07-10-2005, 12:32 PM
இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் முத்தலிப்பின் கொலை தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூவினத்தையும் சேர்ந்தவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்கள் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் கூறும் தகவல்கள் உண்மையானால், எதிர்காலத்தில் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென படைத்தரப்பு பெரும் கவலை கொண்டுள்ளது.
பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் முஸ்லிம் ஒருவரும் சிங்களவரொருவரும் கைது செய்யப்பட்டனர். இறுதியாகக் கடந்த வியாழக்கிழமை, சிங்களப் பத்திரிகையாளரொருவர் கைது செய்யப்பட்டார்.
இவர்களில் இருவர் பெண்கள். அதிலொருவர் சிங்களப் பெண். மற்றவர் தமிழ்ப் பெண். இவர்கள் அனைவரும், மேஜர் முத்தலிப்பின் கொலைக்காக புலிகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர்.
பெருந் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களில் சிலர் இராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளையும் ஏற்படுத்தி புலிகளுக்காக உளவு பார்த்து வந்தது, விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
பெருந்தொகைப் பணத்துக்காக இராணுவ இரகசியங்களைக் கூட புலிகளுக்கு வழங்குமளவிற்கு இராணுவ அதிகாரிகள் தயாராயிருப்பது இதன் மூலம் தெரிய வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ,முத்தலிப்பின் கொலைக்காக மூவினத்தையும் சேர்ந்தவர்கள் உளவு பார்த்தது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேநேரம், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் இன்னும் எவ்வளவோ இரகசியங்கள் இதற்குள் புதைந்து கிடக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இரத்மலானையில் விமானப் படைத்தளமுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியுமுள்ளது. இங்கு அடிக்கடி வரும் முத்தலிப்பு பற்றி உளவு பார்க்க, இந்தப் பாதுகாப்பு கல்லூரியின் எல்லையிலுள்ள பேக்கரி ஒன்றின் முகாமையாளரைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனராம். புதிய பேக்கரி ஒன்றை உருவாக்க பல இலட்சம் ரூபா தருவதாக இவருக்கு உறுதியளிக்கப்பட்ட அதேநேரம், இரத்மலானையில் இவரது வீட்டில் தமிழ் இளைஞர்கள் சிலரும் தங்க வைக்கப்பட்டிருந்த போதே அவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
முத்தலிப்பின் நடமாட்டத்தை இவர் மூலம் கண்காணித்ததுடன் இவரது செல்வாக்கைப் பயன்படுத்தி இராணுவ அதிகாரிகள் சிலருடனும் புலிகள் நெருங்கிய நட்பை ஏற்படுத்தி அங்குள்ள இராணுவத்தினரின் உணவுச் சாலைக்கும் சென்று, அவர்கள் பலருடனும் சேர்ந்து மதுவருந்தி அவர்களிடமிருந்தும் இராணுவ இரகசியங்களைப் புலிகள் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ அதிகாரிகளுடனான தொடர்பில், முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரது மகனும் (இராணுவக் கப்டன்) சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். முத்தலிப்பின் கொலைக்கு இவரும் உடந்தையாக இருந்ததுடன் இராணுவ இரகசியங்களையும் இவர் புலிகளுக்கு வழங்கியுள்ளாராம்.
முதலில் இரத்மலானையில் இராணுவ ஆட்லறிப் பிரிவில் கடமையாற்றிய இவர் பின்னர் பொலநறுவை மாவட்டம் மின்னேரியாவிலுள்ள இராணுவத் தளத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இரத்மலானையிலும் மின்னேரியாவிலும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் (தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்) இவரை அடிக்கடி சந்தித்து பல்வேறு தகவல்களையும் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு பல இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், கிளிநொச்சியிலிருந்து புலிகளின் கொழும்பு வருகைக்கும் அவர்கள் கொழும்புக்குள் முக்கிய ஆயுதங்கள் சிலவற்றைக் கடத்தவும் உதவியதாகத் தேடப்பட்டு வந்த சிங்களப் பத்திரிகையாளரொருவர் வியாழக்கிழமை இறக்குவானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது வாகனத்தில், "Press' என்று அச்சிடப்பட்ட அட்டையைப் பொருத்தி, புலிகளை வன்னிக்கும் கொழும்புக்குமிடையில் ஏற்றியிறக்கவும் ஆயுதங்களைக் கடத்தவும் உதவி வந்ததாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
இவருக்கும் புலிகள் பல இலட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழர்களை விட நான்கு சிங்களவர்களுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் பெருந்தொகைப் பணம் இவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதிலும் படையினருடன் சேர்ந்து இயங்குவதிலும் பல தமிழ்க் குழுக்கள் போட்டி போட்டு செயற்படுகின்றன. பணம், பொருள், சுகபோக வாழ்க்கை, பழிவாங்கல் என பல்வேறு காரணங்களுக்காகவும் இந்தக் குழுக்கள் படைத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றன.
இனத்தின் விடுதலைக்கு எதிராகவும் சொந்த இனத்திற்கு விரோதமாகவும் செயற்படும் இவர்களைப் பயன்படுத்தி எதுவும் செய்ய முடியுமெனப் படையினருக்கு நன்கு தெரியும்.
தங்களை மாற்றுக் குழுக்களென இவர்கள் அழைத்துக் கொண்டாலும் இவர்களது முழு நோக்கமும், தற்போது களத்தில் நிற்கும் புலிகளை அழித்து விடுவதற்காக அவர்களை படைத் தரப்புக்கு காட்டிக் கொடுப்பதுதான். இவர்கள் போராளிகளையே காட்டிக் கொடுப்பவர்களென்பதால் இவர்கள் இன விடுதலைக்காக எதுவுமே செய்யாதவர்களென்பதையும் படைத்தரப்பு அறியும்.
கடந்த இரு சகாப்த காலப்போரில், இவ்வாறான பலர் கொல்லப்பட்டபோதிலும் இவ்வாறானவர்களின் எண்ணிக்கையில் குறைவேதுமில்லை. இந்த வரிசையில் தற்போது கருணா குழுவும் சேர்ந்துள்ளது. வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைத்தது போல் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் இயக்கத்திற்குள் கிளர்ச்சி செய்து வெளியேறியவர் கருணா.
ஆனாலும், அவரது கிளர்ச்சி அடக்கப்பட்டு விடவே, தற்போது படைத்தரப்புடன் சேர்ந்தியங்கும் கும்பலமாக அவர் மாறிவிட்டார். கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளும் நிழல் யுத்தத்தில், இவர்களின் பெயரைப் பயன்படுத்தியே புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில்தான் புலிகளுக்கெதிரான புலனாய்வுப் போரின் முக்கிய புள்ளியும், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தும் படையணியின் பிரதம கர்த்தாவுமான மேஜர் முத்தலிப் அண்மையில் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டார். இவரது கொலை படைத்தரப்புக்கு மட்டுமல்லாது அரசுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிழக்கில் தொடரும் நிழல் யுத்தத்தை வடக்கில் தொடர இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருந்த போதே முத்தலிப் கொலை செய்யப்பட்டார். போர் நடைபெற்ற காலப் பகுதியில் வன்னிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தும் படையணியை வழி நடத்தியவர் இவரே. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இவ்வாறான தாக்குதல்களுக்கு வழி காட்டிய இவர், கொழும்பு தலைநகரில் தனது வீட்டுக்குச் சமீபமாக வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இவரைக் கொல்வதற்கான திட்டத்திற்கு சிங்களவர்கள் பலரும் இராணுவத்திற்குள் இருந்தவர்களும் உதவி செய்ததாக தற்போது வெளியாகும் தகவல்களால் படைத்தரப்பு பேரதிர்ச்சியடைந்துள்ளது. எவ்வாறான பலவீனங்களைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக படையினர் தமிழர்களைப் பயன்படுத்தினார்களோ அந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தி தங்களுக்கெதிராக சிங்களவர்களைப் பயன்படுத்த புலிகள் தொடங்கி விட்டார்களா என்ற கேள்வியை படைத்தரப்பு எழுப்புகிறது.
புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் எப்படி தமிழ்க் குழுக்களை படைத் தரப்பு பயன்படுத்துகின்றதோ அப்படி படையினருக்கு எதிராக சிங்களவர்களைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால், படையினர் பற்றியும் அவர்களது நடமாட்டங்கள் பற்றியும் சாதாரண சிங்களவர்களை பணத்தின் மூலம் பயன்படுத்த முடியமென புலிகள் உணரத் தொடங்கி விட்டார்களா என்ற கேள்வியும் படையினர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
அதேநேரம், புலிகளிலிருந்து விலகியவர்களை அல்லது கருணா குழுவினரை அல்லது தமிழ்க் குழுக்களை படைத்தரப்பினர் தங்கள் முகாம்களில் வைத்துக் கொண்டே புலிகளுக்கெதிரான தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஆனால், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தங்களுடன் வைத்துக் கொண்டு படையினருக்கு எதிராக புலிகளால் செயற்பட முடியாது அது சாத்தியமுமில்லை. களநிலையும் அதற்குப் பொருந்தாது.
ஆனால், அவர்களை உளவுத் தகவல்களைப் பெறுவதற்காக புலிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது, முத்தலிப்பின் கொலை விசாரணைகள் மூலம் தெரிய வருவதை படைத் தரப்பு உணர்கிறது.
முத்தலிப் கொலை தொடர்பாக இவ்வளவு நடந்துள்ளதென்றால், இவ்வாறு மேலும் பல சிங்களவர்கள் புலிகளின் உளவாளிகளாகச் செயற்படலாமென்ற சந்தேகமும் படைத் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் படைமுகாம்கள், இராணுவ நிலைகள் மற்றும் படையினரின் அமைப்புகளுக்கு அருகிலிருப்போர் விடயத்திலும் சிரேஷ்ட படை அதிகாரிகள் தங்குமிடங்களுக்கு அருகிலிருப்போர் தொடர்பாகவும் படையினர் இனிமேல் மிக விழிப்பாகவேயிருப்பர்.
புலிகளைப் பொறுத்தவரை, அவர்களுடன் இருந்துகொண்டு எதிரிக்கு உளவு கூறுபவர்கள் என்று எவருமில்லை. அது சாத்தியமுமில்லை. ஆனால், புலிகளிலிருந்து விலகி அல்லது அங்கிருந்து தப்பியோடிச் சென்ற பின்னர் பணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேறு வாய்ப்புகளுக்காகவும் புலிகளைக் காட்டிக் கொடுப்பதென்பது சாதாரணம்.
ஆனால், இராணுவத்திற்குள் இருந்துகொண்டு புலிகளுக்கு தகவல் கொடுப்பதென்பது சாதாரணம். படையினரின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி முக்கிய இராணுவ இரகசியங்களை அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள முடியும். தற்போதுகூட அது நடப்பதாகவே முத்தலிப் கொலை விசாரணையை நடத்திவரும் பொலிஸார் கூறுகின்றனர்.
தமிழ்க் குழுக்களையும் உளவாளிகளையும் புலிகளுக்கெதிராகப் பயன்படுத்துவதற்கு அரசும், படையினரும் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகின்றனர். பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாவில் இது சாத்தியம். ஆனால், சிங்கள உளவாளிகளுக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுப்பதென்பது புலிகளுக்கு மிகவும் சிரமமானகாரியம்.
அவர்கள் ஓர் அரசல்ல. ஆனால், ஒரு அரசுக்கான கட்டமைப்பைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதால் அவர்களும் குறிப்பிட்டளவில் பணத்தை வசூலிக்கின்றனர். என்றாலும் உளவாளிகளுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்குவதென்பது கடினமான காரியம். எனினும் தற்போது அவர்கள் சிங்கள உளவாளிகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்களா என்ற கேள்வியை படைத் தரப்பினர் எழுப்புகின்றனர்.
இதிலொன்றை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரும்புலிகள் தினத்தையொட்டி புலிகளின் உளவுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் மிக முக்கிய விடயமொன்றை வலியுறுத்தியிருந்தார். `கரும்புலிகளின் தற்கொலையால் கிடைக்கும் வெற்றிகளை, நவீன தொழில்நுட்ப வளத்தாலும், நல்ல இராணுவ பலத்தாலும் பெறுவதற்காக, அதனைப் பொருளாதார பலத்தாலும் ஈட்டமுடியும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியதற்கு பல அர்த்தங்களுண்டு. தற்கொலைக் குண்டுதாரியாக, திறமை மிகு போராளி ஒருவரைப் பயன்படுத்துவதால், அந்தச் சம்பவத்துடன் அந்த போராளியும் அழிந்துபோகிறார். அதனை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்க முடியுமோ அந்தளவிற்கு தவிர்க்க வேண்டுமானால், புலிகள் நவீன தொழில்நுட்ப வளத்தையும், இராணுவ பலத்தையும் பெறவேண்டும். இதற்கு அவர்களுக்கு பெரும் பொருளாதார பலம் வேண்டும்.
முத்தலிப்பின் கொலையில் பணம் எவ்வளவு வேலைகளைச் செய்ததென்பதை தற்போது பொலிஸ் விசாரணைகள் காட்டுகின்றன. இல்லையேல் தற்போதைய சமாதானச் சூழ்நிலையில் கரும்புலி ஒருவரையல்லவா இதற்காக அனுப்பியிருக்கவேண்டும்.
இதேநேரம், இன்னும் எத்தனையோ காரியங்களுக்காக புலிகள் எத்தனை சிங்கள உளவாளிகளை தென்பகுதியில் பயன்படுத்துகிறார்களோ எனத் தெரியாது படைத்தரப்பு கலக்கமடைந்துள்ளது. இதனால் சிங்கள உளவாளிகள் குறித்து இனிமேல் சிந்திக்க வேண்டிய நிலைக்கு படைத் தரப்பு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இவ்வாறிருக்கையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளூடான புலிகளின் பாதுகாப்பான போக்குவரத்துத் தொடர்பாக புலிகள் விதித்த இருவாரகால அவகாசம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. இது குறித்து அரசு தரப்பு இதுவரை எதுவித பதிலையும் தெரிவிக்கவில்லை. அரசதரப்பின் பதிலுக்காக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு காத்திருக்கிறது.
புலிகளின் கோரிக்கை குறித்துப் பாதுகாப்பு அமைச்சு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்காததால் படைத்தரப்பு மீண்டும் தங்களுக்கிடையில் கூடி இது குறித்து சில தீர்மானங்களை எடுத்துள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியூடான புலிகளின் போக்குவரத்துக்கு எந்த வகையில் பாதுகாப்பளிக்க முடியுமென அவர்களது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தைப் படைத்தரப்பு அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபாலவிடம் கையளித்திருந்தது.
இது குறித்து ஜெயந்த தனபால சனிக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவிருந்ததார். இந்தக் கலந்தாலோசனையின் முடிவில் இதில் மாற்றங்களேதுமிருப்பின் அந்த மாற்றங்களோடு கண்காணிப்புக் குழுவிடம் படையினரின் தீர்மானங்கள் இன்று அல்லது நாளை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. படையினரின் யோசனையை புலிகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இல்லையேல், இரு வாரகாலக்கெடு முடிவடைய, போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து தாங்கள் விலகுவதாகக் கூறும் இரு வாரகாலக்கெடுவை புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தைக் கண்காணிப்புக் குழுவே கையாள்கிறது. புலிகளின் காலக்கெடு அவர்களுக்கு திருப்தியின்றி முடிவடையும் பட்சத்தில் நிலைமை மோசமடையலாமென்பதால் இந்த விவகாரத்தில் சிலவேளைகளில் நோர்வே அனுசரணையாளர்கள் தலையிடக்கூடும். தற்போதைய நிலையில் இந்த விவகாரமே புலிகளைப் பொறுத்தவரை முக்கியமாகவுள்ளது.
இந்த விவகாரத்திற்கு தீர்வொன்று எட்டப்படும் பட்சத்திலேயே அனைத்துவிடயத்திலும்
thinakural[/size][size=9]