Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீர்
#1
பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீர்: புலிகளுக்கு நம்பிக்கை இழந்து விட்டது என்கிறார் எழிலன்
09-06-2005

(திருமலை நிருபர்)
ஜனாதிபதி சந்திரிகா அமைக்கப் போவதாகக் கூறும் பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீருக்குச் சமமானது. எனவே பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படும் அதன் மூலம் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என இல்லாமல் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் நேரடியாக உதவ வேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் சேவை புரியும் சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளை சம்பூரில் உள்ள அரசியல் பணிமனையில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது இந்த வேண்டுகோளை விடுத்தார் எழிலன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- சுனாமிப் பொதுக் கட்டமைப்பு நிறுவப்படும் என்பது பகற்கனவு அதில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த நம்பிக்கை இழந்து விட்டது. ஏனெனில் புத்த பிக்குகள் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கிவிட்டனர்.

பண்டா - செல்வா ஒப்பந்தந்துக்கு நடந்த கதி இதுதான். தற்போது பொதுக்கட்டமைப்பு விவகாரத்தில் ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறினாலும் புத்த பிக்குகளின் தலையீடு அதிகரிக்கும் பட்சத்தில் அது கைவிட வேண்டிய நிலைக்கே வரும் எனக் குறிப்பிட்டார் எழிலன்.

சுனாமித் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக, நிரந்தர வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபடும் நீங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் கட்டடப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் தடைவிதிக்கின்றனர். இச்செயற்பாடானது மக்களை மீண்டும், மீண்டும் துன்புறுத்தும் நிலைக்கு உள்ளாக்குகின்றது என்றும் குறிப்பிட்டார்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)