Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகளின் வித்துடல்களுக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி
#1
திருகோணமலை மாவட்டம் செல்வ நாயகபுரத்தில் விடுதலைப் புலிகளின் அலு வலகம் தாக்கப்பட்டுஇ போராளிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண் டித்து நேற்று முழுநாளும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று பூரண கதவ டைப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
துக்கதினத்தை முன்னிட்டு வீதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. மஞ்சள்இ சிவப்புக் கொடிகளும் கட்டப்பட்டி ருந்தன. அனைத்து நடவடிக்கைகளும் அமைதியுடனும் சோகத்துடனும் இடம் பெற்றன.
உயிரிழந்த போராளிகளின் வித்துடல் களும் ஏனையவர்களின் புகழுடல்களும் மக்கள் அஞ்சலிக்காக நேற்று இராணுவக் கட் டுப்பாட்டுப் பிரதேசங்களில் வைக்கப்பட்டி ருந்தன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டு வந்து போராளிகளுக்குத் தமது இறுதி அஞ் சலிகளைச் செலுத்தினர். தேசிய துணைப் படை வீரர் சின்னவனின் (அனுசன் குலவீர சிங்கம் 6ஆம் வட்டாரம்இ சாம்பல்தீவு) வித் துட திருகோணமலையிலுள்ள விடுதலைப் புலிகளின் மாவட்ட அரசியல்துறை அலு வலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்தது.
லெப்டினன்ட் கேணல் டிக்கான் அல்லது வேங்கையின் (செபஸ்தியாம்பிள்ளை ஜெயச் சந்திரன்இ 6ஆம் வட்டாரம்இ பெரிய குளம்) வித்துடல் அவரது வீட்டில் மக்கள் அஞ் சலிக்காக வைக்கப்பட்டது.
2 ஆம் லெப்டினன்ட் இளம்புலியின் (தங்கராசா விஜேந்திரராசா) வித்துடல் 6ஆம் கட்டையில் அஞ்லிக்காக வைக்கப்பட் டுள் ளது.
நாட்டுப்பற்றாளர் பாபுவின் (முத்தையா கோணேஸ்வரன்இ அன்புவழிபுரம்)
புகழுடம்பு அன்புவழிபுரத்திலுள்ள அவ ரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.
நான்கு இடங்களிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
முற்பகல் 11 மணியளவில் நான்கு வித் துடல்களும் ஊர்வலமாக எடுத்துவரப்பட் டன. 6ஆம் கட்டையில் அவை இணைக்கப் பட்டு அங்கிருந்து ஒன்றாகக் கும்புறுப்பிட் டிக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கும் அவை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட் டன.
அங்கு அஞ்சலிக்கூட்டம் முடிந்ததும் வித் துடல்கள் ஊர்வலமாக நிலாவெளிஇ சல்லிஇ சாம்பல்தீவு ஆகிய இடங்கள் வழியாக மூன் றாம் கட்டையடிக்கு எடுத்துவரப்பட்டன. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைந் துள்ள இடத்திற்கு இட்டுச்செல்லும் எம்.ஸி. வீதியில் வைத்துப் பொலீஸார் வித்துடல் களை அவ்வழியாகக் கொண்டுசெல்லாது தடுத்தனர். அதனையும் மீறி மக்கள் வித்து டல்களோடு அதேவழியால் சென்று மூன் றாம் குறுக்குத்தெரு வழியாகப் பிரதான வீதியை அடைந்தனர்.
அங்கிருந்து பஸ்தரிப்பு நிலைய வீதி யைக் கடந்து டொக்யாட் வீதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வித்துடல்கள் முற்றவெளி மைதானத்தில் வைக்கப்பட்டன.
முற்றவெளி மைதானத்தில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஆர்.சம்பந்தனும்இ புலி களின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் இரகல் உரைகளை ஆற்றினர்.
அதன் பின் அங்கிருந்து சர்வதேச செஞ் லுவைச் சங்க வாகனங்களில் பிற்பகல் ஐந்து மணியளவில் போராளிகளினதும் துணைப் படை வீரரதும் வித்துடல்கள் சம்பூர் ஆலங் கேணி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைப் பதற்காக எடுத்துச்செல்லப்பட்டன.
நாட்டுப்பற்றாளர் பாபுவின் புகழுடல் இறுதிக்கிரியைகளுக்காக அன்புவெளிபுரத் தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
போராளிகள் உட்பட நால்வரினதும் கொலைகளைக் கண்டித்து மாவட்டத்தில் இன்று முழுக்கடையடைப்பு இடம்பெறவுள் ளது. திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை இந்தக் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத் துள்ளது.
நேற்றைய அஞ்சலி நிகழ்வுகளையொட்டி திருகோணமலை நகர வீதிகள் எங்கும் பொலீஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்புத் தீவிரப்படுத் தப்பட்டிருந்தது.

யாழிலும் துக்கம்

திருகோணமலையில் போராளிகள் உட் பட நால்வர் படுகொலை செய்யப்பட்டமைக் குக் கண்டனம் தெரிவித்து நேற்று யாழ். மாவட்டத்திலும் முழு அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்கள்இ பொது இடங்கள்இ வாகனங்கள் என்பவற்றில் கறுப்புக் கொடி கள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் வாழை களும் கட்டப்பட்டிருந்தன. யாழ். பஸ்நிலையம் உட்பட பல இடங்களில் ஒலிபெருக்கி மூலம் சோக கீதமும் இசைக்கப்பட்டது. uthayan
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)