06-04-2005, 06:16 AM
<b>தங்க புதையல் ஆசை காட்டி ரூ.2 ஆயிரம் மோசடி
நண்பர்- மந்திரவாதி கைது </b>
ஊத்துக்கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட வேலாக்கபுரத்தை சேர்ந்தவர் மணி என்ற சுப்பிரமணி (வயது 48 ). இதே பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் சுப்பிரமணி தனது நண்பர் வெங்கடேசனிடம் ஒரு இடத்தில் தங்க குண்டு புதையல் உள்ளது அதை எடுத்து விற்று அதில் வரும் பணத்தை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்வோம், ஆனால் புதையல் எடுப்பதற்கு சுமார் 20 ஆயிரம் வரை பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார் உன்னிடம் இருந்தால் கொடு தங்க குண்டை விற்று எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். நண்பனின் பேச்சை நம்பிய வெங்கடேசன் பணம் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
இதற்கிடையில் மணி நாகலாபுரம், ஒட்லகுப்பத்தை சேர்ந்த மந்திரவாதி மோகன் (வயது 35) என்பவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது என் நண்பனிடம் புதையல் இருப்பதாக கூறி 20 ஆயிரம் பணம் வாங்கிவிட்டேன் எனவே நீங்கள் புதையல் இருப்பதாக கூறி நம்பவையுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சம்பந்தம் தெரிவித்த மந்திரவாதி வெங்கடேசனை அழைத்து பேசியுள்ளார். அப்போது புதையல் எடுக்க ப+ஜைகள் செய்ய வேண்டும், அதற்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டு மேலும் 3 ஆயிரம் வாங்கியுள்ளனர். பின்னர் தனது கோவிலில் இருந்து ஒரு பித்தளை சிலையை எடுத்து புதைத்து வைத்துவிட்டார். இரவு 1 மணிக்கு ப+ஜை போடவேண்டும். அப்போது யாரும் அருகில் இருக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ப+ஜை போட்டு புதையல் எடுப்பதாக கூறி மந்திரவாதி உள்ளே தான் புதைத்து வைத்திருந்த சிலையை வெளியே எடுத்துள்ளார். பின்னர் வெங்கடேசன், சுப்பிரமணி ஆகியோரை அழைத்து தங்ககுண்டு சிலையாக மாறிவிட்டது என்று கூறி அவர்களிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த சிலையை எடுத்துக்கொண்டு நம்பாக்கத்தில் உள்ள ஆசாரி ஒருவரிடம் கொடுத்துள்ளனர். அதை பரிசோதித்த அவர் பித்தளை சிலை என்பதை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் சுப்பிரமணி, மந்திரவாதி மோகன் ஆகியோர் தன்னை ஏமாற்றிவி;ட்டதாக தெரிவித் திருந்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தன்ராஜ வழக்குப் பதிவு செய்து மந்திரவாதி மோகன், மணி என்ற சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 23 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, வேலக்காபுரத்தி;ல் சமீபத்தில் அம்மன்சிலை காணாமல் போய்விட்டது. அந்த சிலைதானோ இது என்று அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

hock: