06-27-2005, 09:49 AM
<b>வெளிநாடுகளில் கட்சி நடவடிக்கையை விஸ்தரிக்க கடைத்தொகுதிகளில் நிதி சேகரிக்கும் ஜே.வி.பி.யினர்</b>
சர்வதேச ரீதியில் தமது கட்சி நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியினர் பிரான்ஸ் நாட்டில் பிரபல கடைத் தொகுதிகளில் தமது அரசியல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸில் தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் கஸி டு நோர்ட் மற்றும் லா சப்பல் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையர்கள் சுமார் 10,000 பேர் பொருட்கள் கொள்முதல் செய்யச் செல்லும் கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமது கட்சிப் பத்திரிகையை அவர்களுக்கு வழங்குகின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் எமது பலத்தை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் எமது கிளைக் காரியாலயங்களில் உறுப்பினராகுங்கள் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.
இம் மக்களுடன் லாவகமாக உரையாடும் இவர்கள் அவர்களிடம் நிதி சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். லா சப்பல் நகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று திரளும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு செப்டெம்பர் மாதத்திலும் நடத்தும் விழாவில் ஜே.வி.பி.யினர் அண்மைக் காலமாக கலந்து கொள்கின்றனர்.
சிறுபான்மை சமூகத்தவர்களான தமிழர்கள் பற்றிக் கேட்கும் போது இவர்கள் இலகுவாக தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. தமிழர்களின் மேல்மட்ட மக்களே அரசியல் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவருகின்றனர்.
பிரபல தொழிற்சங்கமான `சிஜிரி' என்ற அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்யப்படும் மே தின நிகழ்வில் இதுவரை சுமார் 15 ஜே.வி.பி. உறுப்பினர்கள் பங்குபற்றி வந்தனர். எனினும், கடந்த முறை நிகழ்வில் 20-25 ஜே.வி.பி. உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்
நன்றி தினக்குரல்..

[b]
,,,,.
,,,,.

:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&