த படையினரின் எதிர்ப்பு எவ்வாறு இருந்தது?

நாங்கள் நேரடியாக தளத்தினுள் உட்புகவில்லை. முதற்கட்டமாக குடாரப்பில் இறங்கி விநியோகப் பாதையை துண்டிக்க அடுத்த கட்டமாக ஆனையிறவில் அதேபோன்ற இன்னுமொரு துண்டிப்பை செய்ய வேண்டியிருந்தது. குடாரப்புப் பகுதி இரகசிய ஊடுருவல் மூலம் விநியோகப் பாதை துண்டிக்கப்பட்டது. ஆனால், இங்கு எதிரியின் காப்பரண்கள் முகாம்களை அழித்து உடைத்துக் கொண்டு சென்று புதுக்காட்டுச் சந்திக்கும், இயக்கச்சிக்குமிடையில் இன்னுமொரு ஊடறுப்பைச் செய்தோம்.

இதனூடாக தளம் முற்றுகையிடப்படுவது எதிரிக்கு விளங்கியிருந்தது. கிளாலியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் இடைவெளியிலிருக்கும்போது தொடர்ந்து சங்கத்தார் வயல் இயக்கச்சிப் பகுதிகளில் இருந்த முன்னணி காவலரண்களையும் தாக்கியழிக்க தொடங்கினோம்.

அத்தோடு, வெளிப்பகுதி அரண்களையும் உடைத்துக் கொண்டு போகும் போது படையினருக்கு நிலைப்பாடு விளங்கிவிட்டது. இதனால், அவர்களின் நிலைகள் குழம்பிப்போக தமது இருப்பிடங்களை விட்டு தற்காலிக நிலைகளை அமைத்து சண்டையிடுகின்ற கட்டம் உருவானது. அத்தோடு, இராணுவத் தளபதிகளுக்கு விளங்கிவிட்டது. தாம் முற்றாக அழிக்கப்படபோகிறோமென்பது.

இதனால், சண்டையிடுபவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க ஏனையோர் அங்கிருந்து பின்வாங்க ஆரம்பித்தார்கள். நாங்கள் திரியாய் அம்மன் கோவிலடியிலிருந்து கிளாலி நோக்கி போய்கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட மூன்று நாள் நடவடிக்கையாக கண்டி வீதியையும் புகையிரத வீதியையும் கடந்து போய்கொண்டிருக்கும்போது ஏனைய சங்கத்தார் வயல், இயக்கச்சி, கொம்படி முன்பகுதிகளுக்குள்ளாலும் எமது தாக்கியழிக்கும் அணிகள் உள்நுழைந்து கொண்டிருந்தன.

இதனால், எதிரி பின்வாங்க ஆரம்பித்தான். நாங்களும், தாக்கிக் கொண்டு போகும்போது அவர்கள் பின்வாங்குவது தெரிந்தது. இதனால், நாங்கள் வேகப்படுத்திக்கொண்டு முகாமை நோக்கி ஓர் நகர்வை வேகமாக செலுத்தினோம். நாம் கிளாலியை அண்மித்த வேளையில் பின்வாங்கிச் சென்றுக்கொண்டிருந்தார்கள்.

வாகனங்கள், ஆட்லறிகள் அனைத்தையும் நகர்த்திக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் வைத்து நாம் அடித்த அடியில்தான் ஆட்லறியை விட்டுவிட்டு ஓடினார்கள். அத்தோடு, பத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அழிக்கப்பட அதில் பயணித்த இராணுவத்தினரும் இறந்து கிடந்தனர். அந்த இடத்தில்தான் ஆனையிறவுத்தள பொறுப்பதிகாரியாகவிருந்த பிரிகேடியர் பேர்சி பெர்னாண்டோவும் சாவடைந்து கிடந்ததைக் கண்டோம். தொடர்ந்து நாங்கள் அப்பகுதியில் நடத்திய தாக்குதலில் பெருந்தொகையான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

<img src='http://img197.echo.cx/img197/8235/panu32lk.jpg' border='0' alt='user posted image'>
ஆனையிறவில் தமிழீழ தேசியக்கொடியை தளபதி கேணல் பானு ஏற்றுகிறார்.

ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சியானது இற்றைவரைக்கும் இராணுவ ரீதியில் எவ்வாறு நோக்கப்படுகிறது.

பொதுவாக ஆனையிறவுப் படைத்தளத்தினுடைய வீழ்ச்சியானது சிறிலங்கா இராணுவத்திற்கு மனோநிலை ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மிகவும் ஒரு உச்சக்கட்டப் பாதுகாப்போடு இருக்கின்ற ஒருதளமென்பதோடு பல ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளத்தையே எங்களால் காப்பாற்ற முடியாது போனதே என்றால் இனி இராணுவ ரீதியாக புலிகளை வெல்ல முடியாதென்;ற செய்தியை இராணுவத்திற்கு மிகத் தெளிவாக அந்தச் சமர் விளங்கப்படுத்தியிக்கின்றது.

அதில் அந்த தெளிவை அடைந்திருப்பார்கள். ஏனெனில், இதன்பின் தீச்சுவாலை என மீண்டும் ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்தனர். அதிலும், பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தனர். அந்த ரீதியாக புலிகளின் பாரிய இராணுவ ஆற்றலை வெளி உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததும் இந்த ஆனையிறவு சமராகத்தான் இருக்கின்றது. இராணுவ ஆய்வாளர்களும் அவ்வாறுதான் கருதுகிறார்கள்.

ஏனெனில், அந்தப் புவியியல் அமைப்பினைப் பார்க்க இராணுவ ஆய்வாளர்களும் வல்லுநர்களும் இத்தளத்தை ஒருபோதும் அழிக்க முடியாதென்றுதான் கூறினார்கள். அந்தத் தளம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வேகமான முறையில் வீழ்த்தப்பட்டதென்றால் புலிகளின் இராணுவ சக்தியை வெளிப்படுத்திய சமரும் இதுதான் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இது உண்மையானதும்தான். அத்தோடு, <span style='font-size:25pt;line-height:100%'>எமது போராளிகளைப் பொறுத்த வரையிலும் இந்த ஆனையிறவின் வெற்றியானது இனி எந்தவொரு இலக்கானாலும் எங்களால் வெல்ல முடியும் என்ற ஒரு உணர்வையும் அந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இனி பலாலியென்றாலும் சரி அதைவிட பெரிய தளமென்றாலும் சரி அனைத்தையும் இலகுவாக வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் இந்த ஆனையிறவு வெற்றி எமக்கு ஏற்படுத்தியுள்ளது.</span>

[b]நன்றி ஈழநாதம் & தமிழ் நாதம்.</b>
[b]

,,,,.
Reply
#4
இன்றும் உலக வல்லரசுகளால் நம்ப முடியாமல் உள்ள வெற்றியல்லவா.மீட்டெடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#5
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/1alai2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/31.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/32.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/33.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelatamil.com/gallery/data/media/2/8.jpg' border='0' alt='user posted image'>

மேலும் ஆனையிறவு சமர் படங்களை பார்க்க
Reply
#6
நன்றி செல்வன்,

ஆனைஇறவில் இருந்து நாம் எமது இராணுவ வல்லாதிக்கத்தை வளர்க்க மேலும் பின் வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

1)எதிரியின் இராணுவ கேந்திர மய்யமான ,கொளும்பை நோக்கிய கள விருவு.

2)கொளும்பில் உள்ள எதிரியின் கட்டளை மற்றும் தொடர்பாடல் மையங்கள் பற்றிய புலனாய்வு, ஊடுருவல்.

3)இராணுவ தொழில்னுட்ப விருத்திக்கான ஆய்வு மையம் அமைத்தல்.

4)உலகளாவியரீதியில் தமிழ் தொழில்னுட்பவியழாளரய் ஒருங்கமைத்தல்.

5)உலகப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழரை ஒருங்கமைத்து தொழில்னுட்ப அறிவைத் திரட்டுதல்.

6)சர்வதேசவலைப்பின்னலை பாவித்து இவ் ஒருங்கமைவை உருவாக்குதல், தகவல்களைத்திரட்டுதல்.

7) நில- வான், நில- நில ஏவுகணைத் தொழில்னுட்பத்தை உள்வாக்கல், வடிவமைத்தல், உற்பத்தி செய்தல்.

8)களத்திலும், புலத்திலும் மக்களை அரசியல் மயப்படுதுதல்.

9)போராளிகளுக்கு அரசியல் அறிவூட்டல், அணிதிரட்டல்.

10) சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உண்மயான நிலவரத்தை தெழிவு படுத்துவதன் மூலம், மக்களின் அரசியல் மலட்டுத் தன்மயை உடைத்தல்.

11)சுய நிர்ணயம் பற்றிய தெழிவை மீள கட்டியெளுப்புதல்.

மேலும் வரும்......
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)