07-08-2005, 05:39 PM
1970 களில் இலங்கை அரசு மன்னார் கடலில் பெற்றோலியம் எடுக்க 7 கிணறுகள் கிண்டியதும் பின்னர் அது காணக்கிடைக்காமல் கைவிட்டதும் யாவரும் அறிந்ததே
1974 இல் பாக்கு நீரிணையூடா இலங்கைக்கும் இந்தியாவிற்குமான எல்லை தீர்மானிக்கப்பட்டபோது அதில் கண்டுபிடிக்கப்படும் பெற்றோலிய வளம் பற்றிய தீர்மானமும் எட்டப்பட்டது
அதில்
Article 6
If any single geological petroleum or natural gas structure or field, or any single geological structure or field of any mineraldeposit, including sand or gravel, extends across the boundary referred to in Articles I and II and the part of such structure orfield which is situated on one side of the boundary is exploited, in whole or in part, from the other side of the boundary, the twocountries shall seek to reach agreement as to the manner in which the structure or field shall be most effectively exploited and themanner in which the proceeds deriving therefrom shall be apportioned.
என்று கூறுகிறது
தற்பொழுது இந்த பொற்றோலிய வளம் பற்றி எரிமலை - பங்குனி இதழில் வந்த கட்டுரை இதோ
மன்னார் வளைகுடாவில் மீண்டும் பெற்றோலியம் என்றது மீளவும் எழுச்சிபெறும் கருத்தாகிவிட்டது.
தி.தவபாலன்
மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வு இந்தியாவிடம் படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவின் பெற்றோலியத்தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய பார்த்துக் கொள்ளவேண்டும் என்று உடன்பாட்டுக்கமைய திருகொணமலை சீனன்குடா பெற்றோலியக்குதங்களை ஒயில் நிறுவனத்துக்கு ஸ்ரீலங்கா வழங்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக நோர்வே அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மன்னார் வளைகுடாவில் முதற் கட்ட ஆய்வுகளை செய்தன.இவற்றின் ஆய்வுகளில் பெற்றோலியம் இருப்பதற்கான ஆரம்ப கட்ட சாத்தியப்பாடான பெறுபேறுகள் பெறப்பட்டன.தற்போது இரண்டாம் கட்ட ஆய்வுகள் ரிஎஸ்ஜி நொபெக் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்தக்கட்டத்தில் ஸ்ரீலங்கா பெற்றோலியத்துறையில் இந்தியாவின்ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது.அதன் முதல்க்கட்டமாக திருகோணமலை சீனன்குடா குதம் குத்தகை விவகாரம் அமைந்துள்ளுது.கடந்த ஆண்டு நவம்பரில் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய அகழ்வு இந்தியாவிடம் கையளிக்கப்படுவத தொடர்பான நிலைப்பாடு உருவானது.இது தொடர்பான உடன்பாட்டுக்கான தயார்படுத்தல் ஆரம்பமானது.கடந்த ஆண்டு டிசம்பரில் ஸ்ரீலங்காவுக்கான இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வு மற்றும் அகழ்வு தொடர்பாக ONGC VIDES LTD என்ற இந்திய நிறுவனத்தின் முன்மொழிவு ஒன்றைஸ்ரீலங்கா சக்தி மின்சக்தி அமைச்சர் சுசீல் பிரேம ஜயந்தவிடம் கொடுத்தார்.இந்த நிறுவனத்தின்திட்டப்படி பெற்றோலிய ஆய்வு 7 ஆண்டுகளில் 3 கட்டங்களாக நடைபெறும்.
நிரூபமாராவ் தாம் மன்னார் வளைகுடர்பெற்றோலிய ஆய்வில் ஈடுபடுவது தொடர்பாக அக்கறையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.தமது நிறுவனம் இது தொடர்பாக ஸ்ரீலங்கா பெற்றோலிய வள அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தற்போதைய சந்திரிகா அரசுக்கு முன்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போதே இந்தியா இது தொடர்பான அக்கறையை செலுத்தத்தொடங்கிவிட்டது.ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்து விட்டது.
2000ம் ஆண்டு இந்த ஆய்வுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிவழங்க உடன்பாடு செய்திருந்தது.
இதன் பின் T.S.G Nopec என்று நிறுவனம் பெற்றோலிய ஆய்வுக்கான உடன்பாட்டை ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் செய்து கொண்டது.அது தனது முதல்க்கட்ட ஆய்வையும் செய்தது.அடுத்த கட்டமாக ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ஹ_ஸ்டன்-டென்வர் நிறுவனத்துடனும் லண்டன் சோல்ற்லேக் சிற்றி நிறுவனத்துடனும் அடுத்த கட்ட ஆய்வுக்காக உடன்பாட்டை செய்ய முயன்றது.இது சந்திரிகாவின்முதல் ஆட்சிக்காலத்தில் நடந்தது.அதன் பின் ரணிலின் ஆட்சி.
அப்போது இந்தியா முயன்றது.அதனை ரணில் அரசு நிராகரித்தது.இப்போது மீளவும் இந்தியா நுழைகின்றது.
இதன்பின் கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி ஸ்ரீலங்கா அரசுத்தலைவரின் ஆலோசகர் மனோ தித்தாவலவிடம் தன்முன் மொழிவை கடைசியாக இந்தியத்தூதுவர் கையளித்தார்.
இந்த மன்னார் வளைகுடா கடற்பகுதி மன்னார்த்தீவின் தென்பகுதியில் தமிழர்தாயக கடல் எல்லைக்குள் அதிகமாக உள்ள கடற்பரப்பில் உள்ளது.இதன் ஒரு பகுதி ஸ்ரீலங்கா எல்லைக்கடற்பகுதியில் வருகின்றது.
இப்போது இந்தியாவின் முன்மொழிவை சந்திரிகா ஏறபாரானால் அவர்ஆசிய அபிவிருத்தி வங்கி T.S.G Nopec ஆகிய நிறுவனங்களுடான பெற்றோலிய ஆய்வு தொட்hபான உடன்பாட்டை மீறியதாகிவிடும்.இதேவேளை சந்திரிகாகடந்த ஆண்டு நவம்பரில் ஈரானுக்கு சென்று மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வுக்கு ஈரான் உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இப்போத மன்னார் வளைகுடா பெற்றோலிய ஆய்வு அகழ்வுக்காக அமெரிக்கா,பிரிட்டன்,சீனா ஆகிய நாடுகள் தமது ஆர்வத்தை காட்டியுள்ளன.இதற்குள் தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்ரேலியாவும் அதிக அக்கறையை காட்டி நிற்கின்றது.
இப்படியாக மன்னார் வளைகுடா பெற்றோலியத்துக்கான ஒர போட்டி மறைமுகமாக தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. தமிழர் தாயக எல்லைகடற்பரப்புக்குள் வரும் இந்த மன்னார் வளைகுடாப் பிராந்தியம் இன்று பெற்றோலியம் தொடர்பாக
சர்வதேச போட்டிக்குள் அகப்பட்டுள்ளது. தமிழ்தாயக வளங்களை ஸ்ரீலங்கா அரசு சர்வதேச நாடுகள் நிறுவனங்களிற்கு வழங்குவதில் ஆர்வமாக இருக்கின்றது.
இது ஒரு அரசியலின் பாற்பட்ட நிலைப்பாடாகவே இருக்கிறது.இன்றுள்ள உலக அரசியல் ஒழுங்கு பெற்றோலிய வளததை மையமாக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.போர்களும் அதற்காகவே நடக்கின்றன.இந்த வகையில் திருகோணமலை பெற்றோல் குதம் மன்னார் வளைகுடா பெற்றோலிய வளம் என்பவற்றை ஸ்ரீலங்கா அரசு அரசியலின் பாற்பட்டே நகர்த்துகின்றது. பெற்றோலியத்தை மையமாகக் கொண்டே இன்றைய உலக அரசியல் நகர்கின்றது.
எரிமலை - பங்குனி 2005