Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்தவர்கள்
#1
விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் சம்மதித்தது - வட.கிழக்கு மாகாண ஆளுனர்
ஜ மட்டக்களப்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமைää 10 மே 2005ää 22:21 ஈழம் ஸ
விடுதலைப் புலிகள் உள்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந் நிலையில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் உள்ளடங்கிய பொதுக்கட்டமைப்பை எதிர்ப்பது நியாயமானது அல்ல என வட கிழக்கு மாகாண ஆளுனர் ரிரோன் பெர்னான்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜே.வி.பி. ஆயுதம் தரித்த அமைப்பாக செயல்பட்டு தற்போது ஜனாநாயக வழிக்கு வந்துள்ளதை சுட்டிக் காட்டும் அவர்ää

இதனை ஜே.வி.பி. யினர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று தான் நம்பவதாகவும் கூறுகின்றார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்

விடுதலைப் புலிகளை பிரதான ஜனநாயக வழிக்கு கொண்டு வர ஜே.வி.பி தலைமை வகிக்க வேண்டும். ஒரு காலத்தில் ஜே.வி.பி. ஆயுதம் தரித்த அமைப்பாக செயல்பட்டவர்கள். இன்று அந்த நிலை மாறியுள்ளது. இப்படியிருக்கும் பொழுது ஜே.வி.பி.யினர் இவ் விடயத்தை மிகவும் முக்கிய விடயமாக கருதி செயல்பட வேண்டும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் அரசாங்க நிவாரணப் பணிகளுக்கு எவ்வகையிலும் அவர்கள் தடையாக இருந்ததில்லை.

இந் நிலையில் இந்த பணிகளுக்கு அவர்களும் உள்ளடக்கப்பட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும்

தற்போது சமாதானப் பேச்சுவார்ததை இடை நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த பேச்சுவார்ததையுடன் தொடர்புடைய மறு தரப்பு விடுதலைப் புலிகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு பிரதேசத்தில் ஒரு பிரிவினருக்கு ஏதாவது அதிகாரம் இருக்குமானால்அந்த பிரதேசத்தில் எந்தவொரு காரியத்தையும் செய்வது மிகவும் இலகுவானது. மக்களைப் பொறுத்த வரை அரசாங்க அதிகார்ததை விட அந்த பிரிவினரிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர் பார்க்கின்றார்கள்.

விடுதலைப புலிகள் ஆயுதம் தரித்தாலும் அவரிகளிடமும் பலம் இருக்கின்றது. இதன் காரணமாகவே பேச்சுவாரததைக்கு அரசாங்கம் முன் வந்தது.

அவர்கள் தற்போது அரசாங்கத்துடன் இனைந்து செயல்பட முன் வந்துள்ள சந்தரப்பததை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் .இது நாட்டிற்கு நன்மையை தரக் கூடியதாக இருக்கும்.

உத்தேச பொதுக் கட்டமைப்பானது தனி நாட்டுக்குரிய அத்திவாரம் என ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இப்படியான அச்சம் புதியதொன்றல்ல. ஏற்கனவே போர் நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திட்ட போது கூட இப்படியான அச்சம் நிலவியது. இது தேவையற்ற அச்சமாகும். இப்படியான அச்சங்களும் சந்தேகங்களும் நிலவினால் பிரச்சினைக்கு தீர்வென்பது கிடைக்கப் போவதில்லை.

விடுதலைப் புலிகள் தங்களுக்கு தனி நாடு தேவை எனக் கருதினால் போர் நிறுத்த உடன் படிக்கையிலோ அல்து உத்தேசக் கட்டமைப்பிலோ ஆர்வம் காட்ட வேண்டிய தேவை இல்லை. 'எங்கள் வழியை நாங்கள் பார்க்கின்றோம். உங்கள் உதவி எங்களுக்கு தேவை இல்லை' என்றிருப்பார்கள்.

இந் நாடு சிங்கள பௌத்த மக்களுக்கு மாத்திரம் சொந்தமானது என நினைப்பது தான் பிரச்சினைகளுக்கு மூல காரணம். இது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து சகல அதிகாரங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)