05-18-2005, 02:03 AM
<b>இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை </b>
ஐநா பாதுகாப்பு சபையில் தங்களுக்கு வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேஸில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா வந்த ஐநா செயலாளர் கோபி அன்னனிடமும் இந்தியா இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.
இந் நிலையில் ஐநாவில் உள்ள ஜெர்மனியின் தூதரக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த 4 நாடுகளும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐநாவில் இந்த நான்கு நாடுகளும் சுற்றுக்கு விட்டுள்ளன.
அதில், ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15லிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5ல் இருந்து 9 ஆக உயர்த்த வேண்டும்
ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவிலிருந்து தலா ஒரு நாட்டையும் நிரந்தர உறுப்பினர்களாக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்க வேண்டும்.
புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர்களின் அதிகாரம் (வீடோ பவர் உள்ளிட்டவை) வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியுடன் வீட்டோ அதிகாரமும் அளிக்க வலியுறுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுச்சர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அளித்த பேட்டி:
இந்தியாவுக்கும் இதர G4 நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்த உறுப்பினர் பதவி அளிக்க வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு இது கவலை அளிக்கும் விஷயம். இப்பிரச்னையால் பல்வேறு நாடுகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழும். வீட்டோ அதிகாரம் அளிக்கப்படுவது பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
விரிவுப்படுத்தப்படும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவுக்கு கட்டாயம் வீட்டோ அதிகாரம் வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஜப்பானை நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இப்போதைக்கு அந்த நிலையுடன் அமெரிக்கா நிற்கிறது.
இவ்வாறு பவுச்சர் கூறினார்.
<b>சீனா எதிர்ப்பு:</b>
இதற்கிடையே இந்த 4 நாடுகளின் கோரிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் காங் குவான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், இந்தியா உட்பட 4 நாடுகள் தங்களுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரியிருப்பது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
இதனால் பாதுகாப்பு சபை விரிவாக்கத்தின் போது நியாயமாக நடக்க வேண்டிய காரியங்கள் தடைபடும் வாய்ப்பு உள்ளது.
வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. ஐநா பாதுகாப்பு சபை விரிவுபடுத்தும் விஷயத்தில் சீனாவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.
செய்திகள்: தினமலர் மற்றும் தற்ஸ்ரமில்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&