Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கே போகுது திரையுலக நடிகைகள் வாழ்வு..!
#1
<b>நடிகர் சதீஷ்டன் விரைவில் திருமணம் சீதா </b>

<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/Seetha200.jpg' border='0' alt='user posted image'>

டிவி நடிகர் சதீஷை விரைவில் திருமணம் செய்யப்போவதாக நடிகை சீதா அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகர் சதீஷûக்கும், நடிகை சீதாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சீதாவிடமிருந்து பார்த்திபன் விலகினார். இருவரும் விவாகரத்தும் பெற்றனர்.

இந் நிலையில் நடிகர் சதீஷûக்கு "காதல் வளர்த்தேன்' படத்தில் சீதா வாய்ப்பு கேட்டதாகவும், முதலில் வாய்ப்பு தருவதாக கூறி விட்டு பின்னர் தர மறுத்ததால், இயக்குனர் கலா புதியவனுக்கும், சீதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை ஆபாச வார்த்தைகளால் கலா புதியவன் திட்டியதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதா புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந் நிலையில், தனக்கும், கலா புதியவனுக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்து விட்டதாக சீதா கூறினார்.மேலும் நடிகர் சதீஷûக்காக தான் வாய்ப்பு கேட்கவில்லை என்றும் சீதா கூறினார்.

இதுதொடர்பாக சீதா கூறுகையில், நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை. வாய்ப்புகள் தான் என்னைத் தேடி வந்துள்ளன. அதேபோல யாருக்காகவும் நான் சிபாரிசு செய்வதில்லை. காதல் வளர்த்தேன் படத்திற்கு இயக்குனர் கலா புதியவனையே நான் தான் சிபாரிசு செய்தேன்.

கலா புதியவனின் சொந்த பெயர் சீனிவாசன். இந்தப் பெயரில் தான் அவரை நான் அழைப்பேன். என் கையினால் அவருக்கு சோறு போட்டிருக்கிறேன். டைரக்டராக முடியவில்லையே என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு நான் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்.

காதல் வளர்த்தேன் தயாரிப்பாளர் ஹயாத் என் குடும்ப நண்பர் என்பதால் நான் சொன்னதும் கலா புதியவனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அப்படி இருக்க நான் நடிகர் சதிஷýக்கு சிபாரிசு செய்வதாக வெளியான தகவலில் சற்றும் உண்மை இல்லை. அவருக்கு சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காதல் வளர்த்தேன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள்.

4 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அட்வான்ஸும் கொடுத்தார்கள். பின்னர் திடீரென 15 நாட்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். ஆனால் ஒப்பந்தம் செய்தபடி 4 நாட்கள் மட்டும் தான் நடிப்பேன். அதற்கு மேல் நடிக்க முடியாது என்று கூறினேன்.

அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் கலா புதியவன், தொலைபேசியில் ஆபாசமாக பேசி திட்டினார், மிரட்டினார்.

இதனால் நான் போலீஸில் புகார் செய்தேன். இதனால் பயந்து போன கலா புதியவன் சமரசத்திற்கு வந்தார். இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து சமரசம் நடந்தது. எனது தம்பியை என் சார்பில் அங்கு அனுப்பினேன். அங்கு இயக்குனர் சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறினார்.

இந் நிலையில் நடிகர் சதீஷை 2வது திருமணம் செய்யப்போவதாக சீதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சதீஷை நான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இதற்கு எனக்கு சிறிது டைம் வேண்டும். சதீஷ் குடும்பம் அவரை விட்டுப் பிரிந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. முறைப்படி அவர் விவாகரத்து வாங்கினாரா என்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் உறுதி செய்த பின்னர் நானும் சதீஷûம் திருமணம் செய்து கொள்வது குறித்து முறைப்படி அறிவிப்பேன் என்றார் சீதா.

<b>thatstamil.com</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
[b][size=18]
Reply
#3
Quote:எங்கே போகுது திரையுலக நடிகைகள் வாழ்வு..!
அதுக்கு ஏன் சனம் கவலைப்படுது. நடிக நடிகைகள் என்றா அப்படித்தானாக்கும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
tamilini Wrote:
Quote:எங்கே போகுது திரையுலக நடிகைகள் வாழ்வு..!
அதுக்கு ஏன் சனம் கவலைப்படுது. நடிக நடிகைகள் என்றா அப்படித்தானாக்கும். :wink:

இல்ல அவையள தங்களுக்கு உதாரணமா ஆக்கிறதும்..அவையின்ர மூஞ்சியையே..தங்களுக்கு கற்பனை செய்யுறதும்..அவையைப் போலவே நடக்க உடுக்க நினைக்கிறதும் என்று...பல வகையில அவையின்ர பாதிப்பு சமூகத்தில இருக்கேக்க..உதுகளும் வராதோ...?? அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஆமா அவை நித்திரை கொள்றதில இருந்து.. கால் சீட்டிற்கு சண்டை போடுறது வரை. செய்தியாப்போட.. பத்திரிகைகள் இருக்கு. அதை கொப்பி பண்ணிப்போட உங்கள மாதிரி ரசிகர்கள் இருக்கினம். பின்ன.. எல்லாருக்கம் இந்த செய்தி மிக முக்கியமாச்சே.. அவை பின்பற்றுவினம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:ஆமா அவை நித்திரை கொள்றதில இருந்து.. கால் சீட்டிற்கு சண்டை போடுறது வரை. செய்தியாப்போட.. பத்திரிகைகள் இருக்கு. அதை கொப்பி பண்ணிப்போட உங்கள மாதிரி ரசிகர்கள் இருக்கினம். பின்ன.. எல்லாருக்கம் இந்த செய்தி மிக முக்கியமாச்சே.. அவை பின்பற்றுவினம். :wink:

செய்தியா இருந்திச்சு...செய்தியாப் போட்டம்...இதில என்ன ரசிகர்...ரசிப்பு..! இதை இப்ப இங்க போடைல்லைனா..பார்க்காயள் போல...இப்படி எத்தினை பேர் கிளம்பி இருக்கிறியள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Quote:செய்தியா இருந்திச்சு...செய்தியாப் போட்டம்...இதில என்ன ரசிகர் என்ன ரசிப்பு..! இங்க இதை இங்க போடைல்லைனா..பார்க்காயள் போல...இப்படி எத்தினை பேர் கிளம்பி இருக்கிறியள்...!

ஆமா செய்தியா இருந்திச்சு செய்தியாப்போட்டியள். நல்லம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
நக்கல்...! பாருங்களன் உது சினிமாப் பைத்தியங்களுக்கு உதாரணமா ஆகுதா இல்லையா என்று..நாளைக்கு அப்படியும் ஒரு செய்தி வராட்டி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:பாருங்களன் உது சினிமாப் பைத்தியங்களுக்கு உதாரணமா ஆகுதா இல்லையா என்று..நாளைக்கு அப்படியும் ஒரு செய்தி வராட்டி...!
அப்படியாங்க அப்ப வரும்.. செய்தியாப்பாத்ததை செய்தியா எல்லாருக்கும் சொல்லுங்க.. செய்தியா எடுப்பாங்க. செய்தியா செய்வாங்க.. சரியாங்க. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
tamilini Wrote:
Quote:பாருங்களன் உது சினிமாப் பைத்தியங்களுக்கு உதாரணமா ஆகுதா இல்லையா என்று..நாளைக்கு அப்படியும் ஒரு செய்தி வராட்டி...!
அப்படியாங்க அப்ப வரும்.. செய்தியாப்பாத்ததை செய்தியா எல்லாருக்கும் சொல்லுங்க.. செய்தியா எடுப்பாங்க. செய்தியா செய்வாங்க.. சரியாங்க. :wink:

சொல்லுறமோ இல்லையோ..தேடி எடுத்திடுவாங்க...எங்களுக்கு கொஞ்சோண்டாலும் தெரியாதா...சினிமாப் பைத்தியங்களை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ஆமா ஆமா தெரியாதா என்ன.? சரிங்க அவை திருமணம் பண்ணிக்கட்டும்.. கால்சீட் கொடுக்கட்டும். ரசிகர்கள் விரும்பினா பின்பட்டுங்க. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
tamilini Wrote:ஆமா ஆமா தெரியாதா என்ன.? சரிங்க அவை திருமணம் பண்ணிக்கட்டும்.. கால்சீட் கொடுக்கட்டும். ரசிகர்கள் விரும்பினா பின்பட்டுங்க. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்லாத்தான் ஊக்கிவிக்கிறீங்க ரசிகர்களை...ம்ம்..என்ன விசிவாசமோ....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
சண்டை பிடிக்காதீங்க
நடிகை எண்டாலும் அது அவையின்ர தனிப்பட்ட வாழ்க்கை தானே
. .
.
Reply
#14
கணவர் மார் ஒழுங்காக இருக்கும் வரை இப்படியான அதிரடி முடிவுகள் தவிர்க்கப்பட முடியாதவை
ஆண்கள் மறுமணம் முடிக்க முடியும் என்றால் பெண்களும் செய்யலாம் தானே? :wink:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#15
Niththila Wrote:சண்டை பிடிக்காதீங்க
நடிகை எண்டாலும் அது அவையின்ர தனிப்பட்ட வாழ்க்கை தானே

அதை சமூகம் தனக்கு உதாரணம் ஆக்குதே...மேற்கிலும் கூட "Celebrities" இன் செல்வாக்கு என்பது சமூகத்தில் இன்னும் தாக்கம் செலுத்த வல்ல ஒன்றாகவே இருக்கிறது...! உதாரணத்துக்கு எல்லோருக்கும் தெரிந்த டயனாவை.. பல விடயங்களில் உதாரணத்துக்குக் காட்ட மேற்கிலும் ஆக்கள் இருக்கிறார்கள்...அவருடைய தனிப்பட்டை வாழ்வை ஆராய்ந்து அவர்கள் அதைச் செய்யவில்லை...மேலோட்டமாக அவரை நோக்கி உதாரணம் காட்டி தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள்..!

அதேபோல்.. தென்னிந்தியாவில் இலங்கையில் மலேசியாவில் சிங்கப்பூரில் தொலைக்காட்சி நிகழ்சிக்களை எடுத்தால் சமையல் குறிப்பு அழகுக் குறிப்பு குடும்ப வாழ்வியல் இப்படி அதிகமான விடயங்களுக்கு அட்வைஸர்களாக நடிகர் நடிகைகளைத்தான் போடுவார்கள்...சிறிய வயதில் இருந்தே அதைப் பார்த்து வருபவர்களுக்கு...தாங்கள் பார்க்கும் நடிகை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்வியல் பின்னணிகளை அறிய வேண்டிய அவசியம் அறியாமல்...அவர்களை உதாரணமாக்கிக் கொள்வதையே தவறென்று சொல்ல முடியாது...எங்களுக்குள் கூட இப்படியான பாதிப்புக்கள் இருந்திருக்கிறன... நாங்க ரீவில பார்த்து... நல்லவர்கள் என்று பல காலம் எண்ணியவர்கள்...பிறகு தனிப்பட அநாகரிகமானவர்கள் என்று அறிந்த போது...சில தாக்கங்கள் இருக்கவே செய்தன.... அப்படி எல்லோருக்குள்ளும் எழும்... சாதாரண மக்களுக்கு இது ஒரு உதாரணமாக..அவர்களின் சொந்த வாழ்வியலைப் பாதிக்கக் கூடிய வகையில் சென்றடையலாம்.. விஜய் சிகரட் குடிக்கிறார் என்று தன் காதலனுக்கு சிரகட் வாங்கிக் கொடுக்கும் காதலிகள் இல்லை எங்கிறீர்களா...இலங்கையிலையே கண்ணால கண்டம்.. அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள்...! அவர்களே அப்படிப் பாதிப்புக்களை சந்திக்கும் போது சாதாரண மக்களை இப்படியான செய்திகள் பாதிக்காது என்று எப்படி எண்ணுவது...! இதைச் சொல்வதே எங்கள் நோக்கம்...!

தமிழினி சண்டை எல்லாம் பிடிக்கல்ல...அவர் சொல்லுறார் நீங்கள் ஏன் இதைப்போடுறீங்கள் என்று... எங்களது கேள்வியும் அதுதான்..இப்படியான தனிப்பட்ட வாழ்வியல் பிறழ்வுகளுக்கு ஏன் விளம்பரம் என்று...! வந்த விளம்பரத்தை எனி மூடி மறைக்க ஏலாது...அதை வைச்சு அது தப்பான விளம்பரம் என்பதுதான் அவசியம்...சமூகத்தில் விழிப்புணர்வுக்கு....! சரியா தங்கையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
SUNDHAL Wrote:கணவர் மார் ஒழுங்காக இருக்கும் வரை இப்படியான அதிரடி முடிவுகள் தவிர்க்கப்பட முடியாதவை
ஆண்கள் மறுமணம் முடிக்க முடியும் என்றால் பெண்களும் செய்யலாம் தானே? :wink:

இப்படி எதிலும் ஏட்டிக்குப் போட்டி மனப்பான்மை வளர்ப்பதற்கு அல்ல ஆண் - பெண் சமூகவியல் சுதந்திரம் என்பது...பிரச்சனைகளின் மூலங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்க்க முயல வேண்டுமே தவிர அதை அப்படியே விட்டு விலகி ஓடி இன்னொரு பிரச்சனையை உருவாக்குவது...சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமன்றி...சமூகத்துக்கும் உதவாது...!

சமூகம் என்ற ஒரு கட்டமைப்புக்கு பகுத்தறிவுள்ள சிறப்பு விலங்காக மனிதனாகப் பிறந்த அனைவரும் மதிப்பளித்து அதை ஒரு நல்ல நெறியின் கீழ் வழிநடத்திச் சென்றால் மட்டுமே உயர்ந்த மனித முயற்சிகளையும் வெற்றிகளையும் விருத்திகளையும் மகிழ்சிகளையும் எப்போதும் சம்பாதிக்க முடியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
நன்றி குருவி அண்ணா
. .
.
Reply
#18
அதுவும் சரி தான்
இதுக்கு தான் சின்னப்பசங்க பேசகூடாதுனு சொல்றது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#19
சரி இப்ப சீதாவுக்கு திருமணம் செய்து வைக்கப் போறியளா? இல்லையா..? :wink:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)