Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. செயலாளர் பதவியும் சிறிலங்காவும்
#1
ஐ.நா. செயலாளர் பதவியும் சிறிலங்காவும்


கடந்த முதலாம், இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட விளைவுகளின் பலனாக, உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் அத்துடன், சர்வதேச மனித உரிமையையும் நிலைநாட்ட 1948ம் ஆண்டு உதயமானாதே ஐக்கிய நாடுகள் சபை. இதன் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஏழு செயலாளர் நாயகங்கள்;, இவ் அதி உயர்ந்த உலக நடுநிலை ஸ்தாபனத்தில் கடமையாற்றியுள்ளார்கள்.

தற்போதைய செயலாளர் நாயகமாகிய திரு. கோபி அணனின் சேவைக்காலம் 2006ம் மார்கழி மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கான நியமனத்தை, ஐ.நா பாதுகாப்பு சபையின் சிபாரிசில் பொதுச்சபை நியமிக்கும். இந்த நியமனம் பூகோளா அடிப்படையிலானது. இந்த ரீதியில், கோபி அனான் அவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதும், இப்பதவிக்கான அடுத்த நியமனம் ஆசிய கண்டத்திற்கே உரியதாக நம்பப்படுகிறது.

இதுவரையில் கடமையாற்றிய செயலாளர் நாயகங்கள் நோர்வே, சுவீடன், மியான்மார் (பார்மா), ஒஸ்திரியா, பேரூ, ஏகிப்த், கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்;. இதில் மியான்மாரை சேர்ந்த திரு. யூ.தாண்ட்; உதவி செயலாளார் நாயகமாக கடமையாற்றிய வேளையில், செயலாளர் நாயகமாக பதவி வகித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த திரு. டக் கமார் ஜொல்ட்; 1961ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமாணாதை தொடர்ந்து, யூ.தாண்ட்; அவர்கள் ஐ. நா. செயலாளர் நாயகமாக பதவி ஏற்றார்.

இந்த ரீதியில் யூ.தாண்ட் அவர்கள் ஆசியா கண்டத்திலிருந்து பதவி வகித்த முதலாவது ஐ.நா செயலாளர் நாயகமாக விளங்கினார். தற்போது ஆசியா கண்டத்தில் சூடுபிடித்துள்ள செயலாளர் நாயகத்திற்கான வேட்பாளர் நியமனம், ஆசியாவில் பல நாடுகளுக்கு இடையே பல சச்சரவுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆனால் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா, இவ் விடயத்தில் மிக மெனமாக இருக்கிறது. இதையிட்டு பலர் ஆச்சரியப்படுகின்றார்கள். சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, அமெரிக்கா அடுத்த செயலாளர் நாயகத்தை, ஆசிய நாட்டிலிருந்து எதிர்பார்கவில்லையாம். காரணம், அமெரிக்காவின் கைப்பொம்மையாக அண்மைக்காலங்களில் விளங்கி வரும் கிழக்கு ஜரோப்பாவிலிருந்தே, அடுத்த ஜ.நாவுக்கான செயலாளர் நாயகத்தை அமெரிக்கா விரும்புகின்றதாம். கிழக்கு ஜரோப்பாவிலிருந்து செயலாளர் நாயகத்திற்கான நியமனம், ஓர் வழியில் நியாயமானதாயும் கூறப்படுகிறது. காரணம், மிக அண்மைக்காலங்களில் கிழக்கு ஜரோப்பா ஓர் தனித்துவம் கொண்ட ப+கோளப்பிரிவாக ஜக்கிய நாடுகள் செயற்பாடுகளின் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது இப்படியாக இருக்க, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் திரு. லக்ஸ்மன் கதிர்காமர் கடந்த டிசம்பர் மாதம், திரு ஜயந்த தனபாலா சிறிலங்காவின் சார்பில் ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவ்வேளையில், சிறிலங்கா இந்த அதியுயர்ந்த நடுநிலையாளரின் பதவியை அடைய தகுதியுள்ளதா என்பதை நாம் ஆராய்வது மிக அவசியம். அப்படியாக ஆராயுமிடத்தில் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகைள், சிறிலங்கா ஜக்கிய நாடுகள் சபை மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் கௌரவம், அத்துடன் இப் பதவிக்கு போட்டியிட நியமிக்கப்பட்ட வேட்பாளர் ஜயந்த தனபாலா பற்றி, தனித்தனியாக பார்ப்பது சாலச்சிறந்தது.

சிறிலங்கா நிலைமைகள்

இலங்கை தீவான சிறிலங்காவில், இருபது வருடத்திற்கு மேலாக இரத்தக்களரிகள் கொண்ட இன ரீதியான மாபெரும் யுத்தம், இத்தீவில் வாழும் தேசிய இனமான தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிறிலங்கா ஏற்க மறுத்ததினால் ஏற்ப்பட்டது. இதன் விளைவாக இத்தீவில் 79 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். அதேவேளை 13 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டுமுள்ளனர். இவற்றின் காரணமாக எட்டு லட்சத்துக்கு மேலான தமிழ் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், ஐந்து லட்சத்துக்கு மேலானோர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியும் உள்ளனர்.

ஜ.நா. மீதான கௌரவம்!

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை பார்த்து சகிக்க முடியாத ஜக்கிய நாடுகசபை, இதன் செயலாளர் நாயகங்கள,; சர்வதேச அரச சார்பற்ர நிறுவனங்கள் கண்டனங்களை தெரிவித்த காரணத்திற்காக, சிறிலங்கா அரசினால் கௌரவக் குறைவாக நடத்தப்பட்டும் இம்சிக்கப்பட்டனர்.

1. 1995ம் ஆண்டு ய+லை மாதம் நவாலித்தேவாலயப் படுகொலையை இட்டு செய்தி வெளியிட்ட செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.

2. 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில், பாடசாலையில் வைத்து சிறுபிள்ளைகளை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்த ஜக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார ஸ்தாபனம், சிறிலங்கா அரசினால் எச்சரிக்கப்பட்டது.

3. 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாத இடப்பெயர்வையிட்டு இட்டு தனது கருத்தை வெளியிட்ட ஜ.நாவின் செயலாளர் நாயகம் திரு. பூட்டஸ் காலி சிறிலங்காவினால் இம்சிக்கப்பட்டார்.

4. 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஓர் படுகொலையையிட்டு அறிக்கை வெளியிட்ட ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை, 'உங்கள் வேலை, மலேரியா தொற்றுநோய் உலகில் பரவாமல் பார்ப்பதே. அதை விட்டுவிட்டு, எங்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிடாதீர்கள்." என்று சிறிலங்காவினால் அவமானப் படுத்தப்பட்டார்கள்.

5. கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவிற்கு மனிதாபிமான விஜயத்தை மேற்கொண்ட ஜ.நா செயலாளர் நாயகம் திரு. கோபி அனானின் மனித உரிமையே சிறிலங்காவில் பறிபோனது இங்கு குறிப்பிடத்தக்கது. செயலாளர் நாயகம் அவர்கள,; தனது கடமையை சுகந்திரமாக செய்யும் உரிமையை மறுத்த பெருமை சிறிலங்காவிற்கே உரியது.

இப்படியாக பல தடவை சிறிலங்காவினால் கௌரவ குறைவாக நடத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், இம்சிக்கப்பட்ட அதே நிறவனத்திற்கு சிறிலங்கா தற்போது தனது வேட்பாளரை முன்வைப்பது பெரும் வேடிக்கையானது.

யார் இந்த வேட்பாளர்?

சிறிலங்காவினால் ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிட நியமிக்கப்பட்ட திரு. ஜயந்த தனபால ஒர் முதிர்ந்த இராஜதந்திரியாக இருந்தாலும், இவர் தற்பொழுது சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திற்கு பொறுப்பாளராகவும், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்காவின் ஆலோசகாராகவும் பதவி வகிக்கிறார்.

அதாவது, ஓர் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை மறுத்து, அவ்வினத்தை கொன்று குவித்த அரசின் பங்காளராக திரு. ஜெயந்த தனபால உள்ளார். அத்துடன் வேடிக்கை என்னவெனில், இவர் பதவி ஏற்ற காலத்திலிருந்து இன்று வரை, இச்சாமாதானச் செயலகத்தினால் சமாதானதையோ, பேச்சுவார்தையையோ ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை.

மேற்கு நாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் அறிந்த உன்மை என்னவெனில், ஏதாவது ஓர் அரச சார்பற்ற நிறுவனம், இலங்ககைத் தீவில்; தமிழர்களின் தாயக ப+மியான வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை, சர்வதேச அரங்குகளில் எடுத்துக் கூறுவார்களேயானால், உடன் அந்த அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா அரச பிரதிநிதிகளினால் பல விதங்களில் பயமுறுத்தப்படுவதும,; இம்சிக்கப்படுவது வழக்கம்.

இந்த ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜெனிவாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம், சிறிலங்கா அரச பிரதிநிதிகளினால் பயமுறுத்தப்பட்டனர். இந்த பயமுறுத்தல் நடைபெற்று சில மாதங்களின் பின்னர், தற்போது ஜ.நா. செயலாளர் நாயகப் பதவிக்கு போட்டியிடவுள்ள திரு ஜெயந்தா தனபால, இந்த அரசசார்பற்ற நிறுவனத்தின் கௌரவ தலைவராக நியமனம் பெற்றார். அன்றிலிருந்து இந்த அரச சார்பற்ற நிறுவனம் வடக்கு கிழக்கின் நிலைமைகள் பற்றி; எடுத்துரைப்பதையும் நிறுத்தி விட்டார்கள். நியூயோhக்;;;கில் பல முக்கிய புள்ளிகளுக்கு சிறிலங்காவின் இருபது வருடகால யுத்தம் பற்றி கூறும் வேளைகளில், இது பயங்கரவாதத்தினால் உருவான போராக இவர்களினால் கூறப்பட்டதுடன், இப்போருக்கு தமிழரே காரணம் என கூறப்;பட்டது தற்போது உறுதியாகிறது.

மேற்கூறிய விடயங்களைக் கொண்டு நாம் ஊகிக்கக்கூடியது என்னவெனில், சிறிலங்காவில் சமாதானத்தையோ, சமாதானப் பேச்சுவார்த்தையோ முன்னெடுக்க முடியாத தனபால, உலக சமாதானத்துக்கு உறுதியான ஸ்தாபனமான ஜ.நா வுக்கு செயலாளராக வர முயற்சிக்கின்றார்.

சிறிலங்காவிலேயே மனித உரிமை மீறலுக்கு பரிகாரம் காண முடியாத அரசு, ஜ.நாவையே கௌரவக்குறைவாக நடத்திய அரசு, தனது சுயலாபங்களை மனதில் கொண்டு திரு ஜயந்த தனபாலாவை இப் பதவிக்கு போட்டியிட முன்மொழிந்துள்ளது.

இலங்கைத் தீவில் பிறந்தவன் என்ற வகையில், ஜயந்த தனபால ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை மட்டுமல்ல, இவர் செயலாளர் நாயகமாக அமர்வதையே விரும்ப வேண்டியவனாக இருந்தும், சர்வதேச மனித உரிமையையும், உலக சமாதானத்தையும் அத்துடன் பாதுகாப்பையும்; மனதில் கொண்டு, சிறிலங்காவோ தனபாலவோ இப்பதவிக்கு தற்போதைய சூழலில் தகுதி அற்றவர்கள் என்பதை தெளிவாக காணுகிறேன்;.

<b>(ச.வி.கிருபாகரன், பொதுச் செயலாளர்,
தமிழர் மனித உரிமைகள் மையம், பிரான்ஸ்)
மே 2005</b>

நன்றி:தமிழ்நாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)